ஜாதிய சொல்லு-தேர்தல் அறிக்கை-மன உளைச்சல்

???????????????????????????????

திமுக வின் தேர்தல் அறிக்கையை பார்த்தால்,
அது எதிர்கொள்ளும் முதல் நாடாளுமன்றத் தேர்தல் இதுதானோ என்ற சந்தேகம் வருகிறது.

March 16

 ‘உன் ஜாதிய சொல்லு. நீ தமிழனா இல்லையா என்பதை சொல்கிறேன்’ என்பதாகதான் இருக்கிறது தீவிர தமிழ்த்தேசியம்.
சிலர் வெளிப்படையா கேட்கிறார்கள்.
பலர் அதையே உள்அரசியலாக வைத்து புழங்குகிறார்கள்.

அப்படியானால் தன் ஜாதிக்காரனைப் பார்த்தால் இவர்கள் எப்படி பொங்கி பூரிப்பார்கள்?

March 17

மன உளைச்சலால் யாருக்கும் ஆதரவாக பிரச்சாரம் இல்லை; ‘சுயநலத்துக்காக அமைக்கப்பட்டது பாஜக கூட்டணி’: தமிழருவி மணியன்

என்னங்க இது அநியாயம்? இவ்வளவு வேலை பாத்தவருக்கு ஒரு சீட் கொடுக்கக்கூடாதா? நன்றி கெட்ட உலகம்.

March 17

வைகோ ஏழுல ஒண்ணு குடுப்பாருன்னு நினைச்சா.. ச்சே.. இப்படி பண்ணிட்டாரே.. இதுக்கா நான் இவ்வளவு கஷ்டப்பட்டேன்.

‘அவர நான் முதல்வராக்க மாட்டேன்.’

March 18

‘காங்கிரஸ், திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக பாஜக தலைமையில் புதிய அணியை உருவாக்க வேண்டும் என்று முயற்சித்தேன். அதன் விளைவாகவே தேமுதிக, பாமக, மதிமுக ஆகிய கட்சிகளை கூட்டணியில் இணைக்கச் செய்தேன்’: தமிழருவி மணியன்.

மதிமுக திராவிடக் கட்சி இல்லதான். சரியான மதிப்பீடு. ‘அருவி அய்யா’ அதிமுகவையும் ஆதரிப்பவர்தான். திமுக வை மட்டும்தான் தீவிரமாக எதிர்ப்பவர்.
அய்யா அருவியும் பார்ப்பனர்களும் பார்ப்பன பத்திரிகைகளும் பார்ப்பன பத்திரிகையில் இருக்கிற பச்சைத் தமிழர்களும் என்ன காரணத்திற்காக திமுக வை எதிர்க்கிறார்களோ..
அதே காரணத்திற்காகவே நாம் திமுக வை ஆதரிச்சிதான் ஆகணும்.

One thought on “ஜாதிய சொல்லு-தேர்தல் அறிக்கை-மன உளைச்சல்

  1. த.அறிவு மதி தமிழ்த்தேசியத்தின் வாயிலாக நவீன பார்ப்பனியம் குடியேறி இருக்கிறது..என்று நன்றாக புரிந்து கொள்ளமுடிகிறது
    March 17 at 7:47pm · Unlike · 2

    த.அறிவு மதி இவர்கள் சொல்வது தமிழ் இலக்கியங்களில் சாதி இருக்கிறதாம்… இனிமேலும் இருக்குமாம்…என்று வகுப்பு எடுக்கிறாராம் அறிமாவளவன்….
    March 17 at 7:51pm · Like · 1

    Sendraya Perumal · 24 mutual friends
    ஊருக்குத்தான் உபதேசம் செய்வார்கள் தேசியவாதிகள்.
    March 17 at 8:28pm · Like · 1

    Prabhu Jeevan சாதி பார்த்து பழகுபவர்களிடம் எச்சரிக்கையாய் இருங்கள்.

    அவர்கள் உட்சாதி உணர்வுடனும் இருக்கும் சைக்குகள்
    March 17 at 8:33pm · Like · 2

    Pakath Pakath jathiya
    santharpavathikal theseyam peasukerarkal ejarikkai
    March 17 at 9:13pm · Like

    Muthu Amalraj இது உண்மைதான். எங்கும் நீக்கமற நிறைன்திருக்கிறது.
    March 17 at 10:45pm · Like

    ஆர்த்திக் தமிழன் தெளுங்கனை பார்த்தல் குதுகலமாகும் திராவிடம் இருக்கும்போது, சகத்தமிழனாய் பார்த்தல் பொங்கி பூரிக்கும் தமிழர்கள் இருப்பது ஒன்றும் தவறாக தெரியவில்லை…
    March 17 at 10:50pm · Like · 1

    Bhaskar Viswanathan Muthu · 72 mutual friends
    Most of the Tamil Nationalists now are nothing but casteist Tamil Nationalists. Their ideology is Vellaliyam, a cobra of twin-headed one with Brahminism.
    March 17 at 10:56pm · Like

    வே மதிமாறன் ஆர்த்திக் தமிழன் //சகத்தமிழனாய் பார்த்தல் பொங்கி பூரிக்கும் தமிழர்கள் இருப்பது ஒன்றும் தவறாக தெரியவில்லை.//

    யார் அந்த சகத்தமிழன்?
    March 17 at 11:09pm · Like

    Muthu Amalraj அப்படி எந்தத் தமிழனும் இங்கு பூரிக்கவில்லை அதுதான் பிரச்சினையே.
    March 17 at 11:10pm · Like

    வே மதிமாறன் ஆமாம். அவன்தான் ஜாதிக்காரனைப் பார்த்து பூரிக்கிறானே..
    March 17 at 11:11pm · Like

    ஆர்த்திக் தமிழன் தமிழ்சாதிக்காரன் அனைவரும் தமிழன்… சாதி என்பதைவிட குடும்பம் என்று சொல்லலாம்…

    சில வந்தேறிகள் திராவிடம் என்ற பெயரில் வந்து, பார்ப்பான் செய்து விட்டு போன சாதி என்னும் சூனியத்தை, தங்கள் அரசியல் சுய லாபதிற்காய் ஊதி பெருக்கி அதில் சுகம் கண்டுக்கொண்டிருக்கின்றார்கள்…
    March 17 at 11:14pm · Like

    ஆர்த்திக் தமிழன் தெளுகனை பார்த்தல் திராவிடம் பேசுபவர்கள் பூரிகின்றார்கள்… தன் சாதிக்காரனை பார்த்தல், சக சாதிக்காரன் பூரிக்கின்றான்… ரெண்டும் ஒன்றுதானே….
    March 17 at 11:15pm · Like

    வே மதிமாறன் //சாதி என்பதைவிட குடும்பம் என்று சொல்லலாம்//
    சாக்கடைக்கு ரோஜா பூ என்று பெயர் வைத்தால் வாசனையா வீசப்போவுது?
    March 17 at 11:17pm · Like · 3

    ஆர்த்திக் தமிழன் இந்த கருத்து திராவிடம் பேசுபவர்களுக்கு ரொம்ப பொருந்தும்… திராவிடம் பேசி பிழைப்பு நடத்த தமிழர்களை சாதியாக பிரித்த சிலர், thamizhar தலைவர் என்று சொல்லிட்டு சுத்துறாங்க.. அவங்க கிட்ட சொல்லுங்க… “சாக்கடைக்கு ரோஜா பூ என்று பெயர் வைத்தால் வாசனையா வீசப்போவுது?”
    March 17 at 11:21pm · Like

    Radha Krishnan · 41 mutual friends
    சாதி..என்பது..ஏற்றத்தாழ்வற்று,,அடையாளமாக இருந்தால் இவ்வளவு எதிர்ப்பை சந்திக்குமா என்பது..வேறு ஒரு பார்வை.இங்கு ஆதிக்க சாதி மன நோய் என்பது.. இந்தியாவெங்கும்..ஏன் தமிழன் பரவிய இடமெல்லாம் பரப்பப் படும் ஒன்றாக இருக்கிறது.இதில் ஒடுக்கப் படும் சாதியினரின் சாதி அடையாளம் என்பது ஆதிக்க சாதி மன நோய் அடையாளக் காரணத்தால்.. மட்டுமே நிலைத்திருக்கிறதே தவிர ,இரண்டும் ஒன்றல்ல…திராவிடம் என்பது ஆரியத்துக்கு எதிரான ஒரு கருத்தியல்.அது சாதி போன்று விரிந்த தளத்தில் இயங்கும் ஒன்றல்ல..ஆரியத்தின் மாயைகளைப் புரிந்து கொள்ள தமிழகத்தில் உதவும் ஒரு போக்கு/அரசியல் தானே தவிர வேறொன்றுமில்லை.
    March 18 at 12:08am · Like · 1

    Thamizan Arunthathiyan ஜாதிப் பெயரை போடாதீர்கள் என்று ராமசாமி சொன்னது வேற்றினத்தார் தம் அடையாளத்தை மறைத்து தம்மை தமிழர் என்று காட்டி அரசியலில் ஆதிக்கம் செலுத்தவே பயன்பட்டது. சாதி ஒழிப்புக்குப் பயன்படவில்லை. ஆகவே ஜாதிப் பெயரிப் போட்டுக்கொண்டால்தான் தமிழரா இல்லையா என்று தெரியும். அடையாளத்துக்காக ஜாதிப் பெயரைப் போட வேண்டும். இதில் ராமசாமியின் பார்வை தமிழருக்கு எதிரானதே.
    March 18 at 12:09am · Like

    ஆர்த்திக் தமிழன் Radha Krishnan @ ஆரிய மாயை எதிர்த்து திராவிடம் பேசுவதற்கு 1000 வருடங்களுக்கு முன்னரே சிவவாக்கியர் இதெல்லாம் சொல்லிவிட்டார்… இருந்தாலும் பெரியார் செய்ததை நாங்கள் குறை செல்லவில்லை..

    அதே நேரம், ஆரியர்களை எதிர்ப்பது போன்று நாடகம் ஆடி, ஆரியர்கள் தொடங்கிய…See More
    March 18 at 9:15am · Like

    Arunan Durai
    Arunan Durai’s photo.
    March 18 at 7:34pm · Like

    Arunan Durai நான் நேரடியாகவே விசயத்துக்கு வரேன் , கருணாநிதியால் நான் மற்றும் என்னை சார்ந்து இருப்பவர்கள் சந்தித்த கொடுமைகள், வழக்கு , சிறை , கைது ஏராளம் ,ஏராளம் இருந்தாலும் கூட , சமூக நீதி என்ற தலத்தில் அவர் இதுவரையில் சரியாகவே இருந்து வந்துள்ளார் , அவர் வீட்டில்…See More
    March 18 at 7:51pm · Unlike · 4

    Velu Sadanantham · 24 mutual friends
    அருமை அருணன் துரை.
    March 18 at 9:53pm · Like

Leave a Reply

%d bloggers like this: