அல்லாஜன் – இயேசுஜன் என்று அழைக்காமல் ‘ஹரிஜன்’ என்று ஏன் அழைத்தார் காந்தி?

தாழ்த்தப்பட்ட மக்களை காந்தி அரிஜன் என்று அழைத்து சரிதானே?

-டி. கார்த்திகேயன், திருச்சி.

ஹரிஜன் என்பதை கடவுளின் குழந்தை என்று மொழிபெயர்க்கிறார்கள் அது தவறு. கடவுளின் குழந்தை என்றால் எந்த மதத்ததை சேர்ந்தவராகவும் இருக்கலாம்.

ஆனால், காந்தியின் நோக்கம் தாழ்த்தப்பட்ட மக்களின் விடுதலை அல்ல. தாழ்த்தப்பட்ட மக்கள் இந்து மதத்திலிருந்து வெளியில் போகக்கூடாது என்பதுதான். அதனால்தான் ‘ஹரிஜன்’ என்று பெயர் வைத்தார்.

ஹரி என்றால் விஷ்ணு. விஷ்ணுவின் குழந்தை அல்லது விஷ்ணுவின் மக்கள் என்றுதான் அது அர்த்தம்.

காந்தி இந்து மதத்தில் வைணவப் பிரிவை சேர்ந்தவர். வைணவர்களின் கடவுள்தான் விஷ்ணு. அதனால்தான் ‘ஹரிஜன்’ என்று பெயர் வைத்தார்.

அல்லாஜன், இயேசுஜன், சைவர்களின் கடவுளான சிவன் பெயரை முதன்மைப்படுத்தி ‘சிவஜன்’ என்று வைக்கலாம் என்றுகூட அவர் யோசித்ததில்லை.

காந்தி சனாதன சிந்தனையில் ஊறியவர். அதிலும் வைணவ சிந்தனையில் ஊறியவர். அதனாலதான் விஷ்ணுவின் இன்னொரு புனைப் பெயரான ராமன் பெயரை தன் இறுதி மூச்சு வரை பிரச்சாரம் செய்தார்.

தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தேவை புதுபுது பெயர்கள் அல்ல. ஜாதிய கொடுமைகளிலிருந்து விடுதலை.

*

திரு.ஷேக் மொய்தீன் அவர்களை ஆசிரியராக கொண்டு வெளிவருகிற தங்கம் செப்டம்பர் மாத இதழில், வாசகர் கேள்வி நான் எழுதிய பதில்.

தொடர்புடையவை:

காந்தி படுகொலையும் அப்பாவி பார்ப்பனஅகிம்சாமூர்த்திகளும்

வ.உ.சியின் தியாகமும் காங்கிரசின் துரோகமும்

டாக்டர் அம்பேத்கரோடு பெரியாரும் காந்தியும்

11 thoughts on “அல்லாஜன் – இயேசுஜன் என்று அழைக்காமல் ‘ஹரிஜன்’ என்று ஏன் அழைத்தார் காந்தி?

  1. ungal kootru migavum unmai Scheduled caste & Scheduled Trible pothum, puthu puthu peyar thevaiyellai tamilil attavanai vakippanar & attavanai pazhankudiyinar.dalith,sakkaliar,arunthathiyar, paraiyar ,athidravidar ,pallar,mallar,devendirakulavellar,thazhppatta saathiyinar,thozhkudigal,thozhtamizhar,aathi tamizhar ,colony makkal,cheri makkal entra adaiyaalam thevaiyellai saathiyatra makkalukku ean puthu puthu peyarkal ,peyarai maatruvathaal viduthai kidaikkathu porradinaalthan viduthalai kidaikkum.

  2. Theendaamai akkaalaththil inthukkalitame athikam kaanappattathu. Envae thaan Gaanthi adigall indhukkall perithum vanangum kadavulaakiya hariyai maiyappaduththi harijan endru azhaiththaar. iraivanin pillaikalai avamathikka evarum thayankuvar endru avar ninaiththaar. Aanaal ithai indru arasiyalaakkuveerkal endr paavam avar andru ninaiththirukka maattaar.

  3. Gandhiji kooriyathu sarithan. Avarathu karuthugallai melottomaga parthal thappaga theriya vayppundu. Avarathu kolgaigalil ondrana than velaiye thame seigindra seyal, ithai kavanikkumpodhu avar thazhthapattavargal vazhvin munnerrathirgagaveyanathu enpathu pagutharivalargaluku puriyakoodiya ondragum. Gandhiyai kuraikoorupavargal kattayam thangalin suyaparisothanayil tholvi kandavaragathan irukka vendum. Unmaiyan Porattathin vithai athavadhu Harijanangalin viduthalaikkana thodakkam avargalathu thannozhukkam aagathan intha ulagathal ariyapadavendum. Intha karuthai nam anpukkuriya anaithu ilayathalaimurayinar puriyumbadi nam vazhgai irundhal naalaya samuthayathil thazhthapattavargal harijan ena vagaipadutha pada mattargal. Bharatha Samudhayam Vazhga!!! Jaihind.

  4. நண்பர் வே. மதிமாறன்,
    வணக்கம்.

    உங்கள் கற்பனையும் எழுத்து திறமும் மிக அறுமை.
    படித்த உங்களுக்கு இந்திய மற்றும் ஹிந்து மத ஞானம் மிக அறுமை

    உங்களுக்கு தமிழ் நாட்டில் உள்ள மற்ற இன மக்கள் நீங்கள் தாழ்த்தப்பட்ட என்று கூறும் இன நண்பர் / சகோதர சகோதரிகளை,

    நீங்கள் சொல்லும் பிராமன இன மக்கள் மட்டும் தான் தழத்துகிறர்களா?

    உங்களக்கு கட்டயமாக தெரியும் வேறு எத்தனை இன மக்கள் அவர்களை தாழத்த முற்படுகிறார்கள் என்று. இருந்தாலும் நான் என்னால் முடிந்த சில நிகழ்வை தெறிவிக்க ஆசை. இது பற்றி தங்கள் கருத்தை அறிய ஆசை.

    1 . திருநெல்வேலி மற்றும் மதுரை பக்கம் அடிகடி நிகழும் தேவர், நாடார் மற்றும் நீங்கள் தாழ்த்தப்பட்ட என்று கூறும் இன நண்பர் / சகோதரர் சண்டை.

    2 . உளுந்தூர்பேட்டை அருகில் இறுக்கும் பாளையம் என்ற ஊரில் உள்ள கிறிஸ்துவ தேவாலய தேர் பவனி நீங்கள் தாழ்த்தப்பட்ட என்று கூறும் இன நண்பர் / சகோதர தெரு வர விடாமல் நடந்த சண்டை

    உங்களுக்கு உலக ஞானம் இறுக்கும் என்று நினைக்கிறேன்.

    அமெரிக்காவில் சில பல ஆண்டு முன் கருப்பு இன மக்களை மாடு குதிரை போன்று பல் ஆட்டி பார்த்தபின் வாங்கிய வெள்ளைகாரர்கள் பற்றி ஏன் நீங்கள் பேசவில்லை.

    வெள்ளைகாரர்கள் பின்பற்றும் மதம் பற்றி ஏன் எழுதவில்லை?

    இஸ்லாம் மதத்தில் இறுக்கும் வேறுபாடுகள் மற்றும் அவர்களுக்குள் சண்டை போட்டுக்கொள்ளும் செய்தி நான் சொல்லித்தான் உங்களுக்கு தெரிய வேண்டிய செய்தி இல்லை.

    புத்த மத பிக்சு சொல்லி குடுத்து தான் ராஜபக்ஷே நம் தமிழ் இனத்தை அறுத்து எறிந்தான் என்பதை நான் சொல்லி தெரியவேண்டியது இல்லை.

    எனக்கு உலகில் உள்ள அணைத்து மதம் மீதும் நம்பிக்கை இருக்கிறது. நான் எந்த மத கோட்பாடுகளை தாழ்வாக பார்பதோ எழதுவதோ இல்லை.

    மத நம்பிக்கை இல்லை என்றால், மற்றவர்கள் நம்பிக்கை பற்றி எழுத யாருக்கும் உரிமை இல்லை.

    உலகில் உள்ள அணைத்து உயரினங்களும் தங்கள் கூட்டத்திலும் மற்ற உயரினகளைவிட தான் பெரியது என்று போராடுவதும் இயல்பு. இந்த இயல்பு இறுக்கக்கூடாது என்று எல்லா மத போதனைகளும் சொல்லுகின்றன.

    எடுத்துகாட்டாக எனக்கு ஏன் நண்பன் அனுப்பிய ஒரு SMS நினைவிற்கு வருகிறது

    மனித உடம்பில் இறுக்கும் ஒரு ஒரு அவயங்களும் தங்களுக்குள் யார் பெரியவர் என்று ஒரு சண்டை போட்டனவாம்.

    அப்போது மூளை சொன்னது, “நான் தான் எல்லா அவயங்களை இயக்குகின்றான் , எனவே நான் தான் பெரியவன்” என்றதாம்.

    உடனடியாக கைகள் சொன்னது, “நான் தான் எல்லா வேலையும் செய்கிறேன் ,எனவே நான் தான் பெரியவன்” என்றதாம்.

    உடனடியாக கால்கள் சொன்னது, “நான் தான் எல்லா இடத்திற்கும் நான் தான் அழைத்து செல்கிறேன் ,எனவே நான் தான் பெரியவன்” என்றதாம்.

    உடனடியாக வாய் சொன்னது, “நான் தான் எல்லாரிடமும் பேசுகிறேன், சாப்பாடு நான் தான் மென்று தருகிறேன், எனவே நான் தான் பெரியவன்” என்றதாம்.

    இப்படி வயிறு, சிறுகுடல், பெருகுடல் என எல்லா அவயங்களும் தங்களுக்குள் யார் பெரியவர் என்று ஒரு சண்டை போட்டனவாம்.

    இதனால் அந்த மனிதனுக்கு சற்று வயிற்றுப்போக்கு ஏற்பட்டதாம்.

    அப்போது, அசனவாய் சொன்னது “நான் தான் பெரியவன்” என்றதாம். கூடவே தான் செய்ய வேண்டிய வேலையை செய்யாமல் இருந்ததாம்

    அசனவாய் வேலை செய்யாததால் மற்ற எல்லா அவயங்களும் ஆட்டம் கண்டணவம்.

    அப்போது எல்லா அவயங்களும் அசனவாய் தான் பெரியவன் என்று சொன்னதம்.

    இந்த கதை எப்படி இருக்கிறதோ அப்படி தான் உலகில் உள்ள அணைத்து மக்களும் தான் மற்றும் தன் இனம் பெரியது என்று பறைசாற்றுகிறது.

    இந்த கதை எப்படி நாம் எல்லா உடல் அவயங்களும் ஒன்றாக இருக்கவேண்டும் என்று நினைகிறோமோ அதுபோல எல்லா மக்களும் தங்களுக்கு உள்ள வேற்றுமை அற்று ஒன்றாக இருக்கவேண்டும்.

    ஒற்றுமையாக இருக்க வேண்டிய நாம் வேற்றுமை வளரவிட கூடாது.

    நீங்கள் ஒரு உண்மையான முற்போக்கு சிந்தனைவாதி என்றால் எல்லா மதத்தில் இருக்கும் குறைகளை சொல்லுகள், முடிந்தால் எல்லா மதநண்பர்களும் செரிசெய்துகொள்ளட்டும்.

    மாற்றாக நம் முன்னால் முதல்வர் கருணாநிதி மற்றும் சோனியாகாந்தி போல இந்து மதத்தை குற்றம் சொல்லிவிட்டு, தேவாலையத்தில் அப்பமும் மசூதியில் கஞ்சியும் குடித்துவிட்டு இந்து மதத்தைமட்டும் குறை சொல்லும் குருட்டு முற்போக்கு சிந்தனைவாதியாக இருக்காதீர்கள்

    இப்படி சில பேர் இந்து மதத்தை மட்டும் குறை சொல்லவதை பார்த்தல் இவர்கள் எல்லாம் இந்து மதம் அல்லாத மதத்திரங்கள் காசு வாங்கி பேசுவது போலவும், இதர மதத்தை பரப்ப வந்தவர்கள் போல மட்டுமே உறுதியாக தெரிகிறது.

    இங்ஙனம்

    மணிமாறன் கருணாநிதி

Leave a Reply

%d bloggers like this: