சினிமாவிற்கு பாட்டுத் தேவையில்லை; தங்கர் பச்சான் சரியாதான் சொன்னாரு

Clipart Image Of Cartoon Music Note

தங்கர் பச்சான் சினிமாவிற்கு பாட்டுத் தேவையில்லாத ஒன்று சொல்லியிருக்கிறாரே?

-எழிலரசன், பாண்டிச்சேரி.

தமிழ் சினிமா உருவாகி 81 ஆண்டுகள் ஆகிவிட்டன. இவ்வளவு ஆண்டுகளில் சினிமா தமிழர்களிடம் எதை உருப்படியாக பதிய வைத்திருக்கிறது என்று பார்த்தால், இசையை (பாடல்கள்) தவிர வேறு ஒன்றுமில்லை.

தங்கர் பச்சான் போன்ற பல இயக்குநர்கள் எடுத்த படங்களை, நினைவில் வைத்துக்கொள்வதற்கே அந்தப் படங்களின் இசையமைப்பாளர்கள்தான் காரணமாக இருக்கிறார்கள்.

‘அழகி’ படத்தை இசைஞானியின் இசை இல்லாமல், இரண்டு ரீல் கூட பார்க்க முடியாது.

ஆனாலும், தங்கர் பச்சானின் இந்தக் கருத்தோடு ஓரளவுக்கு நான் ஒத்துப் போகிறேன்.

இளையராஜாவின் பாடல்களைக் கேட்கும்போது நமக்குள் பல உன்னதமான காட்சிகள் உருவாகிறது. தங்கர் பச்சான் போன்ற இயக்குநர் அதை படமாக்கும்போது ‘அய்யோ’ என்னடா இது..?’ என்று நொந்து கொள்ள வேண்டியிருக்கிறது.

அதனால் படத்தில் பாடல் காட்சிகளை வைக்காமல், ஆடியோ ரீலிஸ் மட்டும் செய்தால் கூட போதும். பாடல்களை காலத்திற்கும் கேட்கிற ரசிகர்கள் அந்த காட்சிகளை கற்பனை செய்து கொள்ள முடியும்.

குத்துப் பாட்டு, குலுக்காட்டம் எல்லாம் வைச்சிதான் பாடல்களை காட்சி படுத்துகிறார் தங்கர்.

தங்கர் பச்சான் எதை கண்டிக்கிறோரோ, அதையே அவர் தீவிரமாக செய்வார். அதனால் அவர் கருத்தை அவரே மறுக்கும்போது, மதிக்காதபோது நாம் ஏன் அதை பொருட்படுத்த வேண்டும்.

*

அம்மாவின் கைப்பேசி வெளியாவதற்கு முன் எழுதியது.

*

திரு.ஷேக் மொய்தீன் அவர்களை ஆசிரியராக கொண்டு வெளிவருகிற தங்கம் நவம்பர் 2012 மாத இதழில் வாசகர் கேள்விக்கு நான் எழுதிய பதில்.

தொடர்புடையவை:

16 வயதினிலே, ஹேராம்; பின்னணி இசையின் துவக்கமும், உன்னதமும்

எம்.எஸ்.வி, இளையராஜா; தமிழ் சினிமாவின் அறிவாளிகள் இசையமைப்பாளர்கள் மட்டும்தான்

டி.எம்.சவுந்தரராஜனுக்கு பாடத் தெரியாது: இளையராஜா அப்படியா சொன்னார்?

எம்.ஜி.ஆர், சிவாஜி; டி.எம்.எஸ் குரலில் வித்தியாசம் காட்டியது உண்மையா?

6 thoughts on “சினிமாவிற்கு பாட்டுத் தேவையில்லை; தங்கர் பச்சான் சரியாதான் சொன்னாரு

 1. கேள்வி, பாட்டு தேவையா? இல்லையா? என்பது பற்றித்தான். பின்னணி இசை தேவையா இல்லையா என்பது பற்றி அல்ல. (‘அழகி’ படத்தை இசைஞானியின் இசை இல்லாமல், இரண்டு ரீல் கூட பார்க்க முடியாது. (100% உண்மை)).

 2. அருமையான பதிவு. குறிப்பாக //இசைஞானியின் இசை இல்லாமல் இரண்டு ரீல் கூட பார்க்கமுடியாது// மிக அற்புதம். இசைஞானியின் இசையில் பாடல்களும், பின்னனி இசையும்,

  அந்த கதைகளின் ஆசிரியர்களும், இயக்குனர்களும் சிந்திக்கவும் செய்யாத உணர்வினை நமக்கு வழங்கியிருக்கிறது… வழங்கிக் கொண்டும் இருக்கிறது.

  விட்டுத்தள்ளுங்க இந்த அரவேக்காட்டு பசங்கள!!!

 3. //அழகி’ படத்தை இசைஞானியின் இசை இல்லாமல், இரண்டு ரீல் கூட பார்க்க முடியாது.

  தவறான கருத்து. சிறப்பான திரைக்கதை உள்ள படம் அது, சாதாரண பின்னணி இசை இருந்தாலும் வெற்றி பெற்றிருக்கும். இளையராஜாவின் இசை சிறப்பானது என்பது வேறு விஷயம்.

 4. `அழகி’வெற்றியில் சம பங்கு இளையராஜாவுடையது.அதற்கு அடுத்த வந்த `தென்றல்’வெற்றியில் வித்யாசாகரின் பங்கும் கணிசமானது.இரண்டு படங்கள் தான் ஓரளவுக்கு தங்கர்பச்சானும் சினிமா எடுத்தார் என்பதைப் பதிவு செய்த படங்கள்.மற்றவை சராசரி ரகம்(ஒன்பது ரூபாய் நோட்டில் சத்யராஜ்தான் நிற்பார்;சொல்ல மறந்த கதையில் சேரனும்,நாஞ்சில்நாடனும் நிற்பார்கள்)மற்றவை அய்யய்யோ…நினைக்கவே முடியவில்லை.
  அழகி பற்றிப் பேசும்போது குறிப்பாக ஒன்றைக் கவனிக்க வேண்டும்.இளையராஜாவுக்கு அடுத்த தலைமுறை உருவாகி அவர்கள் கோலாச்சி,இளையராஜா அதிக படங்கள் இல்லாத காலகட்டம் அது.அந்நிலையில்`ஒளியிலே தெரிவது தேவதையா?’பாடல் அன்றைய மற்ற பாடல்களை முந்திக்கொண்டு ரசிகர்களின் மனதில் ரீங்காரமிட்டது.பல நடிகர்களை,தயாரிப்பாளர்களை,இயக்குநர்களை வாழவைத்தவர் இளையராஜா.அவர்களில் தங்கர்பச்சானும் ஒருவர்.இதை தங்கர்பச்சான் மறக்கலாம்.தமிழ் சினிமாவும்,இளையராஜாவின் என் போன்ற(மதி உள்ளிட்ட) ரசிகர்களும் மறக்கமாட்டோம்.

 5. அறிவு கொயுந்து . இன்னாமா பதிவு எழுதுற பா நீ . சாதி வெறிய பதிவுல காட்டாத , சரியா

Leave a Reply

%d bloggers like this: