பிரபாகரன் – டாக்டர் அம்பேத்கர் – பெரியார்

political-value

பிரபாகரன் பிறந்த நாளை இவ்வளவு எழுச்சியோடு கொண்டாடுகிற பெரியார் இயக்கங்கள், தொண்டர்கள்; பெரியார் தீவிரமாக இயங்கிய;

பார்பபன எதிர்ப்பு, இந்து மத எதிர்ப்பு, ஜாதி ஒழிப்பு அரசியலுக்கு நெருக்கமாக என்பதை விடவும் பெரியாரை போலவே செயல்பட்ட டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாளையும் இதுபோல் கொண்டாடியிருந்தால்…

அதுபோலவே தலித் இயக்கங்கள், தலித் அரசியல் கண்ணோட்டத்தைத் தாண்டி, பிரபாகரன் பிறந்த நாளை கொண்டாடுவது போல்; டாக்டர் அம்பேத்கரின் அரசியலோடு ஒத்துப் போகிற ஒரே தலைவர், பெரியாரின் பிறந்த நாளையும் இப்படி எழுச்சியோடு கொண்டாடியிருந்தால்..

தமிழ் நாட்டில் இந்து அமைப்புகளின் கையும் ஓங்கி இருக்காது, தலிதல்லாதவர் கூட்டணியும் உருவாகி இருக்காது.

27 November at 02:02

பெரியாரை அவதூறுகளிலிருந்து காப்பாற்ற.. பணத்துக்கு என்ன பண்றது?

அ.மார்க்சை அழைத்த; ‘பெரியார் அவதூறு’ பேர்வழிகளை அழைக்காத திராவிடர் கழகத்திற்கு பாராட்டுகள்

பெரியாரை கேவலமாக பேசியவன், பிரபாகரனை பேசியிருந்தால்… நடக்கிறத வேற..

‘அம்பேத்கர் இந்திய தேசியத்தை ஆதரித்தார்..’ ஆமாம் இப்போ இன்னாங்குற அதுக்கு?

6 thoughts on “பிரபாகரன் – டாக்டர் அம்பேத்கர் – பெரியார்

  1. தமிழ் நாட்டில் எப்போதுமே போலிகளை தான் விரும்புவார்கள்.

  2. பிரபாகரன் போராட்டம் எவ்வகையிலும் நமக்கு தொடர்பற்ற சிங்கள இனவாதிகளை எதிர்த்து.பெரியாரோ அம்பேத்கரோ போராடியது நம்மில் இன்னும் நிலவும் சாதியமைப்பை எதிர்த்து.அன்னா ஹசாரே உண்ணாவிரதத்திற்கு ஆதரவு தெரிவித்து கடற்கரையில் போக்குவரத்திற்கும் பாதிப்பின்றி மெழுகுவர்த்தி ஏந்தினால் எந்த பிரச்சினையும் வராது.அதையே குறிப்பிட்ட பிரச்சினைக்காக ஜெயலலிதா அரசை எதிர்த்து என்றால் நாக்கு பிறழாது.தமிழ் நாட்டில் தமிழின இயக்கம் நடத்துபவர்கள் இனத்தின் முதலாளிகளும் (வைகுண்டராசன் போல),ஊடகங்களில் உள்ள பார்ப்பனர்களும், ஆளும் ஜெயலலிதாவும் போன்ற அனைத்து ஆதிக்க சக்திகளின் மனம் கோணாமல் நடந்து கொள்பவர்கள். சிவசேனாவின் பால்தாக்கரே போல உருவெடுக்கும் சாத்தியமுள்ள படு பிற்போக்கானவர்கள்.அவர்கள் இந்திய, தமிழ்நாட்டின் வரலாற்று மாந்தர்களை விட பிரபாகரன் brand விற்பனையாகக் கூடிய சரக்கு என்பதால் மட்டுமே அவரை கொண்டாடுகின்றனர்.பார்பனிய ஊடகங்களும் தி மு க வின் குடும்ப ஆட்சியின் போக்கும் ஒட்டுமொத்த திராவிட என்கிற சொல்லையே ஒரு கெட்ட வார்த்தை அளவிற்கு அரசியல் புரிதலற்ற மேம்போக்கான வாசிப்புள்ள இளைங்கர்களை மாற்றியுள்ளது.இந்த போக்குகள் அவர்களை பெரியாரையே தூக்கிஎறிந்து விட்டு பிரபாகரனை போற்ற தூண்டுகிறது. 4 வருடத்திற்கு முன்னர் கூட இந்த நிலை இல்லை.அன்றைக்கு புதுக்கட்சி ஆரம்பித்து ராமுழுதும் கண்விழித்து கண்டுபிடித்த பெயரில் கூட வேறுவழியின்றி திராவிடம் இருந்ததே! அதே சமயம் நெடுமாறன் போன்ற ஒரு சில ஆஸ்தான வித்வான்களை தவிர வேறு யாரும் பிரபாகரனை போற்றி பாடவில்லையே ! சொல்லப் போனால் மூவர் தூக்கு தொடர்பாக மாணவர்களும் மக்களும் தன்னெழுச்சியாக கிளர்ந்தது தான் தமிழ் தேசியர்களை பிரபாகரன் brand உபயோகிக்க வைத்துள்ளது

  3. இங்கே எதற்காக பிரபாகரனை தலைவர் என்று கூறி அவருக்கு விழா எடுக்கிறீர்கள் என கேட்கிறார்கள். எனக்கு சம்பந்தமே இல்லாத பலர் இந்த மண்ணில் சிலருக்கு தலைவர் ஆகுகையில் தமிழின விடுதலைக்காக போராடிய பிரபாகரனை தலைவர் என்று கூறக் கூடாதா?

  4. சித்தன் சித்தன் · 4 mutual friends
    Sariyaana karutthu sir
    27 November at 05:07 · Unlike · 1

    வே மதிமாறன் நன்றி.
    27 November at 05:08 · Like

    Thamizhpparithi Maari காலத்தின் குரல். மிக்க நன்றி தோழர்
    27 November at 05:14 · Unlike · 1

    சித்தன் சித்தன் · 4 mutual friends
    Ingu samoogatthukku poraadiya periyavarkalai vittu ,veliyil ulla puratchiyaalark alai mariyadai seivadhe oru fashion aagi ponadhu! !!!
    27 November at 05:14 · Unlike · 1

    வே மதிமாறன் நன்றி தோழர்களுக்கு.
    27 November at 05:14 · Like

    Sugumaran Govindarasu இந்நேரத்திற்கு உகந்த சரியான கருத்து.
    27 November at 05:15 · Unlike · 4

    பூவை புலிகேசி இனி மேலாவது இதனைக் கடைபிடிக்கவேண்டும்.
    27 November at 05:15 · Unlike · 5

    Sugumaran Govindarasu இந்நேரத்திற்கு உகந்த சரியான கருத்து.
    27 November at 05:16 · Unlike · 1

    வே மதிமாறன் நன்றி தோழர்கள் Sugumaran Govindarasu, பூவை புலிகேசி.
    27 November at 05:16 · Like · 1

    Arumugam Bhel · Friends with பிரபா அழகர் and 88 others
    ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் பெரியாரும் அம்பேத்கரும்
    27 November at 05:22 · Unlike · 4

    Olivannan Gopalakrishnan தோழர், உங்கள் வி்த்தியாசமான ஆக்கப்பூர்வமான சிந்தனை போற்றுதலுக்கு உரியது
    27 November at 05:49 · Unlike · 1

    Shahul Hameed · Friends with பசி தி.வி.க and 5 others
    True bro
    27 November at 05:50 · Unlike · 1

    வே மதிமாறன் நன்றி தோழர்கள் Arumugam Bhel Olivannan Gopalakrishnan Shahul Hameed
    27 November at 05:52 · Like

    Senthil VK பெரியாரின் பிறந்த நாளையும் இப்படி எழுச்சியோடு உலகமே கொண்டாடும் வண்ணம் அவரின் சிந்தனையை சேர்க்க உறுதி கொள்வோம்…!
    27 November at 06:29 · Unlike · 2

    Paraneetharan Kaliyaperumal மதியின் மதி நிறைந்த அறிவுரை மற்றும் எச்சரிக்கை.
    27 November at 06:59 · Unlike · 2

    Venkat Raman ஆம். இது எச்சரிக்கை தான்.இன்னும் ிகாஞ்ச நாட்களில் அமித் ஷா வின் ிவறியாட்டம் தமிழகத்தில் அறங்ேகற்றப்படும்.
    27 November at 07:54 · Unlike · 1

    Karunakaran Arunachalam ஒத்த கருத்துடைய சமதர்ம சிந்தனாவாதிகள் செவி சாய்க்க வேண்டிய கருத்து.
    இதில் மறுக்கப்பட முடியாத வேதனையான ஒரு செய்தி என்ன தெரியுமா நண்பர்களே தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்த தலித் சமுதாயத்தை சார்ந்த தோழர்களில் விவரம் தெரிந்தவரகள் கூட தந்தை பெரியாரின் தன்னலம் கருதாத சமுதாயப்பணியை அங்கீகரித்து ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்கள்.
    அண்ணல் அம்பேத்கரின் அறிவு,ஆற்றல்,கல்வி,
    தியாகம்,தாழ்த்தப்பட்ட இந்திய மக்களுக்காக முன்னெடுத்த முயற்சிகள்,கண்ட களங்கள்,எழுதிய நூல்கள்,ஆற்றிய உரைகள்,இவையெல்லாம்,அசைக்க முடியாத ஆவணங்கள்.அம்பேத்கர் அவர்கள் தந்தை பெரியாரைப் பற்றி சென்னையில் பேசுகிறபோது ‘வடபுலத்தில் நான் ஆற்றிவருகின்ற பணியைத் தான் பெரியார் இங்கே ஆற்றிவருகிறார்.என்று மனதாரப் பாராட்டிய வரலாறை நண்பர்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்.இதில் என்ன பிரச்சினை என்றால் தந்தை பெரியார் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவராக இல்லாமல் போன காரணத்தால் அவரை முழுமையாக ஏற்க இயல வில்லை.எனினும் அன்றைய சமூக அமைப்பில் பார்ப்பணர் அல்லாத அனைத்து சாதியினருமே ஒவ்வொரு வேறுபட்ட அளவுகளில் பார்ப்பணரால் ஒடுக்கப்பட்டு இருந்த காரணத்தால் முதலில் பார்ப்பண ஆதிக்கத்திலிருந்து விடுவிக்க எண்ணிணார் தந்தை பெரியார்.ஆதிக்க சக்திகள் மீண்டும் வெறி கொண்டு அலையத் தொடங்கியுள்ள இந்த கால கட்டத்தில் நாம் விழிப்புணர்வோடு செயல்பட சூளுரைப்போம்.
    27 November at 08:37 · Unlike · 6

    Faisal Mohamed · Friends with பெரியாரின் பெயரன்
    Maybe he try next birthday
    27 November at 09:59 · Unlike · 1

    பரிமள ராசன் புரட்சியாளர் அம்பேத்கர் குறித்த பெரியார் இயக்கங்களின் பார்வைக்கும்,
    பெரியார் குறித்த ‘பெரும்பான்மையான’ தலித் இயக்கங்களின் பார்வைக்கும் மிகப்பெரிய வேறுபாடு இருப்பதை காணத்தவறி விட்டீர்களா?அல்லது கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டீர்களா என தெரியவில்லை.
    இரண்டையும் ஒன்று போல சொல்லுவது உண்மையை மறைப்பது போல ஆகும்.
    பெரியார் குறித்த அந்த பெரும்பான்மை தலித் இயக்கங்கள் தங்கள் பார்வையை மாற்றிக்கொண்டாலே போதுமானது.பிறந்த நாள் கொண்டாடுவதெல்லாம் பிறகு.
    பெரியார் இயங்கங்களுக்கு தாங்கள் சொல்லும் அறிவுரையை கொஞ்சம் அந்த பக்கம் இன்னும் அழுத்தமாக சொன்னால் நலம்.
    மற்றபடி புரட்சியாளர் அம்பேத்கார் பிறந்த நாளை இன்னும் விரிவாக கொள்கை விழாவாக அணைவரும் எடுக்கவேண்டும் என்கிற கருத்து வரவேற்க வேண்டியது.
    அடுத்ததாக மேதகு பிரபாகரன் அவர்கள் பிறந்த நாளை வம்படியாக இழுத்துகொண்டுவந்து இங்கு ஒப்பீடு செய்வது தேவையற்றது.இது அந்த மாபெரும் தலைவர்களுக்கு எதிராக மேதகு பிரபாகரன் அவர்களை நிறுத்துவது போன்ற தோற்றத்தை உருவாக்கிவிடும் அபாயம் இருக்கும் வாய்ப்பையும் நாம் மறுக்க இயலாது.
    இது என் தனிப்பட்ட கருத்து.
    27 November at 13:55 · Like · 5

    பன்னீர் இராசமாணிக்கம் · 29 mutual friends
    யாதவ்கள் ஊழல், மாயாவதி ஊழல், மாமி ஊழல், கருணா ஊழல். ராசிவ், சோனியா, மோடிகள் யோக்கியத்து பிறந்தவர்கள். நீதி சொன்ன யோக்கியர்கள் ஆளுனர்கள். மோகன சோனியா சிங்குகள் பிரதம ராம். மோடி சுசாமி அதானிகளும் பிரதம அத்வானிகள். இதில் பெரியார் அம்பேத்கர் பிரபாகர் எந்த மூலை. வேண்டுவோர் வேண்டும் நாளை கொண்டாடு. விரும்பியா தீபாவளி ? விட்டுதள்ளும் பொங்கல். சுசாமிக்கு பயந்து ராம் நாத்து , அதுக்கும் பயந்து மாமி. அதுக்கும் பயந்து பொட்டழகர் பன்னீர். அதே ரகம் பொன்னர் ராஜாக்கள் இந்த பொட்டு கும்பலை மீறித்தான் பிரபாகரன். மதி புரியும் மாறன் தெரியாமலா?
    27 November at 16:46 · Like

    வே மதிமாறன் தோழர் பரிமளராசன், பெரியார் இயக்கங்களின் டாக்டர் அம்பேத்கர் ஆதரவையும், தலித் இயக்கங்களின் பெரியார் பார்வையையும் ஒப்பிடவில்லை.
    பெரியார் இயக்கங்கள் டாக்டர் அம்பேத்கரை எதிர் நிலையில் பார்க்கவில்லை என்பது மட்டுமல்ல, ஆதரிப்பதும் தெரிந்ததுதான்.
    ஆனால், பிரபாகரனுக்கு கொடுக்கிற முக்கியத்துவம் போலவே டாக்டர் அம்பேத்கருக்கும் கொடுக்கப் படுகிறதா? என்பதே என் கேள்வி.
    அதேபோல் பெரியாரை தலித் மக்களுக்கு எதிரானவரை போல் சித்திரிக்கிற அல்லது பெயரளவில் ஆதரிக்கிற தலித் இயக்கங்கள்… பிரபாகரனை கொண்டாடுகிறார்கள்..

    பெரியார் இயக்கங்கள், பெரியார் எதிர்ப்பு தமிழ்த் தேசிய இயக்கங்கள், தலித் அமைப்புகள், தலித்தல்லாதவர் கூட்டணியில் உள்ள கட்சிகள் எல்லோரும் ஒரே பார்வையில் பிரபாகரனை தீவிரமாக கொண்டாடுகிறார்கள்.
    இந்த அரசியல் முரண்பாடுகளை சுட்டிக் காட்டியுள்ளேன்.

    பெரியார் – டாக்டர் அம்பேத்கரை; பெரியார் இயக்கங்களும் தலித் இயக்ககளும் அப்படி கொண்டாடப்பட வேண்டும் என்ற அரசியல் காரணங்கள் குவிந்துக் கிடக்கிறது. அந்த எதிர்ப்பார்பை தான் தெரிவித்திருக்கிறேன்.
    27 November at 17:31 · Edited · Like · 3 · Remove Preview

    Lenin Lenin · 7 mutual friends
    ambedkar pirandha naalai periyra iyakkam kondadavillai yendru solvadhu yerpudayadhu alla. naan paartha periyarist perumbalum solvadhu nanayathin iru pakkam pol periyar &ambekar.avargalakku periyar pirandhanal kondada kooda poruladhara nilai sariyaga ilaai .yen yenil idhu samooga valarchikaana iyakkam.arasiyal iyakkamaga irunthal solla vendam cut out vailthu,digital banner vaithu yezhuchi tamilar, vazhum ambedkar,valarum ayodhidasar ,rettamalai virupathirketraarpol suya jaadhi puranam paadalam.
    27 November at 21:19 · Edited · Like

    Kalanchiyam Mu · Friends with பரிமள ராசன் and 414 others
    பெரியார் திராவிட அடையாளம்.அம்பேத்கார் சாதிய அடையாளம்.ஆனால் பிரபாகரன் ஒரு இனத்தின் அடையாளம்.ஆகவே தமிழினம் சாதி கடந்து பிரபகரனின் பிறந்த நாளை கொண்டாடுகிறது தோழர்.
    27 November at 23:00 · Like

    Prabagaran See எந்தத் தமிழனும் இந்துவோ, இந்தியனோ அல்ல என்பதை தமிழின அறிவுள்ளவர்களுக்கு நன்கு தெரியும். தலித் அல்லாதவர்கள் கூட்டணி அமைக்கும் அளவிற்கு பிற்படுத்தப்பட்ட மக்களை கொண்டுசென்றது யார்? என்பதை தாங்கள் விளக்கினால் நன்றாக இருக்கும்.
    27 November at 23:06 · Like

    வே மதிமாறன் http://mathimaran.wordpress.com/2012/07/31/549-1/

    பெரியாரை அவதூறுகளிலிருந்து காப்பாற்ற.. பணத்துக்கு என்ன…
    MATHIMARAN.WORDPRESS.COM
    28 November at 01:51 · Like · 1 · Remove Preview

    Lenin Lenin · 7 mutual friends
    periyar dravidar adayalam yendral.dravidam yenbadhe inathin adayalm thaane idhu kooda theriyamal pru kalanchiyam.ambedkar jathi yedhirpin adayalm thambi jadhiy adayalam illai.
    28 November at 03:13 · Like

    Venmani Mani தோழர் மதிமாறன் உண்மையாகவே இந்த பதிவை விமர்சணம் என்பதை தாண்டி மிகுந்த மன வேதனையுடன் பகிர்ந்து கொண்டிருக்கிறார் என்றே நான் கருதுகிறேன்..தயவு செய்து இதை படிக்கும் பெரியார்,அம்பேத்கர் கழக தோழர்கள் இதை செயல்படுத்தும் முயற்சியை எடுக்க வேண்டும். செயல்படுத்த மறுக்கும் தலைமையை விமர்சிக்க வேண்டும்.அது கி.வீரமணி யானாலும் சரி திருமா வானாலும் சரி..இத்தகைய தலைவர்களை புறக்கணிக்கும் அமைப்புகளை நாம் புறக்கணித்து மதவாதத்தையும் தீண்டாமை கொடுமைகளையும் களத்தில் எதிர்துப்போராடும் அமைப்புகளில் இணைய வேண்டும்.
    28 November at 04:16 · Like · 3

    Benjamin Prabakar Arockiyasamy · 2 mutual friends
    எங்கலுக்கு புத்தீ புகட்டியா பெரியாரை உமக்கு

    நாண்றி
    28 November at 05:46 · Like

    திருஞானசம்பந்தம் திரு · 5 mutual friends
    Absolutely correct anna
    28 November at 14:52 · Like

    Lenin Lenin · 7 mutual friends
    dalit amaipugal periyarai irutadippu seivadhai sollum podhu adhanudan periyar amaippu anmbedkarai irutadippu siegiradhu yendru solvadhu periya mosadi.ambedkarai tamilnaatukkul arimugam seithadhe periyar iyakkam than.
    28 November at 19:30 · Like

    Vimal Raj · Friends with பரிமள ராசன் and 6 others
    Excellent.

Leave a Reply

%d bloggers like this: