இராமலிங்க அடிகள் VS நம்பூதிரிபாட்
மார்க்சியத்தை விஞ்ஞானப் பூர்வமாகப் புரிந்து கொண்ட பிறகும், அறிவியலுக்கு எதிராகப் பிறப்பாலேயே உயர்வு தாழ்வு எனறு புனிதப்படுத்திய ‘நாலு வர்ண’ நான்கு வேதங்களில் கம்யுனிசத்தைத் தேடிய, தன் பெயரை மறைத்து தன் ஜாதி பெயரையே தன் பெயராக அடையாளப்படுத்திக் கொண்ட, ஈ. எம். எஸ். நம்பூதிரிபாட் (1909 –1998) என்ற கம்யுனிஸ்டை விட;
விஞ்ஞானத்திற்குப் புறம்பாக ஆன்மீகத்திற்குள்ளே தன்னை முற்றிலுமாக மூழ்கடித்துக் கொண்டு கற்பனாவாதங்களுக்குள் விடுதலையைத் தேடிய போதிலும், நான்கு வேதங்களின் மீது,
‘நால்வருணம் ஆசிரமம் ஆசாரம் முதலா நவின்றகலைச் சரிதம்எலாம் பிள்ளைவிளை யாட்டே – மேல்வருணம் தோல்வருணம் கண்டறிவார்..’ என்று காறி துப்பி, தன் பெயருக்குப் பின் இருந்த ஜாதிப் பெயரை துறந்த ‘சாமியார்’ இராமலிங்க அடிகளே (1823 – 1873) எனக்கு முற்போக்காளராகத் தெரிகிறார்.
‘மூலதனம்’ சரஸ்வதி பூஜை முடிந்தவுடன்..
கவுண்டமணியும் கம்யூனிஸ்ட்டுகளும்
‘நம் இருவருக்கும் உள்ள பொருத்தம்’; ஆர்.எஸ்.எஸ் – கம்யுனிஸ்டுகள்
நண்பர் மதிமாறனிடமிருந்து இப்படி ஒரு பதிவா?
அபாரம் அபாரம்.
நண்பர் செல்ல குமாரசாமி, உங்களின் வேண்டுதல் பலித்துவிட்டதுபோல தெரிகிறது.
குற்றங்களை விமர்சிப்பதில் கூட குற்றத்தை விடுத்து அதை செய்தவர் எந்த சாதியை சார்ந்தவர் என பார்த்து, சாதிக்கொரு விதமான பாரபட்சமான விமர்சனத்தை வைப்பவரா சாதிவிடுதலையை பற்றி பதிவிடுகிறார்?
இருந்தாலும் ராமலிங்க அடிகள் வரை தங்களின் கண்ணையும் கருத்தையும் செலுத்தியமைக்கு நன்றி நண்பர் மதிமாறன்.
மதிப்பிற்குரிய ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம்!!! மனிதர்கள் மனிதர்களாக வாழ வேண்டும் என்ற உங்கள் உயரிய எண்ணம் மிகவும் பாராட்டுக்குரியது!!! சாதி என்னும் மடமை அறவே ஒழியும் வரை உங்கள் மகத்தான பணி தொடரட்டும் 🙂