Site icon வே. மதிமாறன்

அல்லாஜன் – இயேசுஜன் என்று அழைக்காமல் ‘ஹரிஜன்’ என்று ஏன் அழைத்தார் காந்தி?

தாழ்த்தப்பட்ட மக்களை காந்தி அரிஜன் என்று அழைத்து சரிதானே?

-டி. கார்த்திகேயன், திருச்சி.

ஹரிஜன் என்பதை கடவுளின் குழந்தை என்று மொழிபெயர்க்கிறார்கள் அது தவறு. கடவுளின் குழந்தை என்றால் எந்த மதத்ததை சேர்ந்தவராகவும் இருக்கலாம்.

ஆனால், காந்தியின் நோக்கம் தாழ்த்தப்பட்ட மக்களின் விடுதலை அல்ல. தாழ்த்தப்பட்ட மக்கள் இந்து மதத்திலிருந்து வெளியில் போகக்கூடாது என்பதுதான். அதனால்தான் ‘ஹரிஜன்’ என்று பெயர் வைத்தார்.

ஹரி என்றால் விஷ்ணு. விஷ்ணுவின் குழந்தை அல்லது விஷ்ணுவின் மக்கள் என்றுதான் அது அர்த்தம்.

காந்தி இந்து மதத்தில் வைணவப் பிரிவை சேர்ந்தவர். வைணவர்களின் கடவுள்தான் விஷ்ணு. அதனால்தான் ‘ஹரிஜன்’ என்று பெயர் வைத்தார்.

அல்லாஜன், இயேசுஜன், சைவர்களின் கடவுளான சிவன் பெயரை முதன்மைப்படுத்தி ‘சிவஜன்’ என்று வைக்கலாம் என்றுகூட அவர் யோசித்ததில்லை.

காந்தி சனாதன சிந்தனையில் ஊறியவர். அதிலும் வைணவ சிந்தனையில் ஊறியவர். அதனாலதான் விஷ்ணுவின் இன்னொரு புனைப் பெயரான ராமன் பெயரை தன் இறுதி மூச்சு வரை பிரச்சாரம் செய்தார்.

தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தேவை புதுபுது பெயர்கள் அல்ல. ஜாதிய கொடுமைகளிலிருந்து விடுதலை.

*

திரு.ஷேக் மொய்தீன் அவர்களை ஆசிரியராக கொண்டு வெளிவருகிற தங்கம் செப்டம்பர் மாத இதழில், வாசகர் கேள்வி நான் எழுதிய பதில்.

தொடர்புடையவை:

காந்தி படுகொலையும் அப்பாவி பார்ப்பனஅகிம்சாமூர்த்திகளும்

வ.உ.சியின் தியாகமும் காங்கிரசின் துரோகமும்

டாக்டர் அம்பேத்கரோடு பெரியாரும் காந்தியும்

Exit mobile version