ஜாதி மறுப்பு திருமணங்களுக்கு எதிராக, குறிப்பாக தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஆண், ஜாதி இந்து பெண்ணை திருமணம் முடித்தால் வெறிகொள்கிறார்கள் சூத்திரர்கள்.
தாழ்த்தப்பட்ட மக்களின் வீடுகளை தீ யிட்டு முற்றிலுமாக அவர்களின் வாழ்க்கையை சீரழிக்கிற, அவர்களை கொலை செய்கிற இன்றைய ஜாதி வெறியர்களின் மோசமான செயல்களுக்கு நடுவே,
திராவிடர் கழகத்தின் இந்த விழா முக்கியமான ஒரு பெரியார் பணி.
ஜாதி மறுப்பு திருமணத்தை ஆதரித்து பேசுகிற தலித் அல்லாத முற்போக்காளர்கள் கூட, தன் ஜாதி பெண்ணை தலித் இளைஞன் திருமணம் முடிக்கிறான் என்றால், அதை எப்படியாவது தடுக்கப் பார்க்கிறவர்கள் மத்தியில்,
இன்னும் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது தி.க வின் ஜாதி மறுப்பு திருமண விழா.
ஆகையால், திராவிடர் கழகத் தோழர்களுக்கு நமது வாழ்த்துகளையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்வது, நிச்சயம் நமது கடமை.
தொடர்புடையது:
‘ஞாநி’ யை நான் கவுண்டமணியுடன் ஒப்பிடவில்லை
தருமபுரி: தலித் மக்கள் மீது வன்னிய ஜாதி வெறி தாக்குதல்; மத்த ஜாதிக்காரர்கள் யோக்கியமா?
பிராமணாள் கபே: தலையில் பிறந்தவர்களா-தந்தை பெரியாரா?
ஷிவ்ராம் அய்யர்-சௌம்யா அய்யர்-Splendor அய்யர்: ஜாதியை ஒழிச்ச HERO
Splendor பறையர்; விளம்பரபடுத்த தயாரா? அல்லது Splendor அய்யருக்கு முடிவு கட்டிய பெரியார் தொண்டர்கள்

