ருத்ரையா-எம்.எஸ்.எஸ். பாண்டியன்; ஒப்பாரி வைப்பதால் என்ன பயன்?

kupandian_cropped_too
இயக்குநர் ருத்ரையா வை 1992 ஆம் ஆண்டு, நவம்பர் மாதம் நண்பர் தீஸ்மாஸ், (Theesmas Desilva) இயக்குநர் அருண்மொழி,(Arunmozhi Sivaprakasam) நான் மந்தைவெளியில இருந்த அவர் வீட்டில் சந்ததித்தோம். நாங்கள் நடத்திய ‘இசைஞானி இளையராஜா ரசிகன்’ இதழின் சிறப்புப் பேட்டிக்காக.

இளையராஜாவுடனான அவர் அனுபங்களைச் சுவரஸ்யமாகப் பகிர்ந்து கொண்டார். அப்போதும் அவர் அடுத்தப் படத்திற்கான முயற்சியில் இருந்தார்.

அவருடன் பழகியவர்கள், இப்போது அவரைப் பற்றி நெகிழ்ச்சியாக எழுதுவதைப் படிக்கும்போது மனது கலக்கமுறுகிறது.
இதுபோன்ற எழுத்துக்களை அவர் இருக்கும்போது எழுதியிருந்தால்.. அவர் இறந்திருக்க மாட்டார்.

அவரின் சிறப்புகளை நெருக்கமாகச் சொல்லுகிற இந்த எழுத்துக்கள், தனியாக இருந்த அவருக்குத் துணையாக இருந்திருக்கும்.

பல ஆண்டுகளுக்கு முன்பே இதுபோன்ற தோழமையான கட்டுரைகள் மூலம் அவர் கொண்டாடப்பட்டிருந்தால்.. அவர் மிகச் சிறந்த 10 சினிமாக்களைத் தந்திருப்பார்.

எம்.எஸ்.எஸ். பாண்டியன் மரணத்தின்போதும் இப்படித்தான் சிறப்புக் கட்டுரைகள் அவரைக் கொண்டாடின.

திறமைசாலிகளைக் கொண்டாடுவதற்கு அவர்கள், ‘தங்கள் உயிரை விட்டிருக்கவேண்டும்’ என்ற நிபந்தனை நம்மிடம் இருக்கிறது.

இரங்கல் கூட்டம் நடத்துவதில் காட்டுகிற வேகத்தை, அவர்களை வைத்துக் கருத்தரங்கம் நடத்துவதில் காட்டியதில்லை.

திரைத்துறையோ, அரசியலோ பிரபலமானவர்களாக இருந்தால் ‘பிரபலத்திற்கே பிரபலம்’ என்பதுபோல் பாராட்டு விழா, விருது விழா நடத்திக் கொண்டாடுகிறவர்கள்; பிரபலமாகாத திறமைசாலிகளுக்கு அந்த விழாவில் கலந்து கொள்வதற்கு அழைப்பிதழ் கூடத் தருவதில்லை.

பெற்றோர்களுக்கு உரிய மருத்துவம் செய்யத் துப்பில்லாத மகன்கள், பெற்றோர் இறந்தப் பிறகு செலவு செய்து கருமாதி செய்வது ஊர் மெச்சதான் என்பதுபோலவே, நாம் நடத்துகிற பல இரங்கல் கூட்டங்களும் அமைந்து விடுகிறது.

செத்தப் பிறகு ஒப்பாரி வைத்து என்ன பயன்?

20 November at 17:04

இயக்குநர் ஸ்ரீதர், எம்.ஆர்.ராதா, கே.பாலச்சந்தர், எம்.ஜி.ஆர் – இது ஒப்பீடல்ல

நவீன சிந்தைனை மரபின் மூத்த அறிவாளி திருவாரூர் தங்கராசு மரணம்

பேராசிரியர் அப்துல்லாஹ் (பெரியார்தாசன்) உடல் தானமும் இஸ்லாமியர்களின் மதஉணர்வும்

இயக்குநர் மணிவண்ணனின் ‘ஆன்மா’ பாரதிராஜா-விகடனை மன்னித்தாலும் துரோகத்தை மன்னிக்காது!

எஸ்.எஸ்.ஆர்: தற்கொலைக்கு முயன்றேன் – பெரியார் என்னை அவமானப்படுத்தி விட்டார்

5 thoughts on “ருத்ரையா-எம்.எஸ்.எஸ். பாண்டியன்; ஒப்பாரி வைப்பதால் என்ன பயன்?

 1. “இரங்கல் கூட்டம் நடத்துவதில் காட்டுகிற வேகத்தை, அவர்களை வைத்துக் கருத்தரங்கம் நடத்துவதில் காட்டியதில்லை.”
  well said!

 2. எம்.எஸ்.எஸ். பாண்டியன்: இன்றைய சுயமரியாதை இயக்கத்தின் மறதி nov 14- 2014
  தி இந்து தமிழ் நவம்பர் 14-2014 நாளிதழில் வெளிவந்த கட்டுரையின் ஒரு பகுதி உங்களது பார்வைக்கு ,,,,

  தமிழகத்தின் கடந்த கால சுயமரியாதை அரசியல் என்பது வெற்றுக் கூச்சலிடும் பிராமண எதிர்ப்பு அரசியலாக மட்டுமே இருந்து விடக்கூடாது என எம்.எஸ்.எஸ்.பாண்டியன் விரும்பினார். அவரின் கனவு நனவாக்கப்படாமல் அது சாதி எதிர்ப்பு அரசியலுக்கும் – பிராமண எதிர்ப்பு அரசியலுக்கும் இடையேயான போதாமையை அம்பலப்படுத்துகிறது. அந்த இடைவெளியை நிரப்ப வேண்டும் என்றால் சாதி எதிர்ப்பை முன்னிறுத்திய நவீன பெரியாரும் அவரைக் கொண்டாடும் எம்.எஸ்.எஸ். பாண்டியனின் செயல்பாட்டுச் சிந்தனைகளும் இன்றைய சுயமரியாதை இயக்கத்துக்கு உடனடித் தேவை.

  அன்புசெல்வம், ஆய்வாளர் – தொடர்புக்கு anbuselvam6@gmail.com
  சி.லக்‌ஷ்மணன், சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தின் பேராசிரியர் தொடர்ப்புக்குlchinnaiyan@gmail.com
  கட்டுரையாளரின் வலைதளம் http://www.anbuselvam.com

  நன்றி ,,,தி இந்து (தமிழ்)

 3. வளவன் வசந்தா சித்தார்த்தா வலிக்கும் உண்மை… சுடுகிறது… திருந்தட்டும் சமூகம்… வாழும் காலத்திலேயே வாழ்த்தப்படட்டும் சாதனையாளர்களும்… சிந்தனையாளர்களும் இனியேனும்!!!
  20 November at 13:56 · Unlike · 4

  வே மதிமாறன் இரங்கல் கூட்டம் நடத்துவதில் காட்டுகிற வேகத்தை, அவர்களை வைத்துக் கருத்தரங்கம் நடத்துவதில் காட்டியதில்லை.
  திரைத்துறையோ அரசியலோ, பிரபலமானவர்களாக இருந்தால் ‘பிரபலத்திற்கே பிரபலம்’ என்பதுபோல் பாராட்டு விழா, விருது விழா நடத்திக் கொண்டாடுகிறவர்கள்; பிரபலமாகாத திறமைசாலிகளுக்கு அந்த விழாவில் கலந்து கொள்வதற்கு அழைப்பிதழ் கூடத் தருவதில்லை.
  20 November at 14:24 · Edited · Like · 4

  வே மதிமாறன் செத்தப் பிறகு ஒப்பாரி வைத்து என்ன பயன்?
  20 November at 14:02 · Edited · Like · 5

  Arunmozhi Sivaprakasam well SAID MR. MATHIMARAN
  20 November at 14:11 · Unlike · 3

  வே மதிமாறன் பெற்றோர்களுக்கு உரிய மருத்துவம் செய்யத் துப்பில்லாத மகன்கள், பெற்றோர் இறந்தப் பிறகு செலவு செய்து கருமதி செய்வது ஊர் மெச்சதான் என்பதுபோலவே, நாம் நடத்துகிற பல இரங்கல் கூட்டங்களும் அமைந்து விடுகிறது.
  20 November at 21:55 · Edited · Like · 6

  Elaiya Selvan நச்
  20 November at 15:40 · Unlike · 1

  R Lenin Lakshmi · 4 mutual friends
  சரியாக சொன்னீர்கள் தோழர்.
  20 November at 16:36 · Unlike · 3

  Jeeva Sagapthan அருமையான பதிவு என்று சொல்வதை விட அவசியமான பதிவு
  20 November at 16:57 · Unlike · 4

  அன்புமதி திராவிடன் தாய்மொழி தமிழ் ///பெற்றோர்களுக்கு உரிய மருத்துவம் செய்யத் துப்பில்லாத மகன்கள், பெற்றோர் இறந்தப் பிறகு செலவு செய்து காருமதி செய்வது ஊர் மெச்சதான் என்பதுபோலவே, நாம் நடத்துகிற பல இரங்கல் கூட்டங்களும் அமைந்து விடுகிறது.
  செத்தப் பிறகு ஒப்பாரி வைத்து என்ன பயன்?///

  வாசிக்கத் தொடங்கும்போது நான் சொல்ல நினைத்ததை, அப்படியே முத்தாய்ப்பாய்ச் சொல்லி முடித்துவிட்டீர்களே… தோழரே, எங்களுக்கும் வாய்ப்பளியுங்கள்!
  20 November at 16:59 · Unlike · 3

  Joe Milton +1
  20 November at 18:13 · Unlike · 2

  ManiMaran BoomiBalagan தோழர் மதி , நம் சமூகத்தில் கமல் போன்றவர்கள் எல்லாம் அறிவுஜீவியாக பகுத்தறிவு வாதியாக கொண்டாடப் படுகிறார். இதில் அவருடன் அடிக்கடி அலைபேசியில் பேசுவதையே தனது பெரும் பெருமை சேர்க்கும் விசயமாக விளம்பரப் படுத்தும் பேராசிரியர்களும் உண்டு,இப்படித்தான் அறிவுலகம் தமிழ் சூழலில் இயங்கிக் கொண்டுள்ளது.
  20 November at 20:24 · Unlike · 1

  சுந்தர்ஜி ப்ரகாஷ் · 60 mutual friends
  மிகவும் சரியான பொருத்தமான பதிவு.
  21 November at 16:23 · Unlike · 1

  Venugopal Chinnasamy // இரங்கல் கூட்டம் நடத்துவதில் காட்டுகிற வேகத்தை, அவர்களை வைத்துக் கருத்தரங்கம் நடத்துவதில் காட்டியதில்லை.
  திரைத்துறையோ அரசியலோ, பிரபலமானவர்களாக இருந்தால் ‘பிரபலத்திற்கே பிரபலம்’ என்பதுபோல் பாராட்டு விழா, விருது விழா நடத்திக் கொண்டாடுகிறவர்கள்; பிரபல…See More
  Yesterday at 07:45 · Unlike · 1

Leave a Reply

%d bloggers like this: