பாரதமாதா – தமிழ்த் தாய்: மூணாவது தெரு முக்குல குடியிருக்காங்க..

திராவிட இனம் என்ற ஒன்றே கிடையாது என்கிறார்களே இந்து அமைப்புகளும், தமிழ் உணர்வாளர்களும்?

-சாமுவேல், திருவாரூர்.

ஆரியர் என்ற இனம் இருப்பது உண்மையானால், திராவிடம் என்ற இனம் இருப்பதும் உண்மையே.

ஆரியர் என்ற அடையாளத்திற்குரியவர்கள் இந்தியா முழுக்க பிராந்திய அளவில் இருந்தாலும், அவர்கள் தங்களை ‘ஆரியர் என்று அழைக்காதீர்கள்’ என்று சொல்வதில்லை.

தமிழகத்திலும் ‘தமிழர்’ என்று தங்களை அழைத்துக் கொண்டாலும், அதற்கு ஒரு படி மேலே போய் பெருமையோடு தங்களை ‘ஆரியர்’ என்றே அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள், பாரதியைப் போல்.

இந்து மத சடங்குகளில், சமஸ்கிருத சுலோகங்களில். வேத வியாக்கானங்களில் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, மராட்டி இப்படி எந்த மொழி பேசுகிறவர்களாக இருந்தாலும், ஆரியர்களுக்குள் ஒர் ஒற்றுமை இருக்கத்தான் செய்கிறது.

தமிழ்நாட்டில்கூட வட்டார வழக்கைத் தாண்டி, தமிழகம் முழுக்க இருக்கிற ஆரியர்கள் எல்லோரும் ஒரே மாதிரியான ‘பார்ப்பன தமிழ்’ பேசுவது எப்படியோ அப்படி ஓர் ஒற்றுமை.

‘தமிழை’, ‘ஜாதி வழக்கு’ தமிழாக பயன்படுத்துகிற ஒற்றுமை வேறு எந்த ஜாதிக்காரர்களிடமும் கிடையாது. அவுங்க பேசுற தமிழைக் கேட்டவுடேனேயே அவர்களின் ஜாதியை அடுத்த நொடியே தெரிந்து கொள்ளலாம்.

அதற்குக் காரணம் சமஸ்கிருதத்தை மேன்மையான மொழியாக தமிழோடு கலந்து பேசுவதுதான்.

திராவிடர் என்பதற்கான முதன்மையான அடையாளம் சமஸ்கிருதம் கலக்காத தனித்தமிழ்தான். திராவிடர் என்பது இனம் அல்ல என்றால், நிச்சயமாக தமிழன் என்பதும் இனம் அல்ல. அது மொழியின் அடையாளம்.

ஆரியம் என்பது இனம். சமஸ்கிருதம் அதன் மொழி என்பதைபோல.

‘திராவிடர்’ அரசியில் பேசிய திராவிட இயக்கத்தவர்கள், அதனால்தான் தமிழை முதன்மை படுத்தினார்கள்.

பெரியாரிடம் இருந்து பிரிந்த திமுக காரர்கள், தமிழை சமஸ்கிருதம் போல் புனிதமாக்கினார்கள். இந்தி எதிர்ப்பின் வடிவமாக தமிழ் கூடுதல் புனிதம் பெற்றது.

‘தமிழை பழித்தவனை தாய் தடுத்தாலும் விடேன்’ என்ற மொழி சார்ந்த உணர்வு ரீதியான அரசியல் தீவிரமாக்கப்பட்டது.

திராவிடம் பேசியவர்கள், ‘திராவிடத் தாய்’ என்று சொல்லாமல், ‘தமிழ்த் தாய்’ என்று மொழியை முதன்மைப்படுத்தி அரசியல் செய்தார்கள்.

தமிழ்த் தாய் வாழ்த்தே கலைஞர் ஆட்சியில்தான் வந்தது.

ஒருமுறை திமுகவைச் சேர்ந்த சி.பி. சிற்றரசு மேலவை உறுப்பினராக இருந்தபோது இந்தியினால், தமிழ்த் தாய் சீரழிகிறாள், ‘தமிழ்த் தாய்.. தமிழ்த் தாய்’ என்று தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தபோது,

ஒரு காங்கிரஸ்காரர் குறுக்கிட்டு, ‘மூச்சுக்கு மூச்சு தமிழ்த் தாய் என்கிறீர்களே உங்கள் தமிழ்த் தாய் எங்கே தங்கி இருக்கிறாள்?’ என்று கேட்டாராம்.

அதற்கு சிந்தனை சிற்பி சிற்றரசு இப்படி பதில் அளித்தார்:

‘உங்க பாரதமாத வீட்டுக்கு பக்கத்து வீட்ல.’

*

திரு.ஷேக் மொய்தீன் அவர்களை ஆசிரியராக கொண்டு வெளிவருகிற தங்கம் அக்டோபர் 2012 மாத இதழில் வாசகர் கேள்விக்கு நான் எழுதிய பதில்.

தொடர்புடையவை:

‘திராவிட இயக்கம் மாயை’ டாக்டர் ராமதாஸ் கருத்து சரிதான்… ஆனால்..

‘இன்னுமா நம்பள ஊருக்குள்ள நம்புறாய்ங்க?’-அது அவுங்க தலவிதி

‘புலிக்கு பயந்தவன் எம்மேல வந்து படுத்துக்க’ பாமகவின் 3 வது அணி முயற்சி

டாக்டர் அம்பேத்கரின் தமிழ் உணர்வும்; முற்போக்காளர்கள், அறிஞர்கள், தமிழனவாதிகளின் ஜாதி உணர்வும்

தமிழ்த்தேசியம்+இந்திய தேசியம்=பெரியார் எதிர்ப்பு

‘ஜாதி உணர்வை தன் ஜாதிக்காரனிடமும், தமிழ் உணர்வை அடுத்த ஜாதிக்காரனிடமும் ஊட்டு’; இதுக்குப்பேர்தான் திராவிட எதிர்ப்பு

‘பெரியாரையே விமர்சிக்கிறாங்க… அப்பா…. பயங்கரமான ஆளா இருப்பாய்ங்க போல’

6 thoughts on “பாரதமாதா – தமிழ்த் தாய்: மூணாவது தெரு முக்குல குடியிருக்காங்க..

  1. ‘சாதி ஒழிப்பும் தனித்தமிழ் நாடும்தான் என் உயிரினும் மேலான இரு கொள்கைகள்’ என்றார் பெரியார்.

  2. மிகச் சரியான பார்வை.
    தேவநேயப் பாவாணர் திராவிடத்தாய் என்ற நூல் எழுதியுள்ளார்.அவருக்கு அளிக்கப்பட்ட பட்டம் ’திராவிட மொழி நூல் ஞாயிறு’ என்பதுதான்.ஆனால்,திராவிட என்ற சொல்லை நீக்கிவிட்டு மொழிஞாயிறு என்று மட்டும் தமிழ் விரும்பிகள் கூறுகின்றனர்.நாம் எடுக்கவேண்டிய ஆயுதத்தை எதிரிதான் தீர்மானிக்கிறான் என்பதற்கொப்ப, பெரியார் ஆரியத்துக்கு எதிராக திராவிடர் என்ற சொல்லக் கையாண்டார்.
    மற்றபடி திராவிட மொழி என்பது தமிழ் மொழிதான்.தமிழில் இருந்து பிரிந்த மொழிகளே தெலுகு,கன்னடம்,மலையாளம் எனத் தமிழ் கற்ற பலரும் சொல்லுகின்றனர்.ஆனால்,அவை தமிழில் இருந்து பிருரிந்தவை அல்ல;திரிந்தவை என்கிறார் பெரியார்.அதற்கான ஆதாரங்களையும் எடுத்துக் காட்டுகிறார்.(http://thamizhoviya.blogspot.in/2011/02/blog-post_24.html)
    பெரியாரை எதிர்க்கும் முடிவை எடுத்துவிட்ட தமிழ் தேசிய(ஜாதிய)வாதிகள் பெரியார் தமிழுக்கு என்று மட்டும் திரும்பத் திரும்பக் கூறுகிறார்களே அன்றி,தமிழ் குறித்த அவரது கேள்விகளுக்கு நேரடியாகப் பதில் சொல்வதில்லை.

  3. – பெரியாரை எதிர்க்கும் முடிவை எடுத்துவிட்ட தமிழ் தேசிய(ஜாதிய)வாதிகள் பெரியார் தமிழுக்கு எதிரி என்று மட்டும் திரும்பத் திரும்பக் கூறுகிறார்களே அன்றி,தமிழ் குறித்த அவரது கேள்விகளுக்கு நேரடியாகப் பதில் சொல்வதில்லை- எனத் திருத்தி வாசிக்கவும்.நன்றி.

  4. ‘உங்க பாரதமாத வீட்டுக்கு பக்கத்து வீட்ல.’ Anna palamurai madaikalil Congresskaranuku pathil sonathu……….

Leave a Reply

%d