Site icon வே. மதிமாறன்

‘பெரிய புடுங்கியா நீ’

‘அவருக்கு என்ன கொள்கை, கோட்பாடு, தத்துவம் இருக்கிறது? அவருடன் எப்படி நீங்கள் கூட்டணி வைத்தீர்கள்?’

‘இதெல்லாம் எங்களுக்கு இருக்கிறது என்று எவன் சொன்னான்? திட்டமிட்டு கூட்டணியை உடைக்கும் நோக்கத்தோடு, எங்களுக்கு எதிரா எவனோ புரளியை கிளம்பி விட்டிருக்கான்.’
*

‘யாரை வேணுன்னாலும் விமர்சனம் பண்ணு. பெரியாரை கூடத் திட்டிக்க. அம்பேத்கர் தேவையில்லை. காரல் மார்க்ஸ் அவனெல்லாம் ஒரு ஆளு ன்னு கூட எழுது.

அதெல்லாம் ஒரு பிரச்சினையே இல்ல. ஆனால் என் ஜாதிக்காரரை மட்டும் விமர்சிக்கக் கூடாது’ இது அப்போ.
அதன் பிறகு அதுல ஒரு மாற்றம், ‘விமர்சிக்கக் கூடாது ங்கறது மட்டுமல்ல, என் ஜாதிக்காரரை நீ ஆதரிக்கணும்.’

இப்ப இன்னும் டெவலப்பாகி ‘என் ஜாதிக்காரர் யாரை ஆதரிக்கிறாரோ அவரையும் விமர்சிக்கவும் கூடாது. நீ ஆதரிக்கவும் செய்யணும். இல்லன்னா உன்னை அசிங்க அசிங்கமா திட்டுவேன்.பெரிய புடுங்கியா நீ’

இப்படி ஒரு குரூப் சுத்திக்கிட்டுதான் இருக்கு. யாருன்னு கேக்குறீங்களா? தோ.. இப்ப வருவாங்க பாருங்க.
28 March at 10:23

Exit mobile version