கர்நாடக இசையைப் பின்னுக்குத் தள்ளி; கிளாசிக்கல் தரத்திற்கு உயர்ந்த திரை இசையின் உன்னதம், இசைஞானி இளையராஜாவோடு முடிந்துவிட்டது.
20 April.
இசை வார்த்தைகளைவிட நுட்பமானது. பாடலில்.. மெட்டு தான் வாரத்தைகளை வாழ வைக்கிறது. இனிய இசையை மொழியால் நினைவுப்படுத்திக் கொள்ளதான் வாரத்தைகள்.
ராஜாவின் இசை, ‘இசைகளை’விட உன்னதமானது. அர்த்தமற்று, செத்துக்கிடக்கிற வாலியின் வெத்து வார்த்தைகள், ராஜாவின் இசையின் மூலம் உயிர் பெற்று நம் உணர்வோடு கலக்கிறது…
நீங்களே கேளுங்கள்..
வெறும் வார்த்தைகளும் பிறகு ராஜாவின் உணர்வுகளுமாய் இந்தப் பாடலை..
கேட்க: https://soundcloud.com/ajaykarthik/kanmani-anbodu-vmusiq-com
2 June.
உன்னதம்: இளையராஜா-மகேந்திரன்-ஸ்ரீதேவி-ரஜினி
ஒரு குண்டுமணி குலுங்குதடி: எளிய தமிழனின் குரல் உன்னத பாவங்களோடு

