Best popular film விருது Bajrangi Bhaijaan என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. மிகச் சிறந்த பொழுது போக்குப் படம்.
ஆனால், ஒவ்வொரு காட்சியும் அன்பினால் நெய்யப்பட்டது. குபீர் சிரிப்பு, நெகிழ வைத்து கண்கலங்க வைக்கிற காட்சிகள் நிறைய.
நாயகனின் பார்ப்பனக் குடும்பச் சூழல் கதைக்கு மிக அவசியம். அவனை இந்து அமைப்பைச் சேர்ந்தவனாகக் காட்டியதை தவிர்த்திருக்கலாம்.
கதை பாகிஸ்தான் – இந்தியா பிரச்சினையோடு தொடர்புடையது என்பதாலும், நாயகனாக நடித்த சல்மான் கான் முஸ்லீம் என்பதினாலும் இந்துத்துவ அடையாளம் அழுத்திச் சொல்லப்பட்டிருக்கிறது.
கர்ப்பினி பெண்ணின் வயிற்றைக் கிழித்துக் கொலை செய்கிற இந்து அமைப்பிலிருந்து வந்தவன், ஒரு குழந்தைக்காகப் பல தியாகங்கள் செய்ய முடியும்? மற்றபடி, நான் கொண்டாடிப் பார்த்தப் படம்.
*
Piku அமிதாப்பை சிறந்த நடிகராக ஆக்கியிருக்கிறது. சரியான தேர்வு. Piku விற்கும் சிறந்த படத்திற்கான விருது அல்லது திரைக்கதைக்கான விருது தந்திருக்கலாம். இப்படி ஒரு வாழ்க்கையை இதுவரை எனக்குத் தெரிந்து யாரும் சொன்னதில்லை.
தந்தை – மகளுக்குமான உறவை, பெண்களின் அன்பின் இன்னொரு பரிமாணத்தை நுட்பமாக, நவீனமாகச் சொன்னதற்குச் சிறப்பு விருது கிடைத்திருக்க வேண்டும்.
இயந்திரங்களால் (CG) உருவாக்கப்பட்ட பாகுபலி யோடு ஒப்பிடும் போது, மனிதர்களின் உன்னத உணர்வுகளால் உருவான Piku 100 முறை சிறந்த படம்.
மற்றபடி இளையராஜாவிற்குத் தந்திருக்கிற விருது, அவருக்கு ஒரு போதும் பெருமை சேர்க்காது. திருவள்ளுவருக்குக் கலைமாமணி விருதா கவுரம் தரப்போகிறது?
இந்த விருதை அவர் நேரில் சென்று வாங்குவார் என்று எனக்கு நம்பிக்கையில்லை.
