Site icon வே. மதிமாறன்

தலித் ‘ஞானப்பழம்’

???????????????????????????????

இப்போதெல்லாம் தலிதல்லாதவர்கள், தலித் அரசியலை, தலித் எழுத்தாளர்களை, ஆதரிக்கிறார்களே?

-வினாயகம், பாண்டி.

தீவிரமான இந்துமத எதிர்ப்பு, பார்ப்பன எதிர்ப்பு, காந்தி எதிர்ப்பு, இடை நிலை ஜாதிகளின் தலித் விரோத ஜாதி வெறியை அம்பலப்படுத்துவது இவைகளின் வழியாக டாக்டர் அம்பேத்கரை புரிந்து கொள்வது. தலித் அல்லாதவர்களிடம் அவரை பற்றி பேசுவது, எழுதுவது இதுதான் தலித் ஆதரவு அரசியல்.

மாறாக, இவைகள் எதையும் பெயரளவில் கூட செய்யாமல்;  பவுத்தத்தை, தலித் எழுத்தாளரை, தலித் பத்திரிகையாளரை, தலித் தலைவரை ஆதரிப்பதும், ஒப்புக்கு அம்பேத்கர் பெயரை பயன்படுத்துவதும், அம்பேத்கருக்கு மாற்றாக தலித் உட்ஜாதி தலைவரை நிறுவுவதும் அதன் மூலம் தன்னுடைய ‘தலித் ஆதரவு கணக்காக’ எழுதிக் கொள்வது கடைதெடுத்த அயோக்கியத்தனம் மட்டுமல்ல; அதுக்குப் பேர்தான் ‘நோவாம நோம்பு கும்புடறது’.

‘அம்மையப்பன்தான் உலகம் உலகம்தான் அம்மையப்பன்’ என்று ஞானப்பழத்தை அபகரித்துக்கொண்ட விநாயகனின் மோசடிக்கு இணையானது.

இப்படி செய்வதின் மூலமாக இவர்கள் தங்களின் தலித் விரோதிகளின் தோழைமையை தக்க வைத்துக் கொள்கிறார்கள். தங்களின் சுயஜாதி உணர்வை மறைத்துக் கொள்கிறார்கள். இவைகளோடே தலித் ஆதரவாளர்களாகவும் இருந்து கொண்டு, தங்களை எல்லா தரப்பிற்கும் ஏற்ற ஏகாம்பரமாக அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள்.

இவர்களால் பாராட்டபட்ட தலித் எழுத்தாளர்களும், பத்திரிகையாளர்களும் அதற்கு கைமாறாக, சந்தர்ப்பவாதிகளை பெரிய போராளியாக பாராட்டி சான்றிதழ் வழங்கி விடுகிறார்கள்.

சந்தர்ப்பாதிகளுக்கும் சந்தர்ப்பவாதிகளுக்குமான அக்ரிமெண்ட்.

மாறாக,  டாக்டர் அம்பேத்கரை அவரின் போர்குணத்தோடு கடைப்பிடிப்பவர்களையும் தலித் விரோதிகளை அம்பலப்படுதுபவர்களையும் தலித் – தலித் அல்லாதவர்களின் இந்தக் கூட்டணி ஒன்று சேர்ந்து புறக்கணிப்பார்கள் என்பது அதில் சிறப்பு செய்தி.

*

தங்கம் 2013 ஏப்ரல்  மாத இதழில் வாசகர் கேள்விக்கு நான் எழுதிய பதில்.

தொடர்புடையவை:

`தலித்துகள்’ என்று சொல்வது தவறு

வன்கொடுமை தடுப்புச் சட்டமும் பிற்படுத்தப்பட்டவர்களும்

‘இந்த நூலை எழுதுவதற்கு எனக்கு என்ன தகுதி இருக்கிறது

என்பதற்கு இந்த நூலே சிறந்த சான்றாகும்.’

அம்பேத்கர் என்னும் ஆபத்து

‘அம்பேத்கர் இந்திய தேசியத்தை ஆதரித்தார்..’ ஆமாம் இப்போ இன்னாங்குற அதுக்கு?

Exit mobile version