கடலுக்குப் பிறகு காவியத் தலைவனின் கதை முடித்த கலைஞன்

Malayalam

‘கடல்’ படத்திற்குப் பிறகு, அதுபோலவே.. வசனகர்த்தா ‘ஜெயமோகன்’ தன் வேலையை காட்டியிருக்கிறார் போல..
காவியத்தலைவனுக்கு என் ஆழந்த அனுதாபங்கள்.

28 November at 05:42

வசனகர்த்தா ஜெயமோகன் எழுதிய பலப்படங்களைப் பார்த்திருக்கிறேன்.

கதாபாத்திரத்திற்குப் பொருத்தமாகவும் இல்லை. சரி, பரவாயில்லை, பாத்திரத்தைத் தாண்டி வசனம் ரசிக்கும்படியாக இருக்கிறதா என்றால் அதுவும் இல்லை. வசனத்தோடு கூடவே திரைக்கதையும் எழுதிட்டாருன்னு வைச்சிக்கங்க, அது திரைக்கு எழுதப்பட்ட கதையல்ல, அந்தப் படத் தயாரிப்பாளருக்கு எழுதப்பட்ட இரங்கல்.

எப்படி இவர.. வசனகர்த்தாவா தொடர்ந்து பலபேர் பயன்படுத்துகிறார்கள்? படுதோல்விகளுக்குப் பிறகும். அதுவும் ‘பெரிய தில்லாலங்கடி’ இயக்குநர்களே.

சமூகப் பொறுப்புள்ளவர்களாகச் சொல்லிக் கொள்கிற அல்லது சொல்லப்படுகிறவர்களும், சமூக விரோத கருத்துக்களைச் சொந்தமாகக் கொண்ட இவரைதான் பயன்படுத்துகிறார்கள். அந்த இயக்குநர்களின் சமுகப் பொறுப்புக்கு இதுவே சாட்சி.

இது இல்லாம.. அப்பப்போ.. அங்க.. இங்க.. இவர இந்திரன், சந்திரன் என்று கொண்டுகிறவர்கள் வேற.. இதுல ‘புரட்சிகரப் பார்ப்பன பைத்தியக்காரன்’ தொல்லை அளவில்லை..

ஆனால், திரை ரசிகர்கள் ஒவ்வொரு முறையும் தெளிவாக நிரூபிக்கிறார்கள் ‘இந்த வசனகர்த்தாவுக்கு வசனம் எழுதத் தெரியல..’ என்று.

அத புரிஞ்சிக்கிற அறிவு தான் அறிவாளிகளிடம் இல்லை.

29 November at  04:08

பில்லி – சூன்யம்; ஜெயமோகன் – எஸ். ராமகிருஷ்ணன்

மட்டமான அறிவாளி அல்லது கை தேர்ந்த சந்தர்ப்பவாதி

கிறிஸ்த்துவ உயர்வும் மீனவர் இழிவும் : ஜெயமோகனுக்கு நன்றி!

மலையாளத்து செம்மீனும் மணிரத்தினித்தின் கடலும்

4 thoughts on “கடலுக்குப் பிறகு காவியத் தலைவனின் கதை முடித்த கலைஞன்

  1. ஒன்னுக்குமே இயலாதவனின் புலம்பல் தான் இந்தப் படத்திற்கான உமது இந்த விமர்சனம்.அப்படியே உமது ‘தலைவரின் வழியில்’ தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியால் விளைந்த விமர்சனம்.பரிதாபத்துக்கு உரியவர்கள் என்றும்!

  2. தோழர்
    ஒரு எழுத்தாளனின் படைப்பு தோல்வியுறுவதை வைத்து அவனை தோசி என்பது நமது கொள்கை அல்ல …
    எவ்வளவு விருப்பு வெறுப்புகளையும் கொள்கைகள் பண்படுத்தும். இல்லையா?

Leave a Reply

%d bloggers like this: