
‘செவ்வாய் கிரகத்தில் வாழ முடியுமா என்று ஆராய்ந்து வருகிறோம்.’
–இந்திய விஞ்ஞானிகள்.
அது சரி. இங்கேயே வாழ முடியல. போயிட்டாங்க… செவ்வாய் கிரகத்துக்கு. விலைவாசி உயர்வால் சோத்துக்கு இல்லாமல் சாக வேண்டியுள்ளது. அப்படியே சோறு கிடைச்சாலும், ஜாதி வெறி, மத வெறி தாக்குதல்களில் தப்ப முடியல. கடல்ல மீன் புடிக்க போனா சுட்டுக் கொல்றான். மழை, பனி காலங்களில் ஒதுங்குவதற்கு சின்ன இடம் கூட இல்லாமல் கை குழந்தைகள், முதியவர்கள், கர்ப்பிணி பெண்கள் குளிர் நடுக்கத்தில் சாகிறார்கள். பெண்கள்; சிறுமிகளாக இருந்தாலும் 90 வயது கிழவியாக இருந்தாலும் பாலியல் வன்முறை செய்து கொலை செய்கிறார்கள்.
அதுக்கு பஞ்சாயத்து பேசுறவன் குழந்தைகளையும் கிழவிகளையும் குற்றவாளியாக்கி, ‘மொதல்ல நீங்க ஒழுங்கா டிரஸ் பண்ணுங்க.. கவர்ச்சியா உடை உடுத்தாதிங்க’ என்று தீர்ப்பு வழங்குறான்.
ஒருவேளை ‘செவ்வாய் கிரகத்துலேயும் நல்லா வாழலாம்’ என்று முடிவுக்கு வந்தாலும், இங்க எவனெல்லாம் அடுத்தவனைக் கெடுத்து நல்லா வாழறானோ அவன்தான் அங்கபோயும் வாழ்வான்.
இதில் செவ்வாய் என்ன திங்கள் என்ன?
தொடர்புடையது:
போலி மருந்து:பிசாசை ஒழிச்சிட்டு, கொள்ளிவாய் பிசாசை குடி வைச்சக் கதை
