பெரியார்தான் தமிழை வளர்த்தார்; தமிழறிஞர்கள் தமிழனுக்கு எதிரான ஜாதி, சமயத்தை வளர்த்தார்கள்
பெரியாரும் திராவிடஇயக்கமும் தமிழுக்கு எதுவுமே செய்யவில்லை என்று சொல்கிறார்களே? உண்மையா?
க.சுரேசு, கயத்தாறு.
பொய். பெரியார் ஒருவர் தான் தமிழுக்கும், தமிழனுக்கும் பாடுபட்ட தலைவர். தமிழ் அறிவு என்பது வேறு. தமிழ் உணர்வு என்பது வேறு. தமிழ் உணர்வோடு இருக்கிறவர்கள் தமிழ் அறிஞராகத்தான் இருக்க வேண்டும் என்பது கட்டாயமில்லை. அவர்கள் பிழையோடு தமிழை பயன்படுத்துகிறவர்களாக இருந்தாலும் தவறில்லை. அதேபோல தமிழ் அறிஞர்கள் எல்லோரும் தமிழ் உணர்வோடு இருந்ததும் இல்லை.
திரு.வி.க தமிழ் அறிஞர் தான். ஆனால் அவர் நடத்திய பத்திரிகைகளின் பெயர்கள் நவசக்தி, தினசரி என்கிற சமஸ்கிருத பெயர்கள்.
பெரியார் தமிழறிஞர் இல்லை. ஆனால் அவர் நடத்திய பத்திரிகைகளின் பெயர்கள் ‘விடுதலை, குடியரசு, உண்மை’ என்கிற தனித்தமிழ் பெயர்கள்.
1938ல் தமிழ் மீது இந்தி திணிப்பு நடந்த போது, அதை எதிர்க்க வேண்டும் என்கிற சொரணையற்று இருந்தார்கள் தமிழறிஞர்கள். மறைமலையடிகள் போன்ற தமிழறிஞர்களுக்கு தமிழ் உணர்வை ஊட்டி, அவர்களை இழுத்து வந்து இந்தி எதிர்ப்பில் இறக்கியது பெரியார் தலைமையிலான திராவிட இயக்கம்.
மறைமலையடிகள் போன்றவர்களுக்கு நிறைய தமிழ் அறிவு இருந்தாலும் அவர்களின் உணர்வு சைவ சமயத்தின் மீதுதான் இருந்தது. பெரியார் சைவ சமயத்தை கடுமையாக எதிர்த்த போது, “ராமசாமி நாயக்கர் வைணவ குடும்பத்தைச் சேர்ந்தவர். அதனால் தான் அவர் சைவ சமயத்தை சாடுகிறார்” என உளறியவர் தான் மறைமலையடிகள், பெரியாரால் சைவ சமயத்திற்கு தீங்கு என்றவுடன் இயல்பாக பெரியார் மீது பொங்கி எழுந்த மறைமலையடிகள், தமிழுக்கு ஒரு தீங்கு வரும் போது, பெரியார் வந்து பிடித்து இழுக்கும் வரை பொங்கவில்லை.
புலவர்கள், தமிழறிஞர்கள் தமிழால் வளர்த்தது தமிழை அல்ல. சைவ, வைணவ சமயத்தைத்தான். அதனால் தான் தலைவர் பெரியார், தமிழை மதத்திலிருந்து விடுதலை செய்யப்பாடுபட்டார். அந்த அக்கறையின் பொருட்டே தமிழைக் காட்டுமிராண்டி மொழி என்றார்.
‘நமஸ்காரம்’ என்கிற சமஸ்கிருதத்தையும், “கும்புடுறேன் சாமி’ என்கிற அடிமை தமிழையும் ஒழித்து “வணக்கம்’ என்கிற சுயமரியாதை மிக்க சொல்லை அறிமுகப்படுத்தியது திராவிட இயக்கம் தான். இந்து மத அடையாளம் கொண்ட சமஸ்கிருத பெயர்களை ஒழித்து மிகப் பெருவாரியான உழைக்கும் மக்களுக்கு மத சார்பற்ற தனித்தமிழ் பெயர்களை வைத்தது தமிழறிஞர்கள் அல்ல. திராவிட இயக்கம் தான்.
அதிமுக துவக்கத்திற்குப் பின் நிலைமை தலைகீழாக மாறியதும், பின்னாட்களில் மாமி பொறுப்புக்கு வந்து பல குழந்தைகளுக்கு சமஸ்கிருத சாமி பெயர்களை வைத்ததும் உலகறிந்ததே. திராவிட இயக்கத்தை குறை சொல்லிக் கொண்டு தனித்தமிழ் பேசுகிற அறிஞர்கள், தலைவர்கள் தங்கள் பிள்øளகளுக்கு சமஸ்கிருத பெயர் தான் வைத்திருக்கிறார்கள் என்பதே அவர்களின் தமிழ் உணர்வுக்கு சாட்சி. (கி.ஆ.பெ.விஸ்வநாதம் பரம்பரையில் இப்போது ஒரு தமிழ் பெயர் கூட இல்லை. இஸ்லாமியத் தமிழரான மணவை முஸ்தபா தன் மகன், மகள், பேரக் குழந்தைகள் வரை தமிழ் பெயர்கள் வைத்திருக்கிறார்.)
ஆக, பல்லாயிரம் ஆண்டுகளாக தமிழை வளர்த்து அதை வாழ வைத்துக் கொண்டிருப்பது நடுத்தர, உயர் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த தமிழறிஞர்கள் அல்ல. மொழியை கொச்சையாக பயன்படுத்துகிற தாழ்த்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட உழைக்கும் தமிழ் மக்களே. (பெரியாரும் உழைக்கும் மக்களைப் போல்தான் தமிழைப் பயன்படுத்தினார்.) சமஸ்கிருதத்திற்கு இன்றுவரை அறிஞர்கள் நிறைய இருந்தும் பேசுவதற்கு ஆள் இல்லாததால் தான், அந்த மொழி செத்துப் போனது.
*
மே 2007 ஆம் ஆண்டு எழுதியது.
வழக்கறிஞர் கு. காமராஜ் அவர்களை ஆசிரியராக கொண்டு வெளிவந்த சமூக விழிப்புணர்வு மாத இதழுக்ககாக ஜூலை
2007 ஆம் ஆண்டு எழுதியது.
தொடர்புடையவை:
‘திராவிட இயக்கம் மாயை’ டாக்டர் ராமதாஸ் கருத்து சரிதான்… ஆனால்..
‘பெரியாரை புரிந்து கொள்வோம்’-கலந்துரையாடல்
காமராஜர், கக்கன், கம்யூனிஸ்டுகளின் எளிமையும்; பார்ப்பன, தேசிய, தமிழ்த்தேசியவாதிகளின் சதியும்
என்ன செய்து கிழித்தார் பெரியார்?
பெரியாரும் அவரின் தாடி மயிரை பிடித்து இழுத்து விளையாடும் பிள்ளைகளும் பேரன்களும்
டாக்டர் அம்பேத்கரோடு பெரியாரும் காந்தியும்
மராட்டியன், கன்னடன் என்று சொல்லிக் கொள்வதில் பெருமை கொள்வோம்
*
வே. மதிமாறன் பதில்கள் புத்தகத்திலிருந்து
தொடர்புக்கு:
‘அங்குசம்’ ஞா. டார்வின்தாசன்
எண்.15, எழுத்துக்காரன் தெரு
திருவொற்றியூர்
சென்னை-600 019.
பேச: 9444 337384
சாதி, மத வெறி என்னும் கனத்தப்போர்வையைப் போர்த்திக்கொண்டு, மயக்க நிலையில் வெறும் வெற்றுச்சொற்களால் தமிழ் முழக்கம் இருக்கும்வரை தமிழ் வளராது. தமிழ் நாட்டில் யார் தமிழை வளர்க்கின்றார்கள் என்று சரியாகச்சொன்னீர்கள். இன்னமும் தமிழகத்தில் நிலவும் தீண்டாமைக் கொடுமைகளுக்கு இந்த தமிழறிஞர்கள் முதலில் விடை சொல்ல வேண்டும். ஒடுக்கப்பட்ட மக்களின் உயர்வுக்கு எழுதும் தங்களின் அரும்பணித்தொடர வாழ்த்துக்கள்.
//‘நமஸ்காரம்’ என்கிற சமஸ்கிருதத்தையும், “கும்புடுறேன் சாமி’ என்கிற அடிமை தமிழையும் ஒழித்து “வணக்கம்’ என்கிற சுயமரியாதை மிக்க சொல்லை அறிமுகப்படுத்தியது திராவிட இயக்கம் தான். இந்து மத அடையாளம் கொண்ட சமஸ்கிருத பெயர்களை ஒழித்து மிகப் பெருவாரியான உழைக்கும் மக்களுக்கு மத சார்பற்ற தனித்தமிழ் பெயர்களை வைத்தது தமிழறிஞர்கள் அல்ல. திராவிட இயக்கம் தான்.//
இது எந்த அளவு வரலாற்றுப்பூர்வமான தகவல் தோழர்…
வணக்கம் என்ற சொல் திராவிட இயக்கத்திற்கு முன் பயன்பாட்டில் இருந்ததில்லையா?
அதோடு, கும்புடுறேன்சாமி என்று சொல்லிக் கொண்டிருந்தவன்…இன்னொருவனை வணங்குதல் என்ற பொருளில் ‘வணக்கம்’ என்ற சொல்லை பயன்படுத்தியது…..எப்படி வளர்ச்சிப்போக்கு என்று புரிந்து கொள்ள ஆவலாய் இருக்கிறேன்..
ஒரு மனிதன் இன்னொரு மனிதனை ஏன் வணங்க வேண்டும் என்ற கேள்வியும் இதனோடு தொக்கி நிற்கிறது
vanakkam enra sol irunthathu anal antha idaththai namaskaram pidiththuk kondathu athai meetathu than diravida iyakkm
//வழக்கறிஞர் கு. காமராஜ் அவர்களை ஆசிரியராக கொண்டு வெளிவந்த சமூக விழிப்புணர்வு மாத இதழுக்ககாக ஜூலை 2007 ஆம் ஆண்டு எழுதியது.//
இன்னைக்கு இந்த சமூக விழிப்புணர்வு வழக்கறிஞர் கு.காமராஜ்க்குதான் முக்கியமா தேவைப்படுவதாக சொல்றாங்க.
வட மொழி- பார்பன ஆதிக்கத்தால் பல தமிழ் சொற்கள் வழக்கொழிந்து போனது, அதில் ஒன்று தான் வணக்கம் என்ற சொல்லும். வணக்கம் என்பது இடத்திற்கு ஏற்ப பொருள் உடையது. இன்னொருவருக்கு அடிபணிவது என்ற பொருள் உடையது அல்ல. ஒருவரை பார்த்து வணக்கம் என்று சொல்வது முகமன் கூறுவது மட்டுமே.
//இது எந்த அளவு வரலாற்றுப்பூர்வமான தகவல் தோழர்…
வணக்கம் என்ற சொல் திராவிட இயக்கத்திற்கு முன் பயன்பாட்டில் இருந்ததில்லையா?//
50 வருடங்களுக்கு முன்புள்ள எழுத்துக்களை படித்தாலே போதும் எளிதாக விளங்கி கொள்ளலாம். சமஸ்கிருத கலப்பாக இருந்த தமிழை ஒழித்து தனித்தமிழை முன்வைத்தது ,மீட்டெடுத்தது திராவிட இயக்கமே தோழர்.
“ வாழ்க தினேஷ்குண்டுராவ் அவர்களே ! “
// கர்நாடகத்தில் வாழும் கன்னடர்-தமிழர் இடையே நல்லிணக்கம் மேம்படும்வகையில் தமிழர்கள் இனி தங்களை தமிழ்கன்னடர் என்று கூறிக்கொள்ள வேண்டும். நாம் அனைவரும் சகோதரர்கள் என்ற உணர்வு மேலோங்க வேண்டும். – கர்நாடக உணவு மற்றும் பொதுவிநியோகத்துறை அமைச்சர் தினேஷ்குண்டுராவ்.”// மிகவும் நன்றி .வாழ்க தினேஷ்குண்டுராவ் அவர்களே!!! தாங்கள் இது போல மகாகணம் பொருந்திய ராஜபக்சே அவர்களுக்கு ஒரு அன்புச் செய்தி அனுப்பி தமிழர்களையும் சகோதரர்களாக ஏற்றுக் கொள்ளச் செய்தால் கோடி நன்றி சொல்வோம். – இப்படிக்கு திராவிடத் தமிழன் மன்னிக்கவும் .தமிழ்த் தமிழன்.
http://dinamani.com/latest_news/2013/07/27/