துரோகம் செய்யும் தேங்காய் தமிழர்கள்!

கேரளாவில் இருந்து, தமிழகத்திற்குத் தேங்காய் விலை கொடுத்து வாங்கப்படுகிறது.

கேரள தேங்காயை பணம்கொடுத்து வாங்கிய, தமிழர்கள் அதைக் கொப்பரை தேங்காயாக மாற்றி, மீண்டும் கேரளாவிற்கே இலவசமாகத் தருகிறார்கள். அதுவும் தன் தலைமேல் சுமந்து சென்று.

அப்படிச் சுமந்து சென்ற தமிழர்களையும் விரட்டி, விரட்டி அடிக்கிறார்களாம் எல்லையில் கேரளத்தவர்கள். இத்தனைக்கும் தேங்காய்க் கொண்டு செல்லும் தமிழர்களுக்குப் பெரியாறு அணையைப் பாதுகாக்கும் நோக்கம் எல்லாம் ஒன்றுமில்லை. பெரியாறு அணை இருந்தா என்ன? இல்லாட்டி என்ன என்ற எண்ணம் கொண்டவர்கள்தான் இந்தத் தேங்காய் தமிழர்கள்.

மலையாளிகளிடம் இருந்து காசு கொடுத்து வாங்கிய தேங்காயை, தன் சொந்த செலவில் கொண்டுபோய் அவர்களிடமே இலவசமாகத் தருவதற்காகத்தான் போகிறார்கள். ஆனாலும் அவர்களையும் அடிக்கிறார்கள் கேரளத்தவர்கள். ‘அடிவாங்கியாவது, தேங்காயை கொண்டுபோய்ச் சும்மா கொடுத்துவிட்டுத்தான் வருவேன்’ என்று அடம்பிடிக்கிறார்கள் தேங்காய் தமிழர்கள்.

அதனால் உயிரை பணயம் வைத்து, மாற்று வழியில் போய்த் தேங்காயை இலவசமாகக் கொடுத்துவிட்டு, ஏதோ புரட்சிகர நடவடிக்கையைச் செய்தது போல் ரகசியமாக வருகிறார்கள் தேங்காய் தமிழர்கள்.

இந்தச் சூழலில், ‘கேரளாவிற்குச் செல்லும் 13 வழிகளை மூட வேண்டும்’ என்று முற்றுகை போராட்டம் அறிவித்திருக்கிறார் வைகோ. இந்தப் போராட்டத்திற்கு எதிராக மலையாளிகள் செயல்படுகிறார்களோ இல்லையோ, நிச்சயம் தேங்கய் தமிழர்கள் செயல்படுவார்கள்.

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில், கேரள எல்லைப் பகுதியில் பஞ்சம் பிழைக்கப் போன தமிழர்கள் தாக்கப்படுகிறார்கள். அவர்கள் விரட்டியடிக்கப்பட்ட விவரங்களைக் கதறி, கண்ணீர் மல்க சொல்லும்போது, நம் நெஞ்சம் பதறுகிறது. நேரில் பார்த்த கம்பம், தேனி பகுதி தமிழர்கள் கொந்தளிக்கிறார்கள்.

ஆனாலும், இந்தத் துயரம், எதுவும் சீண்டவில்லை தேங்காய் தானத் தமிழர்களுக்கு, இந்த ரணக் களத்திலும் கொஞ்சமும் மனசாட்சி இல்லாமல் கேரளவிற்குச் சென்று தேங்காயை தந்துவிட்டு வருகிறார்கள். காரணம் கேட்டால், ‘நாங்கள் தமிழர்கள் இல்லை அய்யப்ப பக்தர்கள்’, என்கிறார்கள்.

உம்மண்சான்டி சாமியும், அச்சுதானந்த சாமியும் இன்னும் சில மலையாள சாமிகளும் முல்லைப் பெரியாறு அணையை உடைப்பேன், தமிழ் சாமிகளை விரட்டி அடிப்பேன் என்று உறுமுகிறார்கள்.

இதை மன்மோகன் சாமி கண்டு கொள்ளாமல் இருக்கிறார். சோனியா சாமியும். சிதம்பரம் சாமியும், கேரள காங்கிரஸ் சாமிகளின் அடாவடித்தனத்தைக் கண்டிக்க மறுக்கிறார்கள்.

அதேபோல். கேரள கம்யுனிஸ்ட் சாமிகளின் அட்டகாசத்தைக் கண்டித்து, பிரகாஷ் கரத் சாமியும் ஒன்றும் வாய் திறக்க மாட்டேன் என்கிறார்.

காரணம், தமிழ்நாட்டை விடக் கேரளாவில்தான் இரண்டும் கட்சிகளுக்கும் ஓட்டுச் சாமிகள் அதிகம். தமிழ்நாட்டுக்கு ஆதரவாகக் கருத்துக் கூறினால், உடனே ஆளும் கட்சியாக இரண்டு கட்சிகளும் வர எப்போதுமே வாய்பில்லை; மாறாகக் கேரளாவில் செல்வாக்கு குறைந்துவிடும் என்ற தேர்தல் காரணத்தினாலேயே இந்த அக்கப்போரு நடக்கிறது.

ஆனாலும், இவ்வளவு பிரச்சினை நடக்கும்போதும் நம்ம தமிழ் அய்யப்பசாமிகள் சுப்பிரமணிய சுவாமியைப்போல் நடந்து கொள்வது ரொம்ப மோசம்.

கேரளாவிற்குள் நுழைகிற முற்றுகை போராட்டத்தைத் தொடர்ந்து நடத்துகிற ஆயிரங்கணக்கான தேனி மாவட்ட மக்களைக் காவல்துறை தடியடி நடத்தி தடுத்து நிறுத்துகிறது. ஆனால், சபரிமலைக்குச் செல்லும் தேங்காய் தமிழர்களின் எண்ணிக்கை லட்சக் கணக்கில் இருக்கும். அவர்கள் நினைத்தால்…

‘ஒண்ணும் பண்ண முடியாது. தேங்காயை கல்லுல உடைச்சிட்டு, மண்டையை மலையாளிகிட்ட உடைச்சிகிட்டு வருவாய்ங்க’

“இப்படிச் சுயமரியாதை இல்லாமல் இருப்பவனுக்குப் பேர் தமிழனா? திரும்பத் தமிழ்நாட்டுக்குள்ள வராதே. என்று அவர்களைத் தடுக்க வேண்டும்” எனப் பொங்கினார் ஒரு கோபக்காரத் தமிழர்.

தொர்புடையவை:

‘தமிழனா? மலையாளியா?’; சி.பி.எம் இனவாதம்

வாழ்க புரட்சித் தலைவி! வாழ்க அச்சுதானந்தன்! – What a trick?

முல்லைப் பெரியாறு, காவிரி: ஜாதி தமிழன் பிரச்சினையா? (எழுத்தாளர் சுஜாதா பாதுகாப்பாகத்தான் இருந்தார்)

19 thoughts on “துரோகம் செய்யும் தேங்காய் தமிழர்கள்!

 1. இதை போன்ற நல்ல பகுத்தறிவான கருத்துக்களையும் சொல்கிறீர்கள். திடிரென்று லூசு போல எதையாவது உளறவும் செய்றீங்க. உங்களின் நிலை தான் என்னவோ?

 2. Pathma Nathan
  எதை என்று சுட்டிக் காட்டாமல் குற்றம் சொல்கிறீர்களே? நீங்கள் என்ன முட்டளா?

 3. Pathma Nathan என்கிற இவன், மதிமாறன் எழுதிய முல்லைப் பெரியாறு, காவிரி: ஜாதி தமிழன் பிரச்சினையா? (எழுத்தாளர் சுஜாதா பாதுகாப்பாகத்தான் இருந்தார்) என்ற கட்டுரையின்லிங்கை facebookல் வெளியிட்டு இருந்தார்.

  அதில் முதல் நான்கு வரியை மட்டும் படித்துவிட்டு அதற்கு கீழ் உள்ளவற்றை படிக்காமல், facebookல் தோழர் மதிமாறனை பற்றி இழிவாக எழுதிய ஆர்வக்கோளாறுதான் Pathma Nathan என்கிற இந்த முட்டாள்.

  இந்த முட்டாள் Pathma Nathan facebookல் அந்தக் கட்டுரையை சரியாக படிக்காமல் எழுதியதை கீழே தருகிறேன் படித்துப் பாருங்கள் ரவிச்சந்திரன். நீங்கள் குறிப்பிட்டதுபோல் இவன் முட்டாளேதான்.

  //facebook Pathma Nathan
  இத்தனை நாட்களும் நீ எழுதிய பதிவுகளை படித்ததட்காய் வெட்கபடுகிறேன். உன் பிரிவினை வாதாத்தை வேறெங்காவது போய் சொல். தமிழ்நாட்டை விட்டு ஓடிப்போயிறு. யார் விவசாயம் செய்தாலும் நீயும் அதில்தானே சாப்பிடுற. அதைவிட்டு வேறு எதையாவது தின்னுட்டு உயிர் வாழுறியா?//

 4. போய் அடி வாங்கிட்டு வரட்டும் . அப்படியாவது புத்தி வருதான்னு பாக்கலாம். ஒருமுறை நானும் சபரி மலைக்கு போய் இவங்க சுத்த பத்தத்தை பாத்துட்டு தான் வந்தேன். கழிப்பறை ன்னு எழுதி இருக்கு ஒரு கட்டிடத்தில். அது மேல ஒரு சாமி ஒன்னுக்கு போனார். (ஒரு லட்சம் சாமிகளாவது போய் இருப்பார்கள். அவ்ளோ நாத்தம்). செருப்பு போடாம மூத்திரத்தின் மேலயும் மலத்தின் மேலயும் நடக்குறதுதான் சுத்த பத்தமாம்.

  நான் போயிருந்த போது பம்பையில் நீர் வரத்து குறைவாக இருந்தது. அதில்துண்டு, வேட்டிகளை விட வேண்டாம் என்று மலையாள அதிகாரிகள் கரடியாக கத்துகிறார்கள். நம்ம ஆள் அதை சட்டை பண்றதே இல்லை. நூற்று கணக்கான துண்டு, வேட்டிகளை ஓடும் ஆற்றில் விடுகிறார்கள். அதை பொறுக்குவதற்காக தேவஸ்வம் போர்டு ஆள் போட்டிருக்கிறது. தண்ணீர் குறைவாக இருந்ததால் அதில் மலம் கூட மிதந்து வந்தது. அதில் குளித்தால் புண்ணியமாம். நான் அன்றைக்கு குளிக்கவே இல்லை.

 5. ஒரு பெரிய ஜனநாயக நாட்டில் இரு மாநிலங்களில் பெரும் பதற்றம் காணப்படுகிறது ஆனால், இந்திய அரசு மௌனம் சாதிக்கிறது.அரசின் நிவாகம் மௌனம்
  சாதிப்பதை பார்த்துக் கொண்டிருக்கும் காங்கிரஸ் தோழர்கள் என்ன நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்,மத்திய ஒரு பெரிய ஜனநாயக நாட்டில் இரு மாநிலங்களில் பெரும் பதற்றம் காணப்படுகிறது ஆனால், இந்திய அரசு மௌனம் சாதிக்கிறது.அரசின் நிவாகம் மௌனம்
  சாதிப்பதை பார்த்துக் கொண்டிருக்கும் காங்கிரஸ் தோழர்கள் என்ன நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்,மத்திய அமைச்சர்கள் மக்கள் மீது விருப்பு உள்ளவர்ககள் என்றால் ஏன் பதற்றத்தை தணிக்க அமைச்சர்கள் ஏன் தமது பதவிகளை உடனடியாக துறக்க தயங்குகிறார்கள் ? அரசு கேரளாவில் காங்கிரஸ் ஆட்சி நடைபெறுவதை கருத்தில் கொண்டு செயல்படுகிறதா?அல்லது முதுகெலும்பு இல்லாத ஒரு ஆட்சி நடக்கிறதா ? அல்லது வருங்காலத்தில் இந்தியா பல்வேறு பிரிவுகளாக பிரியும் என்று கூறுபவர்களின் கூற்று உண்மையாக போகிறதா? அரசு சிந்தித்து செயல்படுமா என்று பொறுத்திருந்து பார்போம் தமிழர்களின் தலைவிதியை ?அமைச்சர்கள் மக்கள் மீது விருப்பு உள்ளவர்ககள் என்றால் ஏன் பதற்றத்தை தணிக்க அமைச்சர்கள் ஏன் தமது பதவிகளை உடனடியாக துறக்க தயங்குகிறார்கள் ? அரசு கேரளாவில் காங்கிரஸ் ஆட்சி

 6. இன்றைய கட்டுரையை படிக்கும் பொழுது உங்கள் மீது ஏறப்பட்ட மரியாதை சற்று கூடித்தான் போனது. என் மானுடவியல் ஆராய்ச்சியில் உலகத்தில் மிகக் கீழான இனம், முட்டாள்களின் கூட்டமென்றால் அது தமிழ்ர்கள்தான். தன்னை விரட்டி அடிக்கும் ஒரு வக்கிரமான மரமண்டைகளுக்கு தேங்காய் கொண்டுபோகும் கீழான புத்தியை வேறு எப்படி வரையறுப்பது என்று தெரியவில்லை. பெரியார் இருந்திருந்தால் இந்த முட்டாள்களின் அடிமை புத்தியை பார்த்து. தன் தாடியை மழித்து வேறு ஒரு தேசம் போயிருப்பார்

 7. ஒன்னு அய்யப்பன கும்பிடுவீங்க இல்லன்னா பெரியாருக்கு பூஜை பண்ணுவீங்க… எப்பத்தாண்டா திருந்துவீங்க?

 8. Otrumaiyaai irunthu ethirppai kaatta vendum endra Ina unarvu irunthirunthaal inneram Tamilan munneri iruppaan. Jaathiyal, vattaarathaal, mathathaal muttaalaaka ulla thamilarkal irukkum varai Tamilanttukku oru perumaiyum kidaiyaathu. Munnetramum varaathu

 9. முல்லைப் பெரியாறு அணை கேரள எல்லைக்குள் இருந்தாலும் தமிழ்நாட்டுக்கே சொந்தம். அது போல சபரி மலை கேரளாவிற்குள் இருந்தாலும் அக்கோவில் அனைத்து இந்துக்களுக்கும் பொதுவானது. அங்கு சென்று தரிசிப்பது தமிழ் துரோகம் ஆகிவிடாது

 10. hindhuvavathu vengayamavathu, thamilana aduchu mandayapolakkaran aiyappan anna pudungitirunthana?thamilana hindhunu yar solraangalo avangathan thamil enathin muthal ethirikal. Vaalththukkal mathimaran.

 11. தமிழர்கள் எல்லோரும் இந்து என்று நான் கூறவில்லை. தமிழர்களில் இந்து மதத்தின் மீது நம்பிக்கை கொண்டோரும் இருக்கிறார்கள். இந்த இந்துக்கள் சபரி மலை செல்வது தமிழ் துரோகம் அல்ல. ஏனென்றால் சபரி மலை ஐயப்பன் கேரளா மக்களுக்கு மட்டும் சொந்தம் அல்ல. அனைத்து இந்துக்களுக்கும் பொதுவானவர். அடி படும் பொது ஐயப்பன் காப்பாற்றவில்லையே, இதெல்லாம் ஒரு தெய்வமா என்பது ஐயப்ப பக்தர்கள் சிந்திக்க வேண்டிய ஒன்று. அது வேறு விஷயம். சபரி மலை செல்வதாலேயே ஒருவன் தமிழ் துரோகி ஆகிவிட மாட்டான். நான் சொல்வது அவ்வளவே.

 12. தமிழர்களிடம் தன்மானமற்றத் தன்மையை, சூடு சுரணையற்ற இழிநிலையை ஆழமாக ஊன்றி பெரிய கொடுமையைச் செய்தது இந்து மதம். கடவுளை நம்பும் ஒருவன் இந்த நிலைக்கு கண்டிப்பாக உட்பட்டே யாக வேண்டும். இதை மீறிப் புறப்பட்டால் ஒன்று அவன் பகுத்தறிவுப் பாதைக்கு வரவேண்டும், அல்லது மீண்டும் கடவுள் என்ற நாற்றமெடுத்த அசிங்கத்தைச் சுமக்கும் நிலைக்கே திரும்ப வேண்டும். மனிதனின் தன்மானத்தை இல்லாமலாக்குவதில் இந்து மதம் பிற மதங்களுக்கு சிறப்பு வகுப்பு எடுத்து பழக்கியிருக்கிறது. அந்த மதங்களூம் தன் குருவான இந்து மதத்தின் அசிங்கங்களை கவனத்தோடு தன் பக்தரிகளிடம் பரப்பியதன் கெடுதலாக, அவர்களும்; மூடத்தனத்திலும், முட்டாள் தனத்திலும் ஆழமாக மூழ்கியவர் நீங்களா நாங்களா என்று போட்டிக்கு வருகிறார்கள். இதில் நேரடியாக இந்து மதத்தோடு போட்டி போடுபவர்கள் கிறித்தவர்கள் என்று தம்மை அறியாமல் அழைத்துக் கொள்ளும், இயேசுவை பூசை செய்பவர்கள்தான். இசுலாமியர்கள் இன்னும் அந்தத் தகுதியை வந்து அடையவில்லை.
  அய்யப்பன் என்ற கையப்பனை கும்பிட அடிவாங்கிக் கொண்டு தேங்காய் சுமக்கும் இவனிடம்; ஒரு ஆண் இன்னொரு ஆணோடு சேர்ந்தால் குழந்தை பிறக்குமா? பெருமாளின் கையை சிவன் ஆசையுடன் பிடித்தவுடன் குழந்தையை பெருமாள் என்ற ஆண் பெற்றுவிட முடியுமா? என்ற ஒரு சின்ன கேள்வி கூட எழவில்லை.
  ஒரு ஆணுடன் உடலுறவு கொண்டு சேராமலேயே வெறும் ஆவி தன் உடம்பினுள் புகுந்ததாலேயே குழந்தை உருவானது என்று கூறும் ÔவேதகாமÕ மடக்கதையை.. இது எப்படி சாத்தியம் என்று ஒரு கிறித்தவன் கூட சிந்திக்க வில்லை.
  விலங்கிலிருந்து மனிதனை வேறுபடுத்தும் இந்தப் பகுத்தறிவு குணத்தை மக்களீடமிருந்து பிடுங்கியது இந்த கேடுகெட்ட மதங்களல்லவா? இதனால் தானே மானம் போனாலும் பரவாயில்லை, நான் சாமியைக் கும்பிட்டேதான் வருவேன் என்று அடி வாங்கக் கிளம்புகிறான், தமிழன்.

 13. மன்னிக்கவும் மதிமாறன். பதிவை முழுதாக படிக்காமலும் சரியாக புரிந்து கொள்ளாததாலும் தவறாக மறுமொழி பதிவு செய்துவிட்டேன். செய்யாத ஒரு விஷயத்துக்காக உங்களை கடுமையான வார்த்தைகளால் வஞ்சித்ததற்கு மிகவும் மனம் வருந்துகிறேன். மன்னிக்கவும்

  தவறை சுட்டிக்காட்டிய இருநண்பர்களுக்கும் நன்றிகள்.

 14. nalla nunukamana paarvai. manam punpadamal sonnal anaivaraiyum ketka vaikalam

 15. thozhar vanakkam… thengaay thamizhargalukkakaana katturai sirappu ..VAAZHTHUKKAL..!

 16. manam kettavargal ivergal. ivergallukku anu ullaiyum theriathu, mullai periyarum theriathu. ivergal irunthal enna erenthal enna. nandri thozhar.

Leave a Reply

%d bloggers like this: