அர்ஜுன் சம்பத்திற்கும் அவரின் கட்சியைச் சேர்ந்தவர்களுக்கும் ‘காட்சி ஊடகங்கள்’ அதிக முக்கியத்துவம் தருவது உள்நோக்கம் கொண்டது. அந்த உள் நோக்கம்‘ பெரியார் எதிர்ப்பு’.
அர்ஜுன் சம்பத்தையும் ‘அறிவாளி’யாகப் பார்க்கிற மனோபாவமே பெரியார் மீதான காழ்ப்புணர்ச்சிதான்.
அந்தக் காழ்ப்புணர்ச்சியால் அர்ஜுன் சம்பத்திற்குக் கிடைத்த பிரபலத் தன்மையைப் பெரியார் சிந்தனை கொண்ட ஊடகவியலாளர்களும் பயன்படுத்திக் கொள்வது பரிதாபத்திற்குரியது.
5 June at 10:27 · Edited ·
கோவை மாநகரத்தில் வசிக்கிறார் ஆதித்தமிழர் பேரவையின் தலைவர் அன்பிற்குரிய அதியமான் அவர்கள். அர்ஜுன் சம்பத்தும் அதே நகரம்தான்.
தோழர் அதியமான் பெரும் தொண்டர் படையைக் கொண்ட கட்சியின் தலைவர். தமிழகம் முழுவதும் ஆதித்தமிழர் பேரவை பரந்து விருந்திருக்கிறது.
ஆற்றல் மிகு தொண்டர்களால் நிரம்பிய கட்சி. சுருங்கச் சொன்னால் அர்ஜுன் சம்பத் கட்சியை விடப் பல பல மடங்கு மக்கள் செல்வாக்குப் பெற்ற கட்சி. தமிழகத்தின் மூன்றாவது பெரிய தலித் கட்சி.
தோழர் அதியமான், அர்ஜுன் சம்பத்தைவிட மிகச் சிறந்த பேச்சாளர். அதுமட்டுமல்ல, தமிழகத்தில் சிறப்பாகப் பேசக்கூடிய தலைவர்களில் தோழர் அதியமானும் முக்கியமானவர்.
கொள்கைக்காகத் தன் உயிரையே மாய்த்துக் கொண்ட, அன்புத் தோழன் நீலவேந்தன் ஆதித்தமிழர் பேரவை தான். மிகச் சிறந்த பேச்சாளர், சிந்தனையாளர். அவரையும் ஊடகங்கள் பயன்படுத்தியதே இல்லை.
பொதுவாகவே அருந்ததியர் மக்களுக்காக இயக்கம் நடத்துகிற தலைவர்களை எழுத்தளார்களை, கவிஞர்களை ஊடகங்கள் எப்போதுமே நிராகரித்தே வருகின்றன. தமிழின் மிகச்சிறந்த கவிஞர் தோழர் மதிவண்ணன். அவருக்கும் இதே நிலைதான்.
அர்ஜுன் சம்பத்தும் மிக, மிகப் பின்தங்கிய கூடுதலாக ஒடுக்கமுறைக்கு உள்ளாகிற உழைக்கும் மக்கள் சமூகத்தைச் சேர்ந்தவர் தான். ஆனாலும் ஊடகங்கள் அர்ஜுன் சம்பத் கட்சிக்கும் அவருக்கும் தருகிற முக்கியத்துவத்தில் ஒரு சிறுத்துளியைக்கூடத் தோழர் அதியமானுக்குத் தருவதில்லை.
காரணம் மிக எளிமையானது. அர்ஜுன் சம்பத் மிகத் தீவிரமான பெரியார் எதிர்ப்பாளர். தோழர் அதியமான் அவர்கள் மிகத் தீவிரமான பெரியார் பற்றாளர்.
6 June at 08:50

