Site icon வே. மதிமாறன்

அய்யா வன்னியர்களுக்கான தலைவரும் அல்ல

farmin2_2280867g
‘விமானத்தில் செல்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகி உள்ளதால் அவசரமாக ஸ்ரீபெரும்புதூர் விமான நிலையத்தை அமைக்க வேண்டும். 17 ஆண்டுகளாகக் காலம் கடத்தி விட்டது மத்தியரசு’ என்று கோபப்பட்டிருக்கிறார் டாக்டர் ராமதாஸ்.

5,000 ஏக்கர் பரப்பளவில் ஸ்ரீபெரும்புதூரில் விமான நிலையம் அமைந்தால், 28 கிராம மக்களின் மீது மண்கொட்டி மூடி அந்தக் கல்லரைகளின் மேல் தான் விமான ஓடுதளம் அமைக்க வேண்டும்.
விமானத்தில் செல்பவர்களுக்காகத் தமிழ்க்கிராமங்களை அழித்துவிடுங்கள் என்கிறார் தமிழ்க்குடித்தாங்கி.

இவர்தான் தமிழர் நிலம், தமிழ் நிலம், தமிழ் விவசாயம், இயற்கை வேளாண்மை குறித்தெல்லாம் அதிக அக்கறையோடு பேசுபவராக அடையாப்படுத்திக் கொள்கிறார்.

‘அழித்து விடச் சொல்லவில்லை. அவர்களுக்கு மாற்று இடம் தருவார்கள். அங்குக் குடிபெயர்ந்து கொள்ளலாம்.’ என்ற பொழிப்புரைச் சொல்லலாம் அய்யாவின் ஆதரவாளர்கள்.

ஏன் அந்த மாற்று இடத்தில் விமான நிலையம் அமைக்கக்கூடாதா?

பல நூற்றாண்டுகளாகப் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்த மக்கள் சொந்த இடத்தை விட்டு அகதிகளாக வேறு இடத்திற்கு அப்புறப் படுத்த சொல்கிற டாக்டர் ராமதாஸ் தான், அகதிகளாக விரட்டப்பட்ட ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகப் பேசுபவராம்..?

தமிழர் என்பதைகூட விட்டு விடுங்கள். தன்னை வன்னியர் மக்களின் தலைவராக அறிவித்துக் கொள்கிறாரே.. அதற்காவது உண்மையாக இருக்க வேண்டாமா?
ஸ்ரீபெரும்புதூரில் விமான நிலையத்திற்காக டாக்டர் ராமதாஸ் பரிந்துரைக்கிற 28 கிராமங்களில் மிக மிக அதிகமாக வாழ்வது வன்னிய ஜாதி மக்களே.

அய்யா ராமதாஸ் தமிழர் தலைவராக அல்ல, வன்னிய ஜாதி மக்களின் தலைவராக இருப்பதற்குக் கூடத் தகுதியை இழந்திருக்கிறார்.

அவரின் ஸ்ரீபெரும்புதூர் விமான நிலைய கோரிக்கை,

“ஏர்போர்ட்டு வந்துடுச்சின்னு வைய்யி… அப்புறம் நான் வாங்கி வைச்சிருக்கிற எடம் ஏர்போர்ட்டு பக்கத்திலேயே வந்துடும். நிலத்தோடு விலை தறுமாறா உயர்ந்திடும்“ என்கிற ஒரு ரியல் எஸ்டேட் அதிபரின் எதிர்பார்ப்பை விட ஆபத்தானதாக இருக்கிறது.

31 August

Exit mobile version