தங்கர் பச்சான் சாரின் தலித் பாசம்!

Thangar-Bachan

பேராசிரியர் திருவாசகம், (Thiru Vasagam) நேற்று மதியம் தொலைபேசியிலும் கேட்டார். பிறகு கேள்வியாகவும் எழுதினார்:

இயக்குனர் தங்கர் பச்சான் 15.6.2014 தி இந்து நாளிதழில் பாபாசாஹேப் அம்பேத்கர் திரைப்படத்தை தமிழில் வெளிக் கொண்டுவர அவர் கடுமையாக முயற்சி செய்ததாகவும் அவரே களத்தில் இறங்கி போராடியதாகவும் பிறகு அம்முயற்சி தோற்று போனதாகவும் ஒரு அரிய ரகசியத்தை சொல்லியிருக்கிறார். அப்படியா தோழர்?’ என்று.

தோழர் திருவாசம் சொன்னதற்குப் பிறகு தான் அந்தப் பேட்டியை படித்தேன்.

புதிய தகவலாகவும் தங்கர் பச்சானுக்கு மட்டுமே தெரிந்த ரகசியமாகவும் இருக்கிறது; அதாவது அவர் பாபாசாஹேப் அம்பேத்கர் திரைப்படத்தை வெளி கொண்டுவர முயற்சி செய்தது, அவரைத் தவிர அல்லது அவருக்குப் பிறகு இந்த உலகத்தில் அவருக்கு மட்டும் தான் தெரியும் போல.
அதுகூட இப்போது ‘இந்து’ பேட்டியாளர் அவரிடம் கேட்டப் பிறகுதான் அவருக்கே தெரிந்திருக்கிறது.

சரி. பிரமுகர் அதுவும் திரைத்துறை பிரமுகர், இவ்வளவு தீவிரமா முயற்சி செய்து தோல்வியடைந்த பிறகு, எங்களைப் போன்ற சாமான்யர்கள் முயற்சியில் அந்தப் படம் வெளிவந்தது எப்படி?

அடுத்து, அந்தப் படத்தின் மீது இவ்வளவு அக்கறை கொண்ட அவர், படம் வெளியான பிறகு அதற்கு அவர் செய்த உதவி அல்லது விளம்பரம் அல்லது இப்போது சொல்வது போன்ற கருத்துக்களைக் கூட அப்போது ஏன் சொல்லவில்லை?

இப்படி ஒரு பதிலை அவர் சொல்வதற்குக் காரணம் இருக்கிறது.

ஒரு தீவிரமான அம்பேத்கரிஸ்டைப் போல் தலித் தலைவர்களை மிக கடுமையாக விமர்சித்து பேசுகிற அவரிடம்,
பேட்டியாளர் ஆர்.சி. ஜெயந்தன் :
இந்த இடத்தில் திரைப்படக் கலைஞன் என்ற முறையில் உங்களிடம் ஒரு கேள்வி. அம்பேத்கர் திரைப்படத்தை தமிழ் மக்களிடம் கொண்டுசேர்க்கத் தவறிவிட்டீர்களே?

எனறு குற்றச்சாட்டாகவே அந்தக் கேள்வியை கேட்கிறார். ஏன் ஜெயந்தன் அப்படி முடிவாகவே அவரிடமே கேட்கிறார் என்றால், அவருக்கு நன்றாக தெரியும்; தங்கர் பச்சான் டாக்டர் அம்பேத்கர் திரைப்படம் வெளியாக எதுவும் செய்யவில்லை என்று.
ஆர்.சி. ஜெயந்தன் பத்திரிகையாளர் மட்டுமல்ல அவர் முன்னணி இயக்குநர்களிடம் திரைத்துறையில் பணியாற்றியவரும் கூட.

அது மட்டுமல்ல, நானும் எனது நண்பர்களும் டாக்டர் அம்பேத்கர் திரைப்படத்தை வெளிகொண்டுவர முயற்சித்ததையும் அவர் அறிவார். எங்கள் பணியை குறிப்பிட்டு ஜெயந்தன் ‘ஆஸ்கர் ரவியின் சகோதரர் அம்பேத்கர் படத்தை முடக்கினாரா?’ என்ற தலைப்பில் கட்டுரையும் எழுதியிருக்கிறார்.

ஜெயந்தனின் குற்றச்சாட்டில் இருந்து தப்பிபதற்கு ஒரே வழியாக இப்படி பச்சையான ‘உண்மையை’ சொல்லியிருக்கிறார் தங்கர் பச்சான்.

சரி அதெல்லாம் இருக்கட்டும்.
அம்பேத்கர் தத்துவங்களுக்காகவே தன் வாழ்க்கையை ஒப்படைத்ததைப்போல் தலித் தலைவர்களை மிக கடுமையாக விமர்சிக்கிற இவர், அம்பேத்கரின் கருத்துக்களுக்காக தன் திரைப்படங்களில் என்ன செய்தார் என்று நான் கேட்கப் போவதில்லை;

ஏனென்றால் சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி, ஒரு வன்னிய அய்யப்பசாமியாக மாறி எப்படி பிரச்சினையை தீர்த்துக் கொண்டார் என்பது நாம் அறிந்ததே.

ஆனால், இந்த அம்பேத்கரிஸ்டிடும் நான் கேட்க விரும்புவது,
தர்மபுரி விவகாரத்தில் மருத்துவர் அய்யா ராமதாசும் பாமகவும் தலித் மக்களுக்கு செய்த அந்த ‘பெரும்’ பணிகுறித்து என்ன சொல்கிறார்? அல்லது என்ன சொல்லியிருக்கிறார்?

*
June 16  அன்று facebook ல் எழுதியது.

சினிமாவிற்கு பாட்டுத் தேவையில்லை; தங்கர் பச்சான் சரியாதான் சொன்னாரு

தங்கர்பச்சான், பாரதிராஜாவின் இன உணர்வு அல்லது தமிழ் சினிமா இயக்குநர்களின் பெர்பாமன்ஸ்!

அம்மாவின் கைப்பேசி: ஆனந்த விகடன்-குமுதத்தின் அவதூறு

‘தங்கமீன்கள் சினிமா பற்றி எழுத வேண்டும்’; எதுக்கு எழுதணும்?

3 thoughts on “தங்கர் பச்சான் சாரின் தலித் பாசம்!

  1. Kudiyarasan Kandaswamy · 66 mutual friends
    மதி அவர்களின் – பதிவு, நான் முழுமையாக ஏற்கிறேன் …..
    June 16 at 7:52am · Unlike · 6

    Agash Agash · Friends with வேந்தன். இல and 6 others
    u r correct
    June 16 at 8:09am · Unlike · 2

    Thiru Vasagam நேற்று தமிழ் இந்துவைப் புரட்டிக் கொண்டிருந்த போது தங்கரின் பேட்டிகண்ணில் பட்டது. வழக்கம் போல தமிழன்களை அசிங்க அசிங்கமாக திட்டும் அதே ரோதனை என்று கடக்க முற்பட்டால் வேறு விதமான கேள்வி பதில்கள். குறிப்பாக ‘பாபாசாஹேப் அம்பேத்கர்’ திரைப்பட வெளியீடு தொடர்பான அவருடைய பதில் பச்சை “உண்மை “(நன்றி தோழர் ) என்று தோன்றியது.
    ‘பாபாசாஹேப் அம்பேத்கர்’ திரைப்பட வெளியானதன் பின்னணியில் தோழர் வே.மதிமாறனின் செயல்பாடுகள் குறித்து அறிந்திருக்கிறேன். அதனாலேயே அவரிடம் சில விளக்கங்களைக் கோரினேன். மேலும் இங்கு சில தலித் உணர்வாளர்கள் கூட தங்கரின் அந்த பேட்டியை பாராதட்டியிருந்தார்கள் . இது ஒரு வரலாற்று பதிவாக மாறிவிடுமோ என்று அஞ்சியே தோழர் வே. மதிமாறனின் மறுப்புரையை வேண்டினேன். மேலும் , தங்கர் மாதிரி போலிகளையும் புளுகன்களையும் அம்பலப்படுத்த இவர் தான் மிகச்சரியானவர்.
    June 16 at 8:27am · Like · 9

    Shahul Hameed · 7 mutual friends
    correct
    June 16 at 9:07am · Unlike · 1

    வே மதிமாறன் அபசகுனம் வெளியீடு. தொடர்புக்கு 9750871000 – 9092390017.
    வே மதிமாறன்’s photo.
    June 16 at 9:27am · Like · 10

    Chelliah Muthusamy தோழர் இன்று தங்கரின் உளறலைப் பார்த்ததும் கொதிப்பு வந்தது. எழுத நினைத்தேன். அதென்ன தலித் தலைவர்கள் சரியில்லை என பிற்படுத்தப்பட்டன்லாம் உளறிட்டுத் திரியறான். அவங்க துரோகம் பண்றாங்கன்னா நீங்க என்னடா கிழிக்கிறீங்கன்னு தோனுச்சி. வழக்கமான ஜாதி வெறியன் ஒருவனின் உளறல்தான் தங்கரின் பேட்டி
    June 16 at 11:25am · Unlike · 2

    Ennares Bradla தோழர் மதிமாறன் அவ்வப்போது இப்படி வேறு உள்ளடி வேலைகளுக்கும்
    நாம் பதில் சொல்ல வேண்டியுள்ளது.தங்களின் இந்த மறுப்புக்கு
    தங்கரிடமிருந்து ஏதேனும் பதில் வந்ததா?
    June 16 at 2:23pm · Unlike · 2

    Arun Prasad · 2 mutual friends
    ஜாதி வெறியனின் உளறல்
    June 16 at 5:09pm · Like · 1

    Vijayan Deena · 2 mutual friends
    Avarum cinema karar thane sir athan athu paper news’a iruku
    June 16 at 7:06pm · Like

    Udaya Kumar magizhchi thozhar nengathan muyarchi panninganu theriyathu ipothan therium roambha perumaaiya iruku unngala nenaichu oru varithan nennga medaila peaathanatha parthu irukka neenga sonnarhu apadiyea manasulla ninuchu periyarayum ambethgaraium inmaikura unnga formulla muthal tharam intha thelivana karuthu migavum a asiyam nandri thozhar
    June 16 at 9:58pm · Like

    நா.இரவிச் சந்திரன் தமிழன் மொழிப்பற்றின் வாயிலாக ஜாதி பெருமைதான் பேசுகிறான் என்பதற்கு தங்கர்பச்சானே சான்றாகும்.
    Yesterday at 3:31am · Unlike · 2

    Rose Kumar · Friends with Sridhar Kannan and 5 others
    thankar… vanniyan yanbathai veda padayaathi yanpathaye perumai kolvaan..
    Yesterday at 8:05am · Like

Leave a Reply

%d bloggers like this: