மணிரத்தினத்தின் ‘கடல்’; கிறிஸ்த்துவ உயர்வும் மீனவர் இழிவும் : ஜெயமோகனுக்கு நன்றி!

sukasini

பாரபட்சம் இல்லாமல், யாராக இருந்தாலும் நெற்றிக்கண்ணை திறந்து விமர்சிக்கிற, இந்தியாவின் ‘சிறந்த’ சினிமா விமர்சகரும், நடிகையுமான சுஹாசினி; இந்தியாவின் ‘மிக சிறந்த’ ஒரே இயக்குநரும் தனது கணவருமான மணிரத்தினத்துடன்

*

கடல் திரைப்படம் கிருத்துவ மதத்தை மோசமாக காட்டியது அதைப்பற்றி உங்கள் கருத்து?

கே. மணிகண்டன், திருநெல்வேலி.

கடல் கிறிஸ்த்துவ மதத்தை உயர்வாகத்தான் காட்டியது. குறிப்பாக கிறிஸ்த்துவ பாதிரியார்களை தியாகிகளாகவும் கிறிஸ்த்துவ நிறுவனங்கள்; ஏழை, எளிய மக்களுக்கு சேவை செய்பவையாகவும், ஒழுக்கக் கேடான நபர் பாதிரியாராக ஆக முடியாது, பாதிரியாக உள்ளவர் மீது பாலியல் குற்றச்சாட்டு வந்தாலும் அவர்களை உடனே அந்தப் பதவியிலிருந்து நீக்கிவிடுவார்கள் என்ற புனித பிம்பங்களோடுதான் ‘கடல்’ கிறிஸ்த்துவ நிறுவனங்களை கவுரப்படுத்தியிருந்தது.

இந்து கண்ணோட்டம் கொண்டவர்கள் எப்போதும் கிறிஸ்த்துவ மதத்திற்கு எதிராக, கிறிஸ்த்துவ நிறுவனங்களுக்கு எதிராக கருத்து சொல்ல மாட்டார்கள்.

மாறாக கிறிஸ்த்துவர்களைத்தான் இழிவாக சித்தரிப்பார்கள். சினிமாவில் கூட, கபரே நடனம் ஆடுகிற பெண்ணை, ஆண்களை மயக்குகிற ஒழுக்கக்கேடான பெண்ணை;  கொலை, கொள்ளை செய்கிற ஆண்களை கிறிஸ்த்துவர்களாகத்தான் காட்டியிருக்கிறார்கள்.

காரணம், கிறிஸ்த்துவ மதத்தின் மேல் உள்ள வெறுப்பினால் அல்ல; மிக அதிக அளவில்  கிறிஸ்த்துவர்களாக இருக்கிற தாழ்த்தப்பட்டவர்கள், மலைவாழ் மக்கள் மற்றும் மீனவர்கள் மீது இருக்கிற ஆதிக்க ஜாதி இந்துவின் காழ்ப்புணர்ச்சியே.

சின்ன மாமனார் இஸ்லாமிர்களுக்கு எதிராக விஸ்வரூபமாக நின்றார்; மருமகன் கிறிஸ்த்துவ மீனவர்களுக்கு எதிராக சுனாமி அலையாக அட்டகாசம் செய்திருக்கிறார்.

மீனவர்களின் துயரம் குறித்து ஒரு வார்த்தை பேச முடியாத கடல், தலையில் சுமையோடு வேகமாக நடந்துபோகும் மீனவப் பெண்களின் பின்பக்கத்தை ரசணையோடு காட்டியிருக்கிறது, சுந்தர ராமசாமியின் கண்களால்;

23 ஆண்டுகளுக்கு முன் நான் படித்த ‘ஒரு புளியமரத்தின் கதை’ என்ற கதையில், சுந்தர ராமசாமி, ‘மீனவ பெண்கள் தங்கள் பின்பக்கம் குலுங்க கூடையை…’ என்றோ அல்லது ‘குண்டிகள் குலுங்க’ என்றோ எழுதியிருப்பார், (நினைவிலிருந்து எழுதுகிறேன்) அந்த வரி இந்தப் படத்தில் காட்சியாக்கப்பட்டிருக்கிறது. எதிர்ப்பை நினைவில் கொண்டு புத்திசாலித்தனமாக ஒரு பெண்ணின் பார்வையில்.

உழைக்கச் சலிக்காத, உழைப்பை மட்டுமே மூலதனமாக கொண்ட மீனவர்களை இழிவானவர்களாகவும், ஒழுக்கக் கேடானவர்களாகவும், பசியால் இருக்கும் ஒரு குழந்தைக்குக்கூட சோறு போடாமல் விரட்டியடிக்கிற மனிதாபிமானம் என்றால் என்னதென்றே அறியாத பொறுக்கிகளாகவும் சித்தரித்தது கடல்.

அதுவும் கூடங்குளம் அணுஉலையை எதிர்த்து போர்குணத்தோடு போராடி வருகிற இந்த சூழலில், மீனவர்களுக்கு எதிராக அவர்களை ஏமாற்றுக்காரர்கள், முன்கோபி, முரடர்கள், முட்டாள்களாக சித்தரித்து மற்ற தமிழர்களின் கண்ணோட்டத்தில் அவர்களை பற்றிய மோசமான மதிப்பீட்டை உருவாக்க முயற்சித்தது கடல்.

அணுஉலைக்கு எதிராக போராடுகிற தோழர் உதயகுமார் ‘நான் யாரிடமும் பணம் வாங்க வில்லை. இந்த மாதா மீது சத்தியம்’ என்று சொன்னபோது, குழந்தையைப்போல் உதயகுமாரை கட்டி பிடித்து பதறி அழத; அன்பும் பாசமும் நிறைந்த அந்த மீனவப் பெண்களைத்தான் மனிதாபிமானம் அற்ற இழிவானவர்களாக சித்தரித்தது கடல்.

’16 வயதுகூட நிரம்பாத பெண்ணை முத்தக்காட்சியில் நடிக்க வைக்கலாமா..?’ என்று முதலாளித்துவ நியாயத்தோடு மட்டும் கேள்வி கேட்ட அறிவாளிகளும்,  ‘படம் ரொம்ப அறுவை..’ என்று சுவாரஸ்யத்தின் அடிப்படையில் மட்டும் கருத்துச் சொன்ன தமிழ் உணர்வாளர்களும்

கத்தோலிக்க தமிழ் மீனவர்கள் பிரச்சினை வழியாக மட்டுமே ஒட்டுமொத்தமான தமிழர் பிரச்சினையையும் பார்க்க முயற்சித்து, பெரியாரை திராவிட இயக்கத்தை விமர்சிப்வர்களும்கூட; கடல் படத்தின் கத்தோலிக்க தமிழ் மீனவர் எதிர்ப்பை கண்டிக்கவில்லை.

நல்லவேளை சரியா வெட்ட தெரியாதவன் வெட்னதால தப்பிச்சேன்..’ என்று வடிவேலு ஒரு படத்தில் சொல்வதுபோல்,

கிறிஸ்த்துவ மீனவர்களுக்கு எதிராக வந்த கடல், தனது மோசமான, சுவாரஸ்யமற்ற திரைக்கதையால் மற்ற தமிழர்களிடம் மீனவர்களை பற்றிய இழிவான மதிப்பீட்டை உருவாக்குவதற்கு முன் தோல்லியடைந்தது பெரும் மகிழ்ச்சிக்குரியது.

அந்த வேலையை சிறப்பாக செய்த கடல் திரைக்கதை ஆசிரியருக்கு நன்றி சொல்ல வேண்டியது நம் கடமை.

இருந்தாலும், படத்தை அதிக விலை கொடுத்து வாங்கிய வினியோகிஸ்தர்கள் மட்டுமல்ல, பொண்டாட்டி தாலிய அடகு வைத்து, போலிசுக்கு பயந்து, தன் வாழ்க்கையையே பணயம் வைத்து திருட்டு விசிடியில் கடல் படத்தை கொண்டுவந்தவங்க கூட நடுத்தெருவுல நிக்கிறாங்களாம்; அதுதான் வருத்தமா இருக்கு.

*

தங்கம் மார்ச் 2013 மாத இதழில் வாசகர் கேள்விக்கு நான் எழுதிய பதில்.

*

‘கிறிஸ்த்துவர்கள் மீதான தாக்குதல்’ என்ற பெயரில் தலித் மக்கள் தாக்கப்படுகிறார்கள்

‘குத்துங்க கமல்.. குத்துங்க.. இந்த முஸ்லிம்களே இப்படித்தான்..’ விஸ்வரூபம் விமர்சனம்

‘நீர்ப்பறவை’ : மீனவர் வழக்கா? தேவர் வழக்கா?

18 thoughts on “மணிரத்தினத்தின் ‘கடல்’; கிறிஸ்த்துவ உயர்வும் மீனவர் இழிவும் : ஜெயமோகனுக்கு நன்றி!

  1. நீங்கள் எழுதிய கடல் விமர்சனத்தில் ஏன் தேவையில்லாமல் கமல்ஹாசனை வம்பிக்கிழுக்கிறீர்கள்

  2. கருவாடு இல்லாத குழம்பு மணக்காது … மதிமாரனுக்கு
    கமல் இல்லாத கட்டுரை இனிக்காது !

  3. அண்ணே, வர வர முடியலைண்ணே! 16 வயது பெண்ணுக்கு முத்தம் கொடுப்பதைக் கேள்விக் கேட்பது முதலாளித்துவ பார்வையா ? அப்போ கேட்காம இருப்பது ‘அஞாநி’ பார்வையா ?

  4. why do you want to see all films with a lense and try to interpret things that others dont even care.I saw the film and I never ever intrepreted things about fishermen the way you are trying to interpret from the film.Thats the case with all the friends that I know.I feel its unnecessary to see a film beyond the screens, its useless.

  5. மதிமாறன் வார்த்தைகளுக்கு நடுவே வாசிக்கும் வினோத மனிதவகையை சேர்ந்தவர். ஜாதி கண்ணோட்டத்துடனே எல்லாவற்றையும் பார்ப்பதால் அவரால் இப்படித்தான் யோசிக்க பேச முடியும்.மேலும் கமல் மணிரத்னம் போன்றவர்கள் சார்ந்த ஜாதி இவரை இப்படி பேச வைக்கிறது என்று நாம் முடிவு செய்து கொள்ளலாம்.ரகுமானை ஒரு பார்ப்பனீய சதி என்று புதிராக கண்டுபிடித்து நமக்கு தலை சுற்ற வைப்பார். ஆனால் அதேசமயம் நவபார்பனராக முழு நேரமும் இருந்து வரும் இளையராஜாவை பற்றி எந்த சத்தமும் போட மாட்டார். சில நேரங்களில் சில்..லறை மனிதர்கள்.

  6. ஒரு முக்கிய காட்சி…..வில்லனாக வரும் அர்ஜுன் தனக்கு துரோகம் செய்துவிட்டதாக நம்பி ஒரு மீனவரை துப்பாக்கியால் சுடுவார்…அப்படி சுடும்போது அவர் சொல்லம் வசனம் “இந்த வெளிநாட்டு காரவங்க நம்ம மீனவங்கள சுடுறத நிருதமாட்டாங்க போல ” என்று போறபோக்கில் தினமலர் புத்தியை காட்டி இருப்பார்,,,,,

  7. திருட்டு விசிடியில் கடல் படத்தை கொண்டுவந்தவங்க கூட நடுத்தெருவுல நிக்கிறாங்களாம்; அதுதான் வருத்தமா இருக்கு.

  8. இணையத்தில் உலாவும் நம் மக்களுக்கு சாதி என்றால் என்ன? இனம் என்றால் என்ன? போன்ற விடயங்களில் இவர்கள் இன்னும் ஒரு தெளிவுக்கு வரவில்லை என்பதாலேயே இப்படிப்பட்ட குழப்பங்கள் நம்மவர்களுக்கு! கமல்காசனை பார்ப்பனர் என்று குறிப்பிடுவதில், பார்ப்பனர் என்பது ஒரு இனத்தின் அடையாளமேயன்றி அது ஒரு சாதியைக் குறிக்கும் சொல் அல்ல! பார்ப்பனர் என்பது சாதி அல்ல! அது ஒரு இனத்தின் பெயர்! பார்ப்பனர்களிலேயே சவுண்டி அய்யர், அய்யர், அய்யங்கார், சாஸ்திரி, சர்மா.. இப்படி இன்னும் பல சாதிகள் உண்டு! இவர்கள் ஆரியர்கள்! பார்ப்பனர் என்ற சொல்லாடல் சங்க இலக்கியங்களிலேயே காணப்படும் ஒரு அடையாளப் பெயர்! இதை வெளிக்கொண்டு வந்து ஆரியர்களை பார்ப்பனர்களாக நமக்கு அடையாளம் இட்டவர் தந்தை பெரியார். பார்ப்பனர் என்ற சொல் தந்தை பெரியார் உருவாக்கியதல்ல! சங்க இலக்கியக் காலத்திலேயே அவாள்களுக்கு பார்ப்பனர் என்று பெயரிட்டு விட்டனர் நம் முன்னோர்கள்!
    பார்ப்பனர் என்று குறிப்பிடுவதை ஒரு இனமாகப் பாருங்கள்! சாதிப் பெயராகப் பார்த்து நண்பர் மதிமாறனின் கருத்துக்களை தவறான கண்ணோட்டத்தில் பார்ப்பதை திருத்திக் கொள்ள வேண்டும் என்று நம் இணைய நண்பர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.
    காசிமேடுமன்னாரு.

  9. மதிமாறன் சார்..நீங்கள் உலக விஷயங்கள் எல்லாம் தெரிந்தவரா?
    பெரும்பாலான மக்களின் கருத்துக்கு எதிராக சொல்லியே பிரபலமடைபவர்.

Leave a Reply

Discover more from வே. மதிமாறன்

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading