ஜாதி வெறியர்களுக்கு ரத்தக் கொதிப்பை ஏற்றும் திராவிடர் கழகம்; ‘இப்ப என்னா பண்ணுவ?’

ஜாதி மறுப்பு திருமணங்களுக்கு எதிராக, குறிப்பாக தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஆண், ஜாதி இந்து பெண்ணை திருமணம் முடித்தால் வெறிகொள்கிறார்கள் சூத்திரர்கள்.

தாழ்த்தப்பட்ட மக்களின் வீடுகளை தீ யிட்டு முற்றிலுமாக அவர்களின் வாழ்க்கையை சீரழிக்கிற, அவர்களை கொலை செய்கிற இன்றைய ஜாதி வெறியர்களின் மோசமான செயல்களுக்கு நடுவே,

திராவிடர் கழகத்தின் இந்த விழா முக்கியமான ஒரு பெரியார் பணி.

ஜாதி மறுப்பு திருமணத்தை ஆதரித்து பேசுகிற தலித் அல்லாத முற்போக்காளர்கள் கூட, தன் ஜாதி பெண்ணை தலித் இளைஞன் திருமணம் முடிக்கிறான் என்றால், அதை எப்படியாவது தடுக்கப் பார்க்கிறவர்கள் மத்தியில்,

இன்னும் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது தி.க வின் ஜாதி மறுப்பு திருமண விழா.

ஆகையால், திராவிடர் கழகத் தோழர்களுக்கு நமது வாழ்த்துகளையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்வது, நிச்சயம் நமது கடமை.

தொடர்புடையது:

‘ஞாநி’ யை நான் கவுண்டமணியுடன் ஒப்பிடவில்லை

தருமபுரி: தலித் மக்கள் மீது வன்னிய ஜாதி வெறி தாக்குதல்; மத்த ஜாதிக்காரர்கள் யோக்கியமா?

பிராமணாள் கபே: தலையில் பிறந்தவர்களா-தந்தை பெரியாரா?

ஷிவ்ராம் அய்யர்-சௌம்யா அய்யர்-Splendor அய்யர்: ஜாதியை ஒழிச்ச HERO

Splendor பறையர்; விளம்பரபடுத்த தயாரா? அல்லது Splendor அய்யருக்கு முடிவு கட்டிய பெரியார் தொண்டர்கள்

மூன்று தமிழர்களை தூக்கிலிட துடிக்கும் ‘தினகரன்’

12 thoughts on “ஜாதி வெறியர்களுக்கு ரத்தக் கொதிப்பை ஏற்றும் திராவிடர் கழகம்; ‘இப்ப என்னா பண்ணுவ?’

 1. இதனோடு சொத்து மறுப்பு,வருமான மறுப்பு என்பதையும் இணைக்க வாய்ப்புள்ளதா?
  சீக்கிரம் யாராவது செயல்படுத்துங்க….

 2. மிக நல்ல விஷயம்….பகிர்வுக்கு மிக்க நன்றி……

  நன்றி,
  மலர்
  http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

 3. ஓய் பிராமனாள்ஸ்…………..

  நம்ம மதிமாரனுக்கு உங்க ஜாதியில் இருந்து பொண்ணு குடுத்துடுங்க பாவம். அவரும் ரொம்ப நாளா புலம்புகிறார். பிராமனாளை கட்டிண்டு பப்பு சாதமும் நெய்யும் போல நன்னா வாழட்டும்.

  🙂 🙂

 4. திராவிடர் கழகத்தோடு கருத்து வேறுபாடுகள் உள்ள போதிலும் அவர்களின் இந்த முயற்ச்சிக்கு நீங்கள் ஆதரவு அளிப்பது மகிழ்ச்சி தருகிறது. சில செயல் முறை சிக்கல்கள் இருந்தாலும், பெரியாரிய, அம்பேத்கரிய, மார்க்சிய மற்றும் முற்போக்கு சிந்தனையாளர்கள் ஒரு சில அடிப்படை மக்கள் பிரச்சனைகளில் ஒன்றாக சேர்ந்து செயல்பட்டால் ஏற்ற தாழ்வற்ற சமதர்ம சமுதாயம் வெகு விரைவில் அமையும் என்பது என்னுடைய தாழ்மையான கருத்து.

  சில ஆண்டுகளாக தங்கள் தளத்தை வெகு ஆவலுடன் பார்வையிட்டும், நண்பர்களுக்கு பரிந்துரைத்து வந்தாலும் முதல் முறையாக இப்போது தான் பின்னூட்டம் இடுகிறேன். தங்களின் பணி மிகுந்த பாராட்டுக்குறியது. சல சிக்கலான பிரச்சனைகளில் தங்களது பதிவுகள் கருத்தாழத்தோடு மட்டும்மில்லாமல் படிப்பவர்கள் எளிதாக புரிந்து தெளிவு பெறக்கூடிய வகையில் அமைவது சிறப்பு. தங்களின் கொள்கை சமரசமில்லாத இப்பணி மென்மேலும் தொடர்ந்து நடைபெற எனது வாழ்த்துக்கள்.

  பி.கு: தமிழில் எழுதி பழக்கமில்லாததால் பிழைகள் இருந்தால் மண்ணிக்கவும்.

 5. தி.க.வின் காலத்திற்கேற்ற பணியைப் பாராட்டியமைக்கு நன்றியும் பாராட்டும்.

  இம்முறை தி.வி.க.,த.பெ.தி.க தோழர்கள் கூட இப்பணிக்கு ஆதரவாகப் பேசிவருவது நல்ல மாற்றம்.ஒரு வகையில் நம் எதிரிகள்தான் நம்மை ஒன்றுபடுத்துகிறார்கள் போல.

  நிறுவனம்-அமைப்பு முறைகளில் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம்;கொள்கையை முன்னெடுப்பதில் கருத்து வேறு பாடுகளோ,செயல்பாடுகளில் மாறுபாடுகளோ இல்லாமல் பெரியார் தொண்டர்கள் இயங்கினாலே அது பெரியாரியத்தை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்லும்.இந்த மாற்றம் தொடரட்டும்.

  இப்போதைய நம்முடைய பணி பெரியாரை இன்றைய தலைமுறைக்கு எடுத்துச் செல்வதாக இருக்கவேண்டும்.அதற்கு நம் செயல்பாடுகளில் முன்னுரிமை அளிக்கவேண்டும்.

 6. அய்ந்து ஆண்டுகள் மருத்துவ அறிவியல் கற்ற மருத்துவர் இராமதாசு அவர்களின் நெஞ்சத்தில் சாதி என்ற நஞ்சை கலக்கவிட்டதனால் அவர் ஒரு பிற்போக்குவாதி ஆகிவிட்டார். இனிமேலும், அவர் தமிழ் என்றோ தமிழன் என்றோ பேசுவதற்கு ஒரு விழுக்காடு தகுதிகூட அவருக்கு இல்லை. ஒரு அய்ம்பது ஆண்டுகள் பின்னோக்கிச் சென்று வாழ்வது போன்று, சாதி என்ற மலத்தை மனதில் சுமக்கும் அவருக்கு பெரியார் தொண்டர்கள் சார்பில் அவரைக் கடுமையாக எச்சரிக்கிறோம். அவரது சாக்கடைச் சாதி வெறியின் மீது, அவர் முகத்தின் மீது மலத்தால் அடித்த ஒரு நிகழ்வுதான் இந்த சாதி மத மறுப்புத் திருமண இணை தேடல் நிகழ்வு! இனிமேலாவது இராமதாசு மனிதத்தன்மையை மனதில் வளர்த்துக்கொண்டு, மனிதனாக அவர் திருந்தி வாழ வேண்டுகிறோம். திராவிடர் கழகத்துக்கு, தோழர்களுக்கு பெரியார் தொண்டர்கள் சார்பாக வாழ்த்தையும் நன்றியையும் கூறிக் கொள்கிறேன்.
  நேற்று தமிழறிஞர் இறைக்குருவனார் அவர்கள் நேற்று இயற்கை எய்திய செய்தி கேள்விப்பட்டு நெஞ்சம் வருந்தினோம். அவரது மறைவு தமிழ் உணர்வாளர்களுக்கு இனி ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். பாவலரேறு அய்யா பெருஞ்சித்திரனார் அவர்களின் மருமகன் என்ற ஒரு தகுதியே போதும் அவரின் உயர்மதிப்பிற்கு! அந்த தூயதமிழனுக்கு தந்தை பெரியாரின் உண்மைத் தொண்டர்கள் சார்பாக வீரவணக்கத்தை செலுத்தி அவருக்கு இறுதிவிடை கொடுக்கிறோம்.
  காசிமேடுமன்னாரு.

 7. Dharumapuri kalavaram panniya vanniya Docturae! Un anotomy yil vanniya ratham Paraiyar ratham kandirundhaal niroobikka thayaaraa? Un jaathi veri Thanthai Periyaar Mannil Palikkaadhu. Ini un katchi yin anaithu nadavadikkaikalilum , Periyaar, Ambedkar, Marx padam payan padutha endha vidha thahudhiyum illai. Udanae avattrai ahattru. Mandral kanda Periyaar Thidal vizhithezhundhu vittadhu. Ini naangal poruppadhillai. Jaathi veri podiyaahum. Thamizh inam unnai oramkattum. Thalayaal thanni kudichaalum kaadhalaiyum jaathi maruppiyum unnaal thadukkavae mudiyaadhu. Yen endraal idhu Periyaar Man; Naangal Periyaarin Perangal.

Leave a Reply

%d bloggers like this: