தமிழால் ‘இந்து’வாக இணையச் சொல்லுகிற நாளிதழுக்கு மறுப்பு

swastik2

தமிழால் இணைகிற ‘தி இந்து’ நாளிதழில், ‘எம்.எஸ்.எஸ். பாண்டியன்: இன்றைய சுயமரியாதை இயக்கத்தின்‌‌ மறதி’ என்ற தலைப்பில் சி.லக்‌ஷ்மணன் – அன்புசெல்வம் இருவர் எழுதியக் கட்டுரையை மறுத்து நான் எழுதியது:

*

பிரச்சினையை தலைகீழாகச் சொல்கிறது கட்டுரை.

பெரியாருக்குப் பின் தமிழ் நாட்டில் இந்து மத எதிர்ப்பு, பார்ப்பன எதிர்ப்பு அரசியல் வளரவில்லை. மாறாகப் பெரியார் எதிர்ப்பு அரசியல் தான் வளர்ந்திருக்கிறது. பெரியாரை எதிர்த்து, தமிழ்த்தேசிய அரசியல் என்று நிகழ்த்தப்படுவதில்… ஜாதி அரசியல், பாரப்பன ஆதரவும் தான் நடக்கிறது.

பெரியாரை தமிழன விரோதி என்று சித்தரித்து விட்டு பச்சையான தமிழன விரோதிகளோடனும் ஜாதிவெறியர்களுடனும் தான் அரசியல் செய்கின்றனர். டாக்டர் அம்பேத்கரை திட்டமிட்டு நிராகரிக்கிற வேலையும் நடக்கிறது.

பெரியாருக்குப் பின் எழுப்பப்பட்ட தலித் அரசியல், ஜாதி அரசியல் என்ற ‘உட் ஜாதி’ வட்டத்தைத் தாண்டி வரவே இல்லை. இன்னொரு வகையில் டாக்டர் அம்பேத்கரை புறக்கணிக்கற என்.ஜி.ஓ அரசியலாகவும் அடையாளமாகிப்போனது.

தலித் எழுத்து, தலித் அரசியல், தலித் இலக்கியம் என்று பொதுவாகப் பேசுகிறவர்கள் கூட, அவர் எந்த உட் ஜாதியை சேர்ந்தவரோ அந்த ஜாதி தலைவரை தான் ஆதரிப்பார்.

கடந்தகாலத் தலித் தலைவர்களில் கூடத் தன் உட்ஜாதியை சேர்ந்த தலைவரைதான் பரிந்துரைக்கிறார். தன் ஜாதிக்கு வெளியே, டாக்டர் அம்பேத்கர் ஒருவரைத் தவிர, தன் ஜாதியல்லாத ஒரு நபரைக் கூட சிலர் ஆதரிப்பதில்லை.

பெரியாரை எதிர்த்தாலும் அது, உட் ஜாதியைத் தாண்டிய தலித் அரசியலாக தலித் அறிவாளிகள் மத்தியில் கூட வளரவில்லை.

தலித் அரசியலிலும் பெரியார் எதிர்ப்பு, பெரியார் புறக்கணிப்புச் செய்து, தலித் விரோதிகளுடன் கூட்டணி வைத்துக் கொண்டார்கள்.
தமிழ்த்தேசிய அரசியல், தலித் அரசியல் இவை குறித்துத் தீவிரமாக எழுதிகிற அறிவாளிகள்;
ஜாதியத் தலைவர்கள், தலித் விரோதத் தலைவர்களுக்கு எதிராக எழுதியதை விட, முற்போக்காளர்களுக்கு எதிராக இயங்கியதுதான் அதிகம். இன்று இந்த இரண்டு அரசியலுக்குள்ளும் பெரியார் எதிர்ப்பு, காரல் மார்க்ஸ் மற்றும் கம்யுனிச புறக்கணிப்பு, எதிர்ப்பு என்பதுதான் தீவிரமாக நடைபெறுகிறது.

பார்ப்பனியம் என்று சொல்வதற்குக் கூட தயங்கி ‘பிராமணியம்’ என்றே சொல்கிறார்கள் தமிழ்த் தேசிய, தலித் அரசியல் அறிவாளிகள். இந்தக் கட்டுரையும் அதற்குச் சாட்சி.

தலித் விரோத தலைவர்களுடன், கட்சிகளுடன் எல்லாவகையிலும் சமரசம் செய்து செய்து கொண்டு கூட்டணி வைத்துக்கொள்ள துடிக்கிற தலித் தலைவர்கள், தங்களுக்குள் கூட்டணி வைத்துக்கொள்வதற்கு பெயர் அளவில் கூட முயற்சிப்பதில்லை.

அதேபோல், தலித் தலைமைக் கொண்ட கட்சியில் தலித்தல்லாதவர்கள் ஏதோ சில காரணங்களுக்காக இணைகிறார்கள். இருக்கிறார்கள். ஆனால், தலித் உட் ஜாதியை சேர்ந்தவர்கள், தன் ஜாதி தலைமையல்லாத கட்சியில் பெரும்பாலும் இணைவதில்லை. மாறாக தலித் விரோதக் கட்சியில் இணைகிறார்கள். இருக்கிறார்கள்.

இன்றைய தலித்விரோத தழிகத்திற்கு, பெரியாருக்குப் பின் துவங்கப்பட்ட பெரியார் எதிர்ப்பு, புறக்கணிப்பு அரசியலும் முக்கியக் காரணம். பெரியாரை தலித் விரோதியாகச் சித்திரித்துவிட்டு, தலித் விரோதிகளுடன் கூட்டணி வைத்துக்கொண்டு… தலித் விரோதிகளுக்கு டாக்டர் அம்பேத்கர் விருதும் தந்தால்.. தலித்தல்லாத கூட்டணி வராமல், தலித் விடுதலை கூட்டணியா வரும்?

‘தலித்தல்லாத கூட்டமைப்பில்’ உள்ள ஜாதியத் தலைவர்கள் எல்லோரும் எப்படிப் பெரியார் எதிர்ப்பு, டாக்டர். அம்பேத்கர் எதிர்ப்பு, மார்க்ஸ் புறக்கணிப்பு என்று இருக்கிறார்களோ அதுபோலவே தமிழ்த் தேசிய, தலித் அரசியலிலும் இருப்பது என்ன நியாயம்?

ஆக, தலித்தல்லாதவர்களைக் கூடுதலாக கட்சியில் சேர்க்க வேண்டும் என்பதற்காக, டாக்டர் அம்பேத்கரை மெல்ல கை விடுகிற தலித் இயக்கங்களும்,
பெரியாரை விடப் பிரபாகரனுக்கு முக்கியத்துவமும்… ஜாதி ஒழிப்பு, இந்து மத எதிர்ப்பில் பெரியார் வழியாக டாக்டர் அம்பேத்கருக்குக் கொடுக்க வேண்டிய இடத்தை, பிரபாகரனுக்கும், தமிழ்த் தேசிய அரசியலுக்கும் கொடுத்த பெரியார் இயக்கங்களும்…

இந்து மத எதிர்ப்பு, பார்ப்பன எதிர்ப்பைப் தீவிராகப் பேசுவதை கை விட்டதினாலும் தான் இந்த நிலை.

பெரியாருக்குப் பின் தமிழகத்தில் முற்போக்காளர்களிடம் இருக்கிற பார்ப்பன ஆதரவு மனநிலையே, இன்றைய சீர் அழிவுக்குக் காரணம்.
இந்தக் கட்டுரை கூடப் பெரியார் மீது அன்பு கொண்டு விமர்சனப் பார்வையோடு பெரியாரை அடுத்தக் கட்டத்திற்குக் கொண்டுபோவது போல் தோற்றமளித்தாலும்;

சுற்றி வளைத்து இது செய்கிற காரியம் பார்ப்பனிய ஆதரவையும், ‘பார்ப்பனியத்தை விமர்சிப்பதை தவிர்க்க வேண்டும்’ என்று சொல்வதையும் தான்.

இந்தக் கட்டுரை செய்கிற வேலை தான், கடந்த 30 ஆண்டுகாலத் தமிழகத்தின் ‘முற்போக்கு’ அரசியல்.
பார்ப்பனியத்தோடு உறவாடத் துடிக்கிற ‘முற்போக்கு’, பார்ப்பனியத்தையே வாழ வைக்கும். ஒரு போதும் அது எளிய மக்களுக்கு பயன் தராது.

*

கட்டுரையில், சாரதா சீனிவாசன் என்பவர் குறிப்பிட்டதாகச் சொல்லப்படுகிற ஆய்வில்:
‘கொங்கு வேளாளர் கவுண்டர் மத்தியில் பெண்களில் எண்ணிக்கை குறைவானதாகவும், ஆண்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாகவும், இது அகமண முறைக்கு வரன் தேடுதல் சடங்கில் நிலவும் சரியான ஜாதகப் பொருத்தம் இல்லை என்பதாகும்.
இதனால் புற்றீசல்போலப் பெருகிய பல்வேறு வரன்தேடும் விழாக்களில் கலந்து கொள்ளும் கொங்கு வேளாளர் ஆண்கள் தற்போது ஏமாற்றத்தின் – விரக்தியின் விளிம்பில் நிற்கிறார்கள்.’ என்று சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

இவ்வளவு தீவிரமான ஜாதி உணர்வு கொண்ட கொங்கு வேளாளர்களிடம், கேராளவுக்குச் சென்று பெண் தேடி திருமணம் முடிக்கும் பழக்கம், ஜாதி பழக்கமாகவே கொங்கு வேளாளர் மத்தியில் மட்டுமே இன்று இருக்கிறது.
இதைச் சாரதாவும் இவர்களும் மூடி மறைப்பதற்கான காரணம் என்ன?

ஒரே மொழி அல்லது ஒரே மொழி பேசுகிறவர்கள் வாழ்கிற பகுதிகளில் மொழி சார்ந்த இன உணர்வு இருக்காது. ஜாதி அடையாளமும் ஜாதி உணர்வும் தான் இருக்கும். ஆனால், மற்ற மாநிலத்தைச் சேர்ந்தவர்களைப் பார்க்கும்போது அவர்களின் ஜாதி அடையாளம் தெரியாது, மொழிச் சார்ந்த இன அடையாளம் தான் அவர்களை அடையாளப்படுத்தும்.

அந்தவகையில் தன் ஜாதியில் நிலவுகிற பெண்கள் பற்றாக்குறையைப் போக்க, கொங்கு வேளாளர் என்கிற ‘பச்சைத் தமிழர்கள்’ வேறு தமிழ் ஜாதியில் மணம் முடிப்பதை தவிர்ப்பதற்கே மலையாளப் பெண்களைக் கேரளா சென்று ஜாதி, மொழித் தாண்டி மணம் முடிக்கிறார்கள். அதில் அவர்கள் வரதட்சனை போன்ற விசங்களைக் கூட தவிர்க்கிறார்கள்.

23 November 07:35

தி இந்து தமிழ் நாளிதழ் : மவுண்ரோட் மகாவிஷ்ணு; அதே குட்டை இன்னொரு மட்டை

‘புரட்சிகர மாற்றம்! தி இந்து’ வில். ஆச்சரியம் ஆனால் உண்மை; அதே விலை!

5 thoughts on “தமிழால் ‘இந்து’வாக இணையச் சொல்லுகிற நாளிதழுக்கு மறுப்பு

  1. வே.மதிமாறன் அவர்களுக்கு நல்ல புத்தியையும் மனநிம்மதியையும் வழங்கவேண்டுமென எனது குலதெய்வம் முத்தூர் ஸ்ரீ செல்லகுமாரசாமியை வேண்டுகிறேன்

  2. Senthil Nathan தமது இனத்தின் எதிரியை அழிப்பது எப்படி? என்றும்,

    அதேநேரத்தில் தமது “வியபாரத்தை அமோகமாக”பெருக்குவது எப்படி என்றும்

    ,இந்த ஆரியப்பார்ப்பான பத்திரிக்களான்கிட்டைதான்.மற்ற,மற்ற நபர்கள் கத்துக்கனும்!

    ஆமாம்…

    எமது தமிழ்தேசத்தந்தைபெரியார் அவர்களைப்பற்றி தொடர்ச்சியாக பல கட்டுரைகளை வெளியீட்டு வருவது மூலம்,

    வியபாரமும் பெருகுது!

    அதேநேரத்தில் அவனது “வஞ்சகமும்”தீருது!!!
    23 November at 04:10 · Edited · Unlike · 7

    Bhim Raj Gandhi · Friends with பிரபா அழகர் and 123 others
    Enda Kurruvaayoorappaa!!!
    23 November at 04:11 · Unlike · 1

    டி.வி.எஸ். சோமு Arumai nandri
    23 November at 04:11 · Unlike · 1

    பிரபா அழகர் // தமிழால் இணைகிற ‘தி இந்து’ நாளிதழில் //

    உங்கள் பதிவின் தொடக்கமே செம தூள் தோழர் .. சிறப்பான பதில்!
    23 November at 04:14 · Unlike · 6

    வே மதிமாறன் தலித் அரசியல் ஜாதி அரசியல்என்ற ‘உட் ஜாதி’ வட்டத்தைத் தாண்டி வரவே இல்லை. இன்னொரு வகையில் டாக்டர் அம்பேத்கரை புறக்கணிக்கற என்.ஜி.ஓ அரசியலாகவும் அடையாளமாகிப்போனது.
    23 November at 04:35 · Edited · Like · 12

    Bhim Raj Gandhi · Friends with பிரபா அழகர் and 123 others
    yes… மதம் மாறிய ஒரு தலித் தன்னை BC யாக பார்க்கிறானே தவிர SC ஆக அல்ல. , நமக்கு கிடைக்கும் இட ஒதுக்கீடு அவர்களுக்கு பொறாமையை விதைக்கிறது..
    Bhim Raj Gandhi’s photo.
    23 November at 04:27 · Edited · Like · 4

    Vcksiva Bharathi · 12 mutual friends
    Yes… Unmai nandri ayya..
    Vcksiva Bharathi’s photo.
    23 November at 04:37 · Unlike · 2

    வே மதிமாறன் தலித் விரோத தலைவர்களுடன், கட்சிகளுடன் எல்லாவகையிலும் சமரசம் செய்து செய்து கொண்டு கூட்டணி வைத்துக்கொள்ள துடிக்கிற தலித் தலைவர்கள், தங்களுக்குள் கூட்டணி வைத்துக் கொள்வதற்கு பெயர் அளவில் கூட முயற்சிப்பதில்லை.
    23 November at 05:16 · Edited · Like · 11

    Bhim Raj Gandhi · Friends with பிரபா அழகர் and 123 others
    # தலித் தலைவர்கள், தங்களுக்குள் கூட்டணி வைத்துக்கொள்வதற்கு பெயர் அளவில் கூட முயற்சிப்பதில்லை. ………….#

    Simple… EGO!
    23 November at 05:18 · Like · 4

    Gopal Govindan நெத்தியடி பதில். போட்டிருக்க மாட்டார்களே… வாழ்த்துகள் மதிமாறன். நல்ல பதிலடி.
    23 November at 07:12 · Unlike · 4

    வே மதிமாறன் பார்ப்பனியம் என்று சொல்வதற்குக் கூட தயங்கி ‘பிராமணியம்’ என்றே சொல்கிறார்கள் தமிழ்த் தேசிய, தலித் அரசியல் அறிவாளிகள். இந்தக் கட்டுரையும் அதற்குச் சாட்சி.
    23 November at 10:06 · Edited · Like · 3

    Pus Kin · Friends with பரிமள ராசன் and 59 others
    கேரளா போய் கல்யாணம் செய்யும் கொங்கு வேளாள கவுண்டர்கள், புரோக்கர்களிடம் சொல்லும் முதல் நிபந்தனையே, பெண் தலித்தாக இருக்கக்கூடாது என்பதுதான்.
    23 November at 08:03 · Unlike · 5

    Venki Mohan · Friends with Anbu Veera and 42 others
    தந்தை பெரியாரை உச்சரிக்காமல் எந்த ஒரு இயக்கமும் வேறூண்ற முடியாது.
    23 November at 08:30 · Unlike · 4

    Pa Dileepan நெத்தியடி, செம அடி, சரிதான், தலித் அரசியல் ‘உட் ஜாதி’ வட்டத்தைத் தாண்டி வரவே இல்லை என்பதும் சரிதான், ஆனால் இது திராவிட இயக்கத்தின் தோல்வி என்று ஏன் பார்க்கக்கூடாது? தி.மு.க என்று இருந்த கட்சி இப்போது குடும்பக் கட்சியாகவும், சாதி அடிப்படையிலான பல கட்சிகளாகவும் பிளவுபட்டு நிற்கிறது? தலித்துக்களுக்கு அங்கே இடமில்லை. இயக்கத்தால் கைவிடப்பட்டு தனிக் கட்சி துவக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டார்கள் தலித்துக்கள். இயக்கத்திலிருந்து உதித்த கட்சிகள் எல்லாம் “திராவிட” என்ற சொல்லை விடவில்லை, அவர்கள் உட்கட்சி சாதி வட்டத்தையும் தாண்டவில்லை. இந்த நிலையில் தலித்துக்களை மட்டும் சாடுவது, நெத்தியடி கொடுப்பது இவைகளால் யாருக்கு என்ன பயன்? தி இந்து கட்டுரை வைக்கும் குற்றச்சாட்டு முக்கியமான ஒன்று, அதற்கு இயக்கம் கட்டாயம் பதிலளிக்க வேண்டும். அந்த பதில் தலித்தை சாடுவதாக இல்லாமல் தலித் என்று பிரித்துப்பார்க்கும் அளவுக்கு இயக்கம் சரிந்துவிட்டதே அது எதனால், எப்படி இந்த நிலையை சரிசெய்யலாம் என்பதில் கவனம் செலுத்துவதாக இருப்பது நலம்.
    23 November at 11:03 · Like · 2

    வே மதிமாறன் நீங்கள் குறிப்பிடுவதைப் போல் நான் எழுதவில்லை. பிரச்சினையை திசை திருப்பாதீர்கள்.
    23 November at 11:38 · Like

    Pa Dileepan மன்னிக்கவும், தலித் கட்சிகளையும் அவர்கள் தலைவர்களையும் யார் என்று பெயர் சொல்லாமல் கண்டித்திருக்கிறீர்கள். அது சரிதான், அனால், நான் சொல்லவருவது என்னவென்றால், இந்த நிலைமைக்கு இயக்கமும் பொறுப்பேற்கவேண்டும் என்பதே. திசை திருப்பவில்லை, உள்நோக்கியும் சிறுது சிந்திக்க ஒரு வேண்டுகோள், அவ்வளவுதான் …
    23 November at 11:50 · Like

    Selvaraj Ksraj · Friends with Janaki Raman and 3 others
    தமிழால் இணைவதுஎன்ரால் தமிழர்கள் ஜாதியால் பிரிந்துஇருக்கிறார்கள் என்று ஒப்புக்கொள்வதுதான் தமிழால் இணைவதுஎன்ரால் தலித் குடும்பங்களில் இடைநிலை ஜாதிகலும் பார்ப்பனர்களும் திருமண உறவை ஏற்ப்பத்திக்கொள்வார்களா?
    23 November at 12:47 · Unlike · 4

    Subash Chandra Bose · 52 mutual friends
    இன்று தலித் மற்றும் இஸ்லாமிய சமூகம் நீங்கலாக அனைத்து சமூக பிரிவிலும் திருமணத்திற்கு பெண் தட்டுப்பாடு நிலவுகிறது. அதற்கு முதன்மை காரணம் 70 களுக்கு மத்தியில் அறிமுகமான ஸ்கேனிங் கருவியும் அதன் மூலம் அடையாளம் காணப்பட்ட பெண் சிசு கருகலைப்புமே.

    வெள்ளைகாரன் கம்பியூட்டர் கண்டுபிடிச்சா நம்மாளுங்க முதலில் அதை ஜோசியம் பார்க்கத் தானே பயன்படுத்தினானுங்க.
    23 November at 14:56 · Edited · Like · 2

    Selvaraj Ksraj · Friends with Janaki Raman and 3 others
    Subash Chandra Bose இன்று தலித் மற்றும் இஸ்லாமிய சமூகம் நீங்கலாக அனைத்து சமூக பிரிவிலும் திருமணத்திற்கு பெண் தட்டுப்பாடு நிலவுகிறது. அதற்கு முதன்மை காரணம் 70 களுக்கு மத்தியில் அறிமுகமான ஸ்கேனிங் கருவியும் அதன் மூலம் அடையாளம் காணப்பட்ட பெண் சிசு கருகலைப்புமே.

    வெள்ளைகாரன் கம்பியூட்டர் கண்டுபிடிச்சா நம்மாளுங்க முதலில் அதை ஜோசியம் பார்க்கத் தானே பயன்படுத்தினானுங்க.9 hrs · Edited · Like · 1
    Write a comment…மனிதஉணர்வுகளை செயல்படுத்த கருவிகள் பயன்பத்தப்படுகிறது ஜோசியம் பார்ப்பதும் சிசுகொலை செய்வதும் ஏர்க்கனவே சமூகத்தில் உல்லவைதானே நவீனகண்டுபிடிப்புகள் சீர்கேடுகலை துரிதப்படுத்த உதவுகின்றன
    Yesterday at 00:16 · Like · 2

    வே மதிமாறன் அதேபோல், தலித் தலைமைக் கொண்ட கட்சியில் தலித்தல்லாதவர்கள் ஏதோ சில காரணங்களுக்காக இணைகிறார்கள். இருக்கிறார்கள். ஆனால், தலித் உட் ஜாதியை சேர்ந்தவர்கள் தன் ஜாதி தலைமையில்லாத கட்சியில் பெரும்பாலும் இணைவதில்லை. மாறாக தலித் விரோதக் கட்சியில் இணைகிறார்கள். இருக்கிறார்கள்.
    Yesterday at 01:23 · Edited · Like · 5

    பிரபா அழகர் // அதேபோல், தலித் தலைமைக் கொண்ட கட்சியில் தலித்தல்லாதவர்கள் ஏதோ சில காரணங்களுக்காக ஏற்றுக் கொண்டு கட்சியில் இணைகிறார்கள். இருக்கிறார்கள். ஆனால், தலித் உட் ஜாதியை சேர்ந்தவர்கள் தன் ஜாதி தலைமையல்லாத கட்சியில் பெரும்பாலும் இணைவதில்லை. மாறாக தலித் விரோதக் கட்சியில் இணைகிறார்கள். இருக்கிறார்கள். //

    நுட்பமான பார்வை தோழர் ..
    Yesterday at 01:22 · Like · 1

    வே மதிமாறன் நன்றி பிரபா.
    Yesterday at 01:38 · Like · 1

    Meena Somu · Friends with பிரபா அழகர் and 181 others
    அருமையான அலசல். மிக நீண்ட நாளாக எழுத நினைத்த விஷயம். அவசியமான பார்வை. உணர்ச்சி அரசியலில் பலியாகும் பெரியார், அம்பேத்கர் கருத்துக்களும் மார்க்சியமும் மீட்டேடுக்கப்படவேண்டியிருக்கிறது. இந்த தமிழ் தேசிய பார்ப்பனிய சிந்தனைகளையும் உட்சாதி தலித்திய அரசியலும் பெரியார், அம்பேத்கரால் உருவாக்கப்பட்ட சாதிய எதிர்ப்பு மனநிலையை அரித்துக்கொண்டிருக்கின்றன. அதை வெளிச்சமிடும் தங்களது பதிவுக்கு நன்றி. பகிர்கிறேன்.

Leave a Reply

%d bloggers like this: