Site icon வே. மதிமாறன்

இந்திய ராஜபக்சே! வருங்கால பிரதமரா தமிழினக் காவலரா?

cartoonரேந்திர மோடி இஸ்லாமிய எதிர்ப்பாளர், தீவிர இந்துக் கண்ணோட்டம் கொண்டவர், குஜராத்தில் இஸ்லாமியர்களை கொன்று குவித்தவர், ‘இஸ்லாமியர் எதிர்ப்பு’ அமெரிக்காகாரனே கட்டம் கட்டும் அளவிற்கு அவருடைய இஸ்லாமியர் எதிர்ப்பு உலகப் புகழ் பெற்றது.

ஆனால், ‘அவருதான் அடுத்த பிரதமர்’ என்று இந்தியாவையே குஜராத்தாக மாற்ற முயற்சிக்கிறார்கள் பார்ப்பன, பார்ப்பன மனோபாவம் கொண்ட ஊடகங்கள்.

நாடாளுமன்ற தேர்தல் நடந்து முடிந்து பி.ஜே.பி. வெற்றி பெற்று விட்டதைப் போல, ‘பிரதமராக அத்வானியா – மோடியா?’ என்பதாக அரசியல் நடத்துகிறது பி.ஜே.பி. அதற்கு தோதாக இந்த ஊடகங்களும் ஊதுகின்றன.

‘தமிழ்நாட்டில் மோடி போட்டியிடுவார்’ என்று தங்கள் விருப்பங்களை செய்திகளாக வெளியிடுகின்ற பத்திரிகைகள். அதற்கும் வாய்ப்பிருக்கு. ஒருவேளை அதிமுகவுடன் கூட்டணி அமைந்தால் அவர் ‘குஜராத் – தமிழ்நாடு’ இரண்டு தொகுதிகளில் போட்டியிடலாம். அதன் மூலமாக தமிழகத்தில் பி.ஜே.பி.க்கு ஒரு செல்வாக்கை ஏற்படுத்தலாம் என்பது அவர்கள் திட்டமாககூட இருக்கலாம்.

எது எப்படியோ?

மோடி இனி புதியதாக எந்த மோசமானதையும் செய்யப் போவதில்லை. குஜராத்தில் செய்தவைகளை விரிவுபடுத்தும் வேலையைதான் செய்வார். அதனால் தன் செல்வாக்கை உயர்த்திக் கொள்வதற்காக எந்த பொய்யும் சொல்லுவார். சொல்வார்கள்.

அதில் ஒரு திட்டமாக, இலங்கைத் தமிழர்கள் துயரம் பற்றியும், அதையும் தாண்டி விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் பற்றியும் அவர் புகழுரைக்காமல் இருந்தால் அதுவே அவர் தமிழர்களுக்கு செய்யும் பெரிய உதவி.

அப்படி பேசி விட்டால், அவர் தமிழனக் காவலராக அவதாரம் எடுப்பதை, யாராலும் தடுக்க முடியாது. பிறகு அவரை எதிர்ப்பவர்கள் மட்டுமல்ல; ஒத்துக் கொள்ளாதவர்களை கூட தமிழன விரோதிகளாக, துரோகிகளாக சித்தரித்து விடுவார்கள்.

ராஜபக்சே ஆதரவிற்காக ‘தி இந்து’ நாளிதழை கடுமையாக விமர்சிக்கிற தமிழ்த் தேசிய கண்ணோட்டம் கொண்டவர்கள். ‘இந்து’வின் மோடி ஆதரவை கண்டிப்பதில்லை. இந்த ‘அறிகுறி’ இவர்களும் ‘தி இந்து’வைப் போலவே ‘மோடியை ஆதரிப்பார்கள்’ என்கிற அடையாத்தையே காட்டுகிது.

ராஜபக்சே ஆதரவாளர்களுக்கும் ஈழ ஆதரவாளர்களுக்கும் ‘நல்லவராய்’ ஒரே சமயத்தில் மோடியால் எப்படி இருக்க முடியும்? இரண்டில் ஒன்று பொய்யாகத்தான் இருக்கும். அந்தப் பொய் ஈழ ஆதரவுதான்.

மோடி பிரதமராக அறிவிக்கப்பட்டதை ‘ஒரு பார்ப்பனரல்லாதவருக்கு ஆதரவு’ என்கிற முறையில் அவரை எப்படி ஒரு பெரியார் – அம்பேத்கர் தொண்டர்கள் ஆதரிக்க முடியாதோ,
அதுபோலவே தான் ‘காங்கிரஸ் எதிர்ப்பு துருப்புச் சீட்டாக’ தமிழர்களிடம் செல்வாக்கு பெறுவதற்கு அவர் ஈழத் தமிழர்களின் பிரச்சினையை ஓட்டுக்காக பயன்படுத்தினால் ஆதரிக்க முடியாது. கூடாது.

நரேந்திரமோடி ஒரு இந்திய ராஜபக்சே!

எதன் பேரினாலும் நரேந்திர மோடியை ஆதரிப்பது தமிழன விரோத ராஜபக்சேவை ஆதரிப்பது போன்றதே.

**

14-9-2013 அன்று எழுதியது. வேறு கட்டுரைகள் பிரசுரிக்க வேண்டியிருந்ததால் தாமதமாக..

தொடர்புடையவை:

தி இந்து தமிழ் நாளிதழ் : மவுண்ரோட் மகாவிஷ்ணு; அதே குட்டை இன்னொரு மட்டை

‘புரட்சிகர மாற்றம்! தி இந்து’ வில். ஆச்சரியம் ஆனால் உண்மை; அதே விலை!

சோசலிச ரஷ்யாவின் வீழ்ச்சியும் கடாபி படுகொலையும்

Exit mobile version