LANGUAGE EXPERIMENT

* மனதை
ஒரு நிலைப்படுத்தி
தியானம் செய்.

* அதெப்படி மனதை
ஒரு நிலைப்படுத்த முடியும்.
உறவுகள்
அரசியல்
பொருளாதாரம்
இப்படி
பல்வேறு பிரச்சினைகளால்
சிக்கித் தவிப்பவனாயிற்றே மனிதன்
மனிதர்களோடே
பழகிக்கொண்டிருக்கிற
மனிதனால்
எப்படி மனதை
ஒரு நிலைப்படுத்தி தியானம் செய்ய முடியும்?

* நிஜம்தான்
மனிதனால் மனதை
ஒருநிலைப்படுத்த முடியாதுதான்,
சும்மா
பொய் சொல்லி வைக்க வேண்டியதுதான்.
மனதை ஒருநிலைப்படுத்தி
தியானம் செய்தேன்
நான் எங்கிருக்கிறேன்
என்றே எனக்கு மறந்துபோனது
புதிய யோக நிலை தெரிந்தது
என்று சொல்.
உன்னை அறிவாளியாக காட்டிக் கொள்ள வேண்டாமா?
இதுவரை உள்ள
எல்லா தத்துவங்களும்
பொய் என்று சொல்.
‘நீ என்னவாக பார்க்கிறாயோ
அதுவே பொருள்’
‘அழகியல் என்பது உன் மனதில்தான் இருக்கிறது’
என்று புதிய தத்துவம் மாதிரி
ஆதி சங்கரரின் அத்துவைதும் பேசு
கிருஷ்ணமூர்த்தியை
படித்ததில்லையா நீ
அப்புறம் என்ன
உளறவும்
பொய் சொல்லவும்
சொல்லியாத் தரவேண்டும்

* பசி
பஞ்சம்
பட்டினி
நோய்
உத்ரவாதம் இல்லாத வாழ்க்கை
மோசமான அரசியல்
இந்தச் சூழலில்
ஒருவன்
தியானம் செய்வதாக சொல்வேதே
அருவவருப்பானதாயிற்றே

* ஓ…
உன் பேச்சில்
ஒரே பிரச்சார நெடியடிக்கிறது
நீ மார்க்சியம் பேசுகிறாய்.
பசி, பஞ்சம், பட்டினி
மட்டுமா வாழ்க்கை?
யோக நிலை இருக்கிறது
அது மார்க்சியத்தில் அடங்காது.
ஜே. கிருஷ்ணமூர்த்தியை
எடுத்துக்கொள்
இல்லை
அவர் திட்டுகிற
ரஜினிஷை
எடுத்துக்கொள்
பெர்குலி
ரமண மகரிஷி
இவர்களை எல்லாம்
எடுத்துக்கொள்
உனக்கு ஆணுக்கு ஆண்
உறவு வைத்துக்
கொள்கிற ஹோமோ செக்ஸ் தெரியுமா?
பெண்ணுக்கு பெண்
உறவு கொள்கிற
லெஸபியன் தெரியுமா?
எக்ஸ்டென்சலிஸம்
பேன்ஸி பனியன்
இதெல்லாம் உனக்கு புரியுமா?
பிரென்ச்சு நவீன இலக்கியம்
படித்ததில்லை நீ?
எதிர் கவிதைத் தெரியுமா?
அணு உலை எதிர்ப்பை
நாங்கள் எவ்வளவு
‘ஸ்டைலாக’
நாகரீகமாக செய்கிறொம்
அணு உலையை
எதிர்ப்பதற்கு உன்னிடம்
ஜீன்ஸ் பேன்ட்
இருக்கிறதா?

* சரி
போலிஸ்காரன்
சந்தேக கேசுல
பிடிச்சிக்கிட்டுப்போய்
உள்ள வைச்சிறான்…
வெளியே வருவதற்கு
கிருஷ்ணமூர்த்தி
ஓஷோ
பிராய்டு
இவர்கள் எல்லாம்
என்ன சொல்கிறார்கள்?

* அப்போ
மயிரு புடுங்க
வேண்டியதுதான்.

***

1991 ல் நான் நடத்திய ‘அக்கினிக்குஞ்சொன்று தாகம்’ என்ற மாத இதழுக்காக எழுதியது. சிலவரிகளை நீக்கி, ஒரு வரியைச் சேர்த்து வெளியிட்டு இருக்கிறேன்.

தொடர்புடைய இணைப்பு:

வே.மதிமாறன் கவிதைகள்

13 thoughts on “LANGUAGE EXPERIMENT

 1. கவிதை நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் தலைப்பு ஏன்ஆங்கிலத்தில்?

 2. ஒண்ணுமே புரியல னா..
  விளக்கவுரை எழுதினா உதவியா இருக்கும்

 3. பேசிப்பேசி, எழுதியெழுதி மொழிதான் தீர்ந்துபோகிறது. வாழ்க்கையும் வலியும் இன்னும் மீதமிருக்கிறது. என் மனதில் கூட கொஞ்ச நாட்களாய் Sign Language கற்றுக்கொண்டால் என்ன என்று ஏனோ அசட்டுத்தனமாய் ஓர் சிந்தனை ஓடுகிறது!!

 4. //ஆதி சங்கரரின் அத்துவைதும் பேசு
  கிருஷ்ணமூர்த்தியை
  படித்ததில்லையா நீ
  அப்புறம் என்ன
  உளறவும்
  பொய் சொல்லவும்
  சொல்லியாத் தரவேண்டும்//

  ம்ம்ம்.. அருமை..

  தொடருங்கள்…

 5. Vanakkam Thozhar,

  Miga arumai,Neengal thodarnthu veeriyamana kavithai ezhutha vendum.

  Vazhtthukkal.

  anbudan Pa.Selvaraj,Neelangarai,Chennai-600 041.

 6. Vanakkam Thozhar,

  Ungal Kavithai miga arumai,thodarnthu veeriyamaga ezhuthungal.

  anbudan Pa.Selvaraj Neelangarai,Chennai-600 041.

 7. ####* சரி
  போலிஸ்காரன்
  சந்தேக கேசுல
  பிடிச்சிக்கிட்டுப்போய்
  உள்ள வைச்சிறான்…
  வெளியே வருவதற்கு
  கிருஷ்ணமூர்த்தி
  ஓஷோ
  பிராய்டு
  இவர்கள் எல்லாம்
  என்ன சொல்கிறார்கள்?

  * அப்போ
  மயிரு புடுங்க
  வேண்டியதுதான்.#####
  arumaiyana varigal mathimaran!

 8. நான் பெரியாரிஸ்ட் அல்ல.. ஆன்மீக வாதியும் அல்ல… ஒரு சராசரி மனிதனான என்னை உங்கள் கவிதை கவர்கிறது… அதில் உள்ள உண்மை நெஞ்சை தொடுகிறது ..

  பெரியாரையும்,.குஷ்பூ வையும் சிலர் ஒப்பிடுவதை நானே கண்டித்தேன்.
  .http://pichaikaaran.blogspot.com/2010/03/blog-post_31.htmlநீங்கள் ஏன் ஒன்றும் சொல்ல வில்லை ?

Leave a Reply

%d bloggers like this: