மிருகாபிமானம்

cow2.jpg 

மனிதர்களே!
மாடுகளைக் கொன்று
உங்கள்
வயிற்றில் புதைக்காதிர்கள்

உங்களைவிட
பசுமாடு என்பது
பலமடங்கு உயர்ந்தது.

நீங்கள் தொட்டால் தீட்டு
உங்களைத்
தொட்டாலும் தீட்டு

பசுவின் பீ நறுமணம்
அதன் மூத்திரம் மங்களம்

மனிதர்களே
(தாழ்த்தப்பட்டவர்களே)
தேசிய ஒருமைப்பாட்டுக்கு
உதாரணம் போல்
இந்தியா முழுக்க
பரவலாக பல ஊர்களில்
உங்கள் உடமைகளை
கொளுத்தியிருக்கிறோம்.
உயிர்களைக் குடித்திருக்கிறோம்

உண்மையைச் சொல்லுங்கள்
உங்கள் மாடுகளை
நாங்கள் மாய்த்திருக்கிறோமா?

மனிதர்களே
(இஸ்லாமியர்களே)
பிரிவினையின் போதும் சரி
குஜராத்திலும் சரி
கற்பினியின் வயிறு கிழித்து
உங்கள் குழந்தையின்
உயிர் கிழித்தோம்

நெஞ்சில்
கை வைத்து சொல்லுங்கள்
உங்கள் கன்றுக்குட்டிகளை
நாங்கள் காயப்படுத்தினோமா?

மனிதர்களே
(பிற்படுத்தப்பட்டவர்களே)
மனிதர்களே
(பிற ஜாதிக்காரர்களே)
மனிதர்களைக் கொன்றாவது
மாடுகளைக் காப்பற்றுங்கள்.
                                                          -வே.மதிமாறன்
2002 தலித் முரசு

2 thoughts on “மிருகாபிமானம்

  1. நல்லாதான் இருக்கு!!!
    மிருகாபிமானம்.

  2. நல்ல கவிதை. புரிய வேண்டியங்களுக்கு புரிங்சா சரி.

Leave a Reply

Discover more from வே. மதிமாறன்

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading