Site icon வே. மதிமாறன்

‘திராவிட இயக்கம் மாயை’ டாக்டர் ராமதாஸ் கருத்து சரிதான்… ஆனால்..

திராவிட இயக்கம் மாயை என்றும் கருணாநிதியின் திராவிட இயக்க கருத்தை கடுமையாக விமர்சித்துள்ளாரே டாக்டர் ராமதாஸ்?

-திரவிடமணி, வேலூர்

திமுகவோடு தொடர்புபடுத்தி ஒட்டு மொத்தமாக பெரியார் அரசியலையும் உள்ளடக்கி திராவிடம் என்பது மாயை என்கிறார் ராமதாஸ்.

‘திமுக ஆட்சியில் தமிழகம் ஆற்று நீர் உரிமையை இழந்தது. தமிழை ஆட்சி மொழியாக்கவோ, உயர்நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழை கொண்டு வரவோ முயற்சி எடுக்கவில்லை. அதிமுக ஆட்சியிலும் தமிழகம் இருண்டுபோய் தான் இருக்கிறது.’

என்று டாக்டர் ராமதாஸ் குறிப்பிடுகிற குற்றச்சாட்டுகளோடு நாமும் உடன்படுகிறோம். இவை எல்லாவற்றையும் விட மிக மோசமான செயலை திமுகவும் அதிமுகவும் செய்திருக்கின்றன.

அதாங்க, பாட்டாளி மக்கள் கட்சி போன்ற இன்னும் சில ஜாதிக் கட்சிகளை வளர்த்துவிட்டு சமூகத்தில் ஜாதிவெறியை தூண்டிய பணியைதான் திராவிட கட்சிகள் தீவிரமாக செய்தன அதையும் அவர் சொல்லியிருக்கலாம்.

*

திரு.ஷேக் மொய்தீன் அவர்களை ஆசிரியராக கொண்டு வெளிவருகிற தங்கம் 2012 மார்ச் மாத இதழில் வாசகர் கேள்விக்கு நான் எழுதிய பதில்.

தொடர்புடயவை:

‘இன்னுமா நம்பள ஊருக்குள்ள நம்புறாய்ங்க?’-அது அவுங்க தலவிதி

‘புலிக்கு பயந்தவன் எம்மேல வந்து படுத்துக்க’ பாமகவின் 3 வது அணி முயற்சி

Exit mobile version