Site icon வே. மதிமாறன்

புரட்சிகர பாரதியும் பிற்போக்கு பெரியாரும்

Religious Belief of Periyar E. V. Ramasamy

தாலுகா போர்ட் பிரசிடெண்ட், ஜில்லா போர்ட் மெம்பர், யுத்தக் கமிட்டி கார்யதரிசி, ஹானரரி ரிக்ரூடிங் ஆபிசர், வணிகர் சங்கம், விவசாயிகள் சங்கம், தேவஸ்தானம், சங்கீத சபை முதலிய 28 பொது அமைப்புகளில் இருந்த பொறுப்புகளையும்,
1919 ஆம் ஆண்டு ஏற்ற சேர்மன் பதவியையும் அதே ஆண்டில் ராஜினமா செய்து விட்டு காங்கிரசில் சேர்ந்தார் பெரியார்.

காரணம் 1919 ஆம் ஆண்டு ஏப்ரல் 13 அன்று ஜாலியன்வாலா பாக் படுகொலைகளை செய்த பிரிட்டிஷ் அரசை கண்டித்தே பெரியார் அந்த முடிவுக்கு வந்தார்.

ஆனால், தன் வாழ்நாளையே பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக அர்பணித்தவர் என்று போற்றப்படுகிற மஹாகவி சுப்பிரமணிய பாரதியார்,

இந்தியாவையே உலுக்கிய ஜாலியன்வாலா பாக் படுகொலைகளுக்காக வெள்ளை அரசை எதிர்த்து, கண்டித்து ‘சுதேசமித்திரன்’ பத்திரிகையில் அல்ல,

திருவல்லிக்கேணி அக்ரகாரத்து ‘சந்து’ முனையில் நாலுபேரிடம் ரகசியமாககூட பேசவில்லை. பேசியிருந்தால் பாரதி பக்தர்கள் இந்நேரம் அதை புத்தகம்போட்டு புரட்சி ஏற்படுத்தியிருப்பார்களே?

ஆனால் அப்போது பாரதி தீவிரமாக எதைக் கண்டித்தார்? யாரை கண்டு பொங்கி எழுத்தார் தெரியுமா?
பார்ப்பனரல்லாதார் அமைப்பான ‘நீதிக் கட்சி’யை உண்டு இல்லை என்று கண்டித்து ‘நீர்துளி’யாக்கினார். அதுவும் ‘பிரமணர் சங்க’ கூட்டங்களில் கலந்து கொண்டு.

குறிப்பு:
பாரதியை தன் வழிகாட்டியாக, குருவாக போற்றும் ‘ஞாநி’ போன்ற பெரியாரிய, புரட்சிகர ஆதரவாளர்கள் வழக்கம்போல் இதற்கு பதில் சொல்ல வேண்டாம்.

February 28

‘மனு’ விற்கு மறுபெயர்

பெரியாருக்கு ஒரு நியாயம்; பாரதிக்கு ஒரு நியாயமா?

அசுரனின் தாடி மயிரைக்கூட அசைக்க முடியாது

Exit mobile version