புறக்கணிப்பும் கவனிப்பும்; ஊடகங்களின் உள்நோக்கம் ..?

10491227_410419989119408_5564549478928004830_n

arjung-sampath1
அர்ஜுன் சம்பத்திற்கும் அவரின் கட்சியைச் சேர்ந்தவர்களுக்கும் ‘காட்சி ஊடகங்கள்’ அதிக முக்கியத்துவம் தருவது உள்நோக்கம் கொண்டது. அந்த உள் நோக்கம்‘ பெரியார் எதிர்ப்பு’.

அர்ஜுன் சம்பத்தையும் ‘அறிவாளி’யாகப் பார்க்கிற மனோபாவமே பெரியார் மீதான காழ்ப்புணர்ச்சிதான்.

அந்தக் காழ்ப்புணர்ச்சியால் அர்ஜுன் சம்பத்திற்குக் கிடைத்த பிரபலத் தன்மையைப் பெரியார் சிந்தனை கொண்ட ஊடகவியலாளர்களும் பயன்படுத்திக் கொள்வது பரிதாபத்திற்குரியது.
5 June at 10:27 · Edited ·

கோவை மாநகரத்தில் வசிக்கிறார் ஆதித்தமிழர் பேரவையின் தலைவர் அன்பிற்குரிய அதியமான் அவர்கள். அர்ஜுன் சம்பத்தும் அதே நகரம்தான்.

தோழர் அதியமான் பெரும் தொண்டர் படையைக் கொண்ட கட்சியின் தலைவர். தமிழகம் முழுவதும் ஆதித்தமிழர் பேரவை பரந்து விருந்திருக்கிறது.

ஆற்றல் மிகு தொண்டர்களால் நிரம்பிய கட்சி. சுருங்கச் சொன்னால் அர்ஜுன் சம்பத் கட்சியை விடப் பல பல மடங்கு மக்கள் செல்வாக்குப் பெற்ற கட்சி. தமிழகத்தின் மூன்றாவது பெரிய தலித் கட்சி.

தோழர் அதியமான், அர்ஜுன் சம்பத்தைவிட மிகச் சிறந்த பேச்சாளர். அதுமட்டுமல்ல, தமிழகத்தில் சிறப்பாகப் பேசக்கூடிய தலைவர்களில் தோழர் அதியமானும் முக்கியமானவர்.

கொள்கைக்காகத் தன் உயிரையே மாய்த்துக் கொண்ட, அன்புத் தோழன் நீலவேந்தன் ஆதித்தமிழர் பேரவை தான். மிகச் சிறந்த பேச்சாளர், சிந்தனையாளர். அவரையும் ஊடகங்கள் பயன்படுத்தியதே இல்லை.

பொதுவாகவே அருந்ததியர் மக்களுக்காக இயக்கம் நடத்துகிற தலைவர்களை எழுத்தளார்களை, கவிஞர்களை ஊடகங்கள் எப்போதுமே நிராகரித்தே வருகின்றன. தமிழின் மிகச்சிறந்த கவிஞர் தோழர் மதிவண்ணன். அவருக்கும் இதே நிலைதான்.

அர்ஜுன் சம்பத்தும் மிக, மிகப் பின்தங்கிய கூடுதலாக ஒடுக்கமுறைக்கு உள்ளாகிற உழைக்கும் மக்கள் சமூகத்தைச் சேர்ந்தவர் தான். ஆனாலும் ஊடகங்கள் அர்ஜுன் சம்பத் கட்சிக்கும் அவருக்கும் தருகிற முக்கியத்துவத்தில் ஒரு சிறுத்துளியைக்கூடத் தோழர் அதியமானுக்குத் தருவதில்லை.

காரணம் மிக எளிமையானது. அர்ஜுன் சம்பத் மிகத் தீவிரமான பெரியார் எதிர்ப்பாளர். தோழர் அதியமான் அவர்கள் மிகத் தீவிரமான பெரியார் பற்றாளர்.
6 June at 08:50

அபசகுனம்; தினமணி தினத்தந்தி ஜுனியர் விகடன்

‘என்னமோ போடா மதிமாறா?’

4 thoughts on “புறக்கணிப்பும் கவனிப்பும்; ஊடகங்களின் உள்நோக்கம் ..?

  1. அர்ஜுன் சம்பத் மிகத் தீவிரமான பெரியார் எதிர்ப்பாளர். தோழர் அதியமான் அவர்கள் மிகத் தீவிரமான பெரியார் பற்றாளர்.

  2. தலைப்பு: ஊரான் வீட்டு நெய் என் பொண்டாட்டி கை!!!
    உபதலைப்பு: தந்தை பெரியாருக்குப் பிறகு உண்மையிலேயே திராவிடர் கழகம் (பொதுவான திராவிடர் இயக்கங்கள் அல்ல) கிழித்தது என்ன?

    (விடுதலை நாளிதழில் செவ்வாய், 07 ஜூலை 2015 அன்று “ஆதித்தமிழர் பேரவை நடத்திய சமூகநீதி பாதுகாப்பு மாநாடு” என்ற தலைப்பில் வெளிவந்த தலையங்கத்திற்கு பதில் கடித(ல்)ம்)

    உண்மையிலேயே மனசாட்சி என்று ஒன்று இருந்தால், இப்படிப்பட்ட தலையங்கம் ஒன்றை விடுதலை இதழ் வெளியிட்டிருக்காது. என்ன ஒரு அநியாயம்? சமீப காலங்களில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் அல்லது அங்கேயே பிறந்து வளரும் இந்திய வம்சாவளியினர் ஏதேனும் பெரிதாக சாதித்துவிட்டால், எப்படி இந்திய செய்தித்தாள்கள் அனைத்தும் “அவர் இந்தியர்!! அவர் இந்தியர்!! அவர் எங்க ஆள்!! அவர் எங்க ஆள்!!” என்று கொஞ்சம்கூட வெட்கமில்லாமல் உரிமை கொண்டாடுகின்றனவோ, அதைவிட மட்டமான கேவலமான உரிமை கொண்டாடலை செய்திருக்கிறது திராவிடர் கழகம்.

    தந்தை பெரியாருக்குப்பிறகு, அவர் சொத்தை பாதுகாத்துக்கொண்டு, எந்தவிதமான சமுதாய பிரச்சனைகளையும் கையில் எடுக்காமல், கிட்டத்தட்ட செத்துப்போன இயக்கமாக கடந்த இருபது முப்பது ஆண்டுகளாக இருந்ததுதான் திராவிடர் கழகம். அதனால்தான் திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்து பெரியார் திராவிடர் கழகம், திராவிடர் விடுதலை கழகம், இன்னும் பல பல திராவிடர் இயக்கங்கம் பிரிந்து தனித்தனியே செயல்படுகின்றன. எதோ கடந்த இரண்டு மூன்று வருடங்களாக திடீரென முழித்துக்கொண்டு, கடைசி காலத்திலாவது ஏதாவது செய்துவிடலாம் என்று கலைஞருடன் இணைந்து புகைப்படங்களுக்கு முகத்தை காட்டிக்கொண்டு மட்டுமே இருப்பதுதான் திராவிடர் கழகம். மிகத் தாமதமாக கண்விழித்துக்கொண்டு இப்போதுதான் வேக வேகமாக ஊர் ஊராக வட்டார மாநாடுகள் நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.

    ஆனால், ஆதித்தமிழர் பேரவையும், அதன் நிறுவனர் அதியமான் அப்படியா? கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக சிறுதும் ஓவ்வொளிச்சல் இல்லாமல், பட்டி தொட்டிகளிலெல்லாம் தந்தை பெரியாரையும், அம்பேத்கரையும் கொண்டு சேர்த்த மகத்தான பெருமைக்குரியவர் ஐயா அதியமான் அவர்கள். திராவிடர் கழகமோ, அல்லது திராவிட கொள்கைகளைக் கொண்ட பிற திராவிட இயக்கங்களோ கூட இந்த அளவுக்கு பெரியாரை மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை. அந்த அளவிற்கு உழைத்திருக்கும் ஒரு மாபெரும் ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவரை உரிமை கொண்டாட, திராவிட கழகத்திருக்கு என்ன உரிமை இருக்கிறது? என்ன யோகிதை இருக்கிறது? தந்தை பெரியார் ஆற்றிய பணிகளை பற்றி மட்டுமே பெருமை பேசிக்கொண்டு, அவரை இழிவாக பேசுபவர்களுக்கு பதிலடி கொடுப்பதை மட்டுமே வேலையாக செய்துகொண்டு வேறு எந்த களப்பணியும் செய்யாமல் உறங்கிக்கொண்டிருக்கும் திராவிடர் கழகம் என்ன கிழித்திருக்கிறது?

    தலையங்கத்தில், வரிக்கு வரி “அதியமான் கூறினார், அவர் கூறினார், அவரே கூறியுள்ளார்” என்று சிறிதும் வெட்கமில்லாமல் எழுத எப்படி மனது வந்தது என்று தெரியவில்லை. அதுமட்டுமல்லாமல், இது பேரவையையும், ஐயா அதியமான் அவர்களின் வெற்றியை பகிர்ந்துகொள்ள துடிக்கும் அப்பட்டமான மோசடி மோசடி மோசடி. ‘திராவிட இயக்க கொள்கைகளை உள்வாங்கினார், திராவிட கழக தலைவர் திருமணம் செய்து வைத்தார்” அட அட அட, என்ன ஒரு உரிமை கொண்டாட்டம்? மட்டமான விளம்பரம்? அதுமட்டுமில்லாமல் “தகுதி படைத்த தலைவர்” என்று ஐயா அதியமான் அவர்களுக்கு சான்றிதழ் கொடுக்க திராவிடர் கழகத்திற்கு என்ன யோகிதை இருக்கின்றது? நீங்கள் தரும் சான்றிதழ் அவருக்கு தேவையில்லை. அவர் எப்போதோ ஒடுக்கப்பட்ட மக்களின் தனிப்பெரும் தலைவராகிவிட்டார். அதுமட்டுமல்லாமல் அருந்ததியர் பிரச்சனைகள் மட்டுமன்றி, ஈழத்தமிழர், கூடங்குளம், முல்லைபெரியார், கள் இறக்குதல், மது ஒழிப்பு, பெண் விடுதலை, என்று தமிழகத்தின் பலப்பல பொது பிரச்சனைகளை முன்னெடுத்து, பெரிய அரசியல் கட்சிகளுக்கு சமமாக போராடியுள்ளார். அப்படிப்பட்ட மக்கள் தலைவருக்கு சான்றிதழ் கொடுக்க திராவிடர் கழகத்திற்கு என்ன நியாயம் இருக்கின்றது? நீங்கள் சான்றிதழ் கொடுத்துத்தான் அவர் பெரிய தலைவர் என்று அறியப்பட வேண்டிய அவசியம் அவருக்கு இல்லை. அவருடன் இணைந்து பணியாற்றினால், பேரவையின் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டால் உங்களுக்கு பெருமை, விளம்பரம் என்று வேண்டுமானால் சொல்லிக்கொள்ளுங்கள், எழுதிக்கொள்ளுங்கள். சென்னையில் நடத்தப்பட்ட மாநாட்டிற்கு ஒரு உண்மையான, சரியான பாராட்டைக்கூட வழங்க மனமில்லாத திராவிடர் கழகத்தை, விடுதலை நாளிதழை வன்மையாக கண்டிக்கின்றேன். (விடுதலையில் வெளியான அந்த தலையங்கத்திற்கு ஐயா அதியமான் மற்றும் அவர் தொண்டர்கள் வேண்டுமானால் உங்களுக்கு நன்றி கூறலாம், ஆனால் “ஊரான் வீட்டு நெய் என் பொண்டாட்டி கை” என்று வகையில் இருந்த அந்த தலையங்கத்தை என்னால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது)

    எண்ணற்ற போராட்டங்களையும், பேரணிகளையும், மாநாடுகளையும் நடத்தி, அருந்ததியருக்கான உள்ளிட ஒதுக்கீட்டினை பெற்றுத்தந்தது ஆதித்தமிழர் பேரவையும், அதன் நிறுவனர் ஐயா அதியமான் அவர்களும். ஆனால், உள்ளிட ஒதுக்கீடு அறிவிக்கப்பட்ட போது, மார்சிஸ்ட் கட்சிகள் மிக வேகமாக, “நாங்கள்தான் இதை சாதித்தோம்” என்று துளியும் வெட்கமில்லாமல் உரிமை கொண்டாடின. இதற்கும், விடுதலை தலையங்கத்திற்கும் என்ன வேறுபாடு?
    ஐயா அதியமான் வேண்டுமானால், நீங்கள் நடத்தும் வட்டார கூடங்களில் கலந்துகொண்டு, நன்றிக்கடனாக “நான் பெரியார் கொள்கைகளை உள்வாங்கியவன், திருமணம் நடந்தது” என்றெல்லாம் பேசி இருக்கலாம். எனவே அவருடைய பெருந்தன்மையை மட்டமான விளம்பரத்திற்கும், உரிமை கொண்டாட்டத்திற்கும் பயன்படுத்த வேண்டாம் என்று எச்சரிக்கிறேன்.

  3. ஆதித்தமிழர் பேரவை பற்றிய விடுதலை நாளிதழின் தலையங்கத்திற்கு ஒரு விமர்சனம் எழுதி அனுப்பிய பின்பும் எனக்கு இன்னும் ஆதங்கம் குறைந்தபாடில்லை. அதனால் ஒன்று இரண்டு கேள்விகளை மட்டும் கேட்டு இத்தோடு முடித்துக்கொள்ளலாம் என்றே இந்த மின்னஞ்சல் மீண்டும்.
    அந்தத் தலையங்கத்தில் அதியமான் அவர்களை அவ்வளவு உரிமை கொண்டாடியுள்ளீர்களே, ஒரே ஒரு முறையாவது உங்களின் youtube சேனலில் – (periyar tv) அதியமான் அவர்களின் உரையை பதிவு செய்திருகிறீர்களா? அந்த சேனலில் திராவிடர் கழக தோழர்கள் மற்றும் பிற திராவிட இயக்கங்களை சேர்ந்த தோழர்களைத் தவிர திருமா, பர்வீன் சுல்தானா போன்ற எண்ணற்ற பிற தோழர்களின் பேச்சையெல்லாம் பதிவு செய்யப்பட்டுள்ளது. திராவிடர் கழகம் நடத்தும் வட்டார மாநாடுகளிலேயே “நான் பெரியார் தொண்டன், திராவிடர் கருத்தாளன், ஆசிரியர் வீரமணி தான் எனக்கு திருமணம் செய்துவைத்தார்” என்றெல்லாம் மிகப்பெருந்தன்மையாக அனைத்தையும் குறிப்பிட்டுபேசியுள்ளாரே அதியமான்?, நீங்கள் தலையங்கத்தில் குறிப்பிட்டது போல “திராவிட இயக்கத்திற்கு சான்று” என்பதை அவர் வாயாலேயே பறைசாற்றினாரே, இப்படியெல்லாம் பேசிய ஐயா அதியமானின் உரைகளை பதிவு செய்து வெளியிட உங்களுக்கு துப்பில்லை, அப்படிதானே? இதற்கு இல்லாத உரிமை, இப்போது மட்டும் எங்கே இருந்து வந்தது. ஒரே ஒருமுறை கூட, ஒரு இரண்டு நிமிட காணொளியை கூட பதிவு செய்து அவருக்கான அங்கீகாரத்தை கொடுக்க முன்வரவில்லை திராவிடர் கழகம். இப்போதும் மட்டும் எதற்கு இந்த உரிமை கொண்டாட்டம்.?
    இத்துனை ஆண்டுகளாக இப்படியொரு மக்கள் தலைவர் உருவாகி வந்துள்ளார், பெரியாரையும் அம்பேத்கரையும் பட்டி தொட்டி எங்கும் பரப்பியுள்ளார் என்பது திராவிடர் கழகத்திற்கு தெரியாதா? அப்படி தெரிந்திருந்தும் ஒரு முறையாவது, ஒரே ஒருமுறையாவது, அவரை உங்கள் மேடையில் கௌரவப்படுத்தி, அவருக்கு நீங்கள் வழங்கும் பெரியார் விருதினை வழங்கியதுண்டா? தலையங்கத்தில் ஏதோ இப்போதுதான் அவருக்கு எல்லா தகுதியும் வந்துவிட்டது போலவும், அதற்கு திராவிடர் கழகம் தான் காரணம் போலவும் துளியும் வெட்கமில்லாமல் உரிமை கொண்டாடிக்கொள்வது எவ்வளவு பெரிய மோசடி? ஏன் அவருக்கு பெரியார் விருதை பெரும் தகுதி இல்லையா? உண்மையிலேயே அந்த விருதினை பிறருக்கு வழங்க உங்களுக்குத்தான் தகுதி இல்லை. அதியமான் அவர்களுக்கு பாராட்டு என்ற பெயரில் எவ்வளவு பெரிய அரசியல், வார்த்தை ஜாலம், மோசடி.
    திராவிட அமைப்புகள் மற்றும் இயக்கங்களை சார்ந்த தலைவர்கள், தோழர்கள் ஊடகங்களில் ஒரு நாளும் அருந்ததியர் பற்றி பேசியது கிடையாது. தலித் என்று பேசும்போது கூட எப்போதும், “திருமா, கிருஷ்ணசாமி, திருமா, கிருஷ்ணசாமி, பள்ளர், பறையர், பள்ளர், பறையர்” என்பதோடு நிறுத்திக்கொள்வார்களே தவிர ஒரு நாளும் “அருந்ததியர், அதியமான் ” என்ற அவர்கள் வாயிலிருந்து வந்ததே கிடையாது. அப்படியே தப்பித்தவறி அருந்ததியர் பற்றி பேசினாலும், ஒருநாளும் “ஆதித்தமிழர் பேரவை, அதியமான்” என்று கூறிவிடக்கூடாது என்பதில் மிகக் கவனமாக இருப்பார்கள். இத்தனை ஆண்டுகளும் “ஒரே கொள்கை, ஒரே செயல்பாடு ” என்ற பெயரில் உறவாடி கழுத்தறுத்த திராவிட இயக்கங்களுக்கு, சுயநலத்துக்காக இருந்தாலும் பேரவைக்கும், அதியமான் அவர்களுக்கும் மிகச்சிறப்பான அங்கீகாரத்தை வழங்கிய அரசியல் கட்சியான திமுக எவ்வளவோ மேல்.

Leave a Reply

%d