திமுக வின் தேர்தல் அறிக்கையை பார்த்தால்,
அது எதிர்கொள்ளும் முதல் நாடாளுமன்றத் தேர்தல் இதுதானோ என்ற சந்தேகம் வருகிறது.
‘உன் ஜாதிய சொல்லு. நீ தமிழனா இல்லையா என்பதை சொல்கிறேன்’ என்பதாகதான் இருக்கிறது தீவிர தமிழ்த்தேசியம்.
சிலர் வெளிப்படையா கேட்கிறார்கள்.
பலர் அதையே உள்அரசியலாக வைத்து புழங்குகிறார்கள்.
அப்படியானால் தன் ஜாதிக்காரனைப் பார்த்தால் இவர்கள் எப்படி பொங்கி பூரிப்பார்கள்?
மன உளைச்சலால் யாருக்கும் ஆதரவாக பிரச்சாரம் இல்லை; ‘சுயநலத்துக்காக அமைக்கப்பட்டது பாஜக கூட்டணி’: தமிழருவி மணியன்
என்னங்க இது அநியாயம்? இவ்வளவு வேலை பாத்தவருக்கு ஒரு சீட் கொடுக்கக்கூடாதா? நன்றி கெட்ட உலகம்.
வைகோ ஏழுல ஒண்ணு குடுப்பாருன்னு நினைச்சா.. ச்சே.. இப்படி பண்ணிட்டாரே.. இதுக்கா நான் இவ்வளவு கஷ்டப்பட்டேன்.
‘அவர நான் முதல்வராக்க மாட்டேன்.’
‘காங்கிரஸ், திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக பாஜக தலைமையில் புதிய அணியை உருவாக்க வேண்டும் என்று முயற்சித்தேன். அதன் விளைவாகவே தேமுதிக, பாமக, மதிமுக ஆகிய கட்சிகளை கூட்டணியில் இணைக்கச் செய்தேன்’: தமிழருவி மணியன்.
மதிமுக திராவிடக் கட்சி இல்லதான். சரியான மதிப்பீடு. ‘அருவி அய்யா’ அதிமுகவையும் ஆதரிப்பவர்தான். திமுக வை மட்டும்தான் தீவிரமாக எதிர்ப்பவர்.
அய்யா அருவியும் பார்ப்பனர்களும் பார்ப்பன பத்திரிகைகளும் பார்ப்பன பத்திரிகையில் இருக்கிற பச்சைத் தமிழர்களும் என்ன காரணத்திற்காக திமுக வை எதிர்க்கிறார்களோ..
அதே காரணத்திற்காகவே நாம் திமுக வை ஆதரிச்சிதான் ஆகணும்.

