பேராசிரியர் திருவாசகம், (Thiru Vasagam) நேற்று மதியம் தொலைபேசியிலும் கேட்டார். பிறகு கேள்வியாகவும் எழுதினார்:
இயக்குனர் தங்கர் பச்சான் 15.6.2014 தி இந்து நாளிதழில் பாபாசாஹேப் அம்பேத்கர் திரைப்படத்தை தமிழில் வெளிக் கொண்டுவர அவர் கடுமையாக முயற்சி செய்ததாகவும் அவரே களத்தில் இறங்கி போராடியதாகவும் பிறகு அம்முயற்சி தோற்று போனதாகவும் ஒரு அரிய ரகசியத்தை சொல்லியிருக்கிறார். அப்படியா தோழர்?’ என்று.
தோழர் திருவாசம் சொன்னதற்குப் பிறகு தான் அந்தப் பேட்டியை படித்தேன்.
புதிய தகவலாகவும் தங்கர் பச்சானுக்கு மட்டுமே தெரிந்த ரகசியமாகவும் இருக்கிறது; அதாவது அவர் பாபாசாஹேப் அம்பேத்கர் திரைப்படத்தை வெளி கொண்டுவர முயற்சி செய்தது, அவரைத் தவிர அல்லது அவருக்குப் பிறகு இந்த உலகத்தில் அவருக்கு மட்டும் தான் தெரியும் போல.
அதுகூட இப்போது ‘இந்து’ பேட்டியாளர் அவரிடம் கேட்டப் பிறகுதான் அவருக்கே தெரிந்திருக்கிறது.
சரி. பிரமுகர் அதுவும் திரைத்துறை பிரமுகர், இவ்வளவு தீவிரமா முயற்சி செய்து தோல்வியடைந்த பிறகு, எங்களைப் போன்ற சாமான்யர்கள் முயற்சியில் அந்தப் படம் வெளிவந்தது எப்படி?
அடுத்து, அந்தப் படத்தின் மீது இவ்வளவு அக்கறை கொண்ட அவர், படம் வெளியான பிறகு அதற்கு அவர் செய்த உதவி அல்லது விளம்பரம் அல்லது இப்போது சொல்வது போன்ற கருத்துக்களைக் கூட அப்போது ஏன் சொல்லவில்லை?
இப்படி ஒரு பதிலை அவர் சொல்வதற்குக் காரணம் இருக்கிறது.
ஒரு தீவிரமான அம்பேத்கரிஸ்டைப் போல் தலித் தலைவர்களை மிக கடுமையாக விமர்சித்து பேசுகிற அவரிடம்,
பேட்டியாளர் ஆர்.சி. ஜெயந்தன் :
இந்த இடத்தில் திரைப்படக் கலைஞன் என்ற முறையில் உங்களிடம் ஒரு கேள்வி. அம்பேத்கர் திரைப்படத்தை தமிழ் மக்களிடம் கொண்டுசேர்க்கத் தவறிவிட்டீர்களே?
எனறு குற்றச்சாட்டாகவே அந்தக் கேள்வியை கேட்கிறார். ஏன் ஜெயந்தன் அப்படி முடிவாகவே அவரிடமே கேட்கிறார் என்றால், அவருக்கு நன்றாக தெரியும்; தங்கர் பச்சான் டாக்டர் அம்பேத்கர் திரைப்படம் வெளியாக எதுவும் செய்யவில்லை என்று.
ஆர்.சி. ஜெயந்தன் பத்திரிகையாளர் மட்டுமல்ல அவர் முன்னணி இயக்குநர்களிடம் திரைத்துறையில் பணியாற்றியவரும் கூட.
அது மட்டுமல்ல, நானும் எனது நண்பர்களும் டாக்டர் அம்பேத்கர் திரைப்படத்தை வெளிகொண்டுவர முயற்சித்ததையும் அவர் அறிவார். எங்கள் பணியை குறிப்பிட்டு ஜெயந்தன் ‘ஆஸ்கர் ரவியின் சகோதரர் அம்பேத்கர் படத்தை முடக்கினாரா?’ என்ற தலைப்பில் கட்டுரையும் எழுதியிருக்கிறார்.
ஜெயந்தனின் குற்றச்சாட்டில் இருந்து தப்பிபதற்கு ஒரே வழியாக இப்படி பச்சையான ‘உண்மையை’ சொல்லியிருக்கிறார் தங்கர் பச்சான்.
சரி அதெல்லாம் இருக்கட்டும்.
அம்பேத்கர் தத்துவங்களுக்காகவே தன் வாழ்க்கையை ஒப்படைத்ததைப்போல் தலித் தலைவர்களை மிக கடுமையாக விமர்சிக்கிற இவர், அம்பேத்கரின் கருத்துக்களுக்காக தன் திரைப்படங்களில் என்ன செய்தார் என்று நான் கேட்கப் போவதில்லை;
ஏனென்றால் சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி, ஒரு வன்னிய அய்யப்பசாமியாக மாறி எப்படி பிரச்சினையை தீர்த்துக் கொண்டார் என்பது நாம் அறிந்ததே.
ஆனால், இந்த அம்பேத்கரிஸ்டிடும் நான் கேட்க விரும்புவது,
தர்மபுரி விவகாரத்தில் மருத்துவர் அய்யா ராமதாசும் பாமகவும் தலித் மக்களுக்கு செய்த அந்த ‘பெரும்’ பணிகுறித்து என்ன சொல்கிறார்? அல்லது என்ன சொல்லியிருக்கிறார்?
*
June 16 அன்று facebook ல் எழுதியது.
சினிமாவிற்கு பாட்டுத் தேவையில்லை; தங்கர் பச்சான் சரியாதான் சொன்னாரு
தங்கர்பச்சான், பாரதிராஜாவின் இன உணர்வு அல்லது தமிழ் சினிமா இயக்குநர்களின் பெர்பாமன்ஸ்!

