20.03.2014 அன்று பெரியார் நூலக வாசகர் வட்டத்தில், ‘பெரியார் ஒருவர் தான் தலித் தலைவர்; அம்பேத்கரியல் பார்வை’ என்ற தலைப்பில் 1 மணி 40 நிமிடங்கள் அடங்கிய என் பேச்சின் முதல் ‘6 நிமிடங்கள்’ குறித்தும் மட்டும்,
கலைஞர் தொலைக் காட்சியில், ‘ஒன்றே சொல், நன்றே சொல்’ நிகழ்ச்சியில் பேராசிரியர் சுப. வீரபாண்டியன் அவர்கள் பேசுகிறார்.
டாக்டர் அம்பேத்கர் – பெரியார் பின்னணியில் இயங்கும் எனக்கு, பேராசிரியர் வழங்கும் சிறப்பான அங்கீகாரம்.
சென்ற ஆண்டு டிசம்பர் 6, டாக்டர் அம்பேத்கர் நினைவு நாள் அன்று ‘நான் யாருக்கும் அடிமையில்லை எனக்கடிமை யாருமில்லை’ என்ற என் நூல் குறித்தும் இதே நிகழ்ச்சியில் பேசியிருந்தார்.
என்னை உற்சாகப்படுத்தி எழுத்தாளனாக, பத்திரிகையாளனாக உருவாக்கியதில் பேராசிரியர் அப்துல்லா (பெரியார் தாசன்) பேராசிரியர் சுப. வீரபாண்டியன் இருவருமே முதன்மையானவர்.
அந்தவகையில் சிறப்பான பேச்சிற்காகவும், நாடறிந்த பேராசிரியர் சுபவீ அவர்கள், பேச்சாளனாகவும் என் பணியைத் துவங்கியிருக்கிற, என் பேச்சை குறிப்பிட்டுப் பேசியிருப்பது, 1989 ல் என்னை எழுத்தாளனாக அங்கீகரித்ததைப்போலவே கருதுகிறேன். அதற்காகவும் நன்றி.
நாளை காலை இந்திய நேரம் 8.30 மணிக்கு மேல் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது. வாய்ப்பிருக்கிற தோழர்கள் அதைப் பதிவு செய்து தந்ததால் மகிழ்ச்சி.
தோழரின் உரையில் நான் முரண்படும் இடம்: கவிஞர் தமிழேந்தி

