Site icon வே. மதிமாறன்

வாழ்க புரட்சித் தலைவி! வாழ்க அச்சுதானந்தன்! – What a trick?

மிழகரசு; கேரள அரசுக்கும், கேரள சி.பி.எம். அச்சுதானந்தனுக்கும் நன்றி சொல்லவேண்டும். அதுபோல், தமிழக சி.பி.எம். தமிழகரசுக்கு நன்றி சொல்லவேண்டும்.

ஆமாங்க, பால், மின்சாரம், போக்குவரத்து விலையை உயர்த்திய தமிழகரசு, கடுமையான எதிர்ப்பை தமிழர்களிடம் சந்தித்து வந்த வேளையில், முல்லைப் பெரியாறு விவகாரத்தை கிளப்பி, இனவாத அரசியலை தூண்டி விட்ட கேரள முதல்வர் உம்மன்சாண்டியும், சி.பி.எம். அச்சுதானந்தனும் அதிமுக அரசை தமிழர்களின் வசவுகளில் இருந்து காப்பாற்றி இருக்கிறார்கள்.

கேரள அரசியல்வாதிகளின் குறிப்பாக சி.பி.எம். அச்சுதானந்தனின் தமிழர்களுக்கு எதிரான இனவாத அரசியலுக்கு எதிராக, அரசியல் செய்யவேண்டிய நெருக்கடியான சூழலில் இருந்து, தமிழக சி.பி.எம் கட்சியை காப்பாற்றியது அதிமுக அரசுதான்.

நிஜமாதாங்க, தமிழகத்தில் உள்ள எல்லா கட்சிகளும் கேரளாவின் தமிழர் விரோதப் போக்கை கண்டித்துக் கொண்டிருந்தபோது, தமிழக சி.பி.எம். மட்டும், தமிழகமே நடுநடுங்கும் அளவிற்கு விலைவாசி உயர்வை எதிர்த்து போராட்டம் நடத்தினார்களே,

என்ன ஒரு புத்திசாலித்தனம்? What a trick? வாழ்க புரட்சித் தலைவி, வாழ்க புரட்சித் தலைவன் அச்சுதானந்தன்.

தொர்புடையவை:

‘தமிழனா? மலையாளியா?’; சி.பி.எம் இனவாதம்

கவுண்டமணியும் கம்யூனிஸ்ட்டுகளும்

கம்யுனிஸ்டுகள், தமிழ்த் தேசியவாதிகளை விட அதிமுகவே மேல்!

காமராஜர், கக்கன், கம்யூனிஸ்டுகளின் எளிமையும்; பார்ப்பன, தேசிய, தமிழ்த்தேசியவாதிகளின் சதியும்

Exit mobile version