பெண்களுக்கான இடஒதுக்கீடு: தெய்வக் குத்தம்

ஏற்கனவே பெண்களுக்கான இடஒதுக்கீடு குறித்து தீவிரமாக விவாதிக்கப்பட்டபோது  வெளியிட்டு இருக்கிறேன். மீண்டும் அதன் காரணத்திற்காகவே வெளியிடுகிறேன்.

***

கனவில் அவள் வந்தாள்
கனவிலும்
தூங்கிக் கொண்டிருந்த
என்னைத் தட்டியெழுப்பி
எனக்கொரு
பிரச்சினை என்றாள்.
.
நான்கு கைகளோடு நின்ற
அவளைக் கண்டு மிரண்டு,
யார் நீங்கள்? என்றேன்.
என் பெயர் காமாட்சி
ஊர் காஞ்சிபுரம் என்றாள்.
.
அய்யோ கடவுளா!
கடவுளுக்கே பிரச்சினையா?
ஆச்சரியத்தோடு
கணவனாலா என்றேன்.

கணவனால்
பிரச்சினை இல்லை
பிரச்சினைகளைப்
புரிந்து கொள்ளாமல்
கல்போல் நிற்பவன்
கணவனா என்றாள்.
.

புரியவில்லையே என்றேன்.

தினம் தினம்
நான் அவமானத்தால்
செத்துப் பிழைக்கிறேன்
என் பெண்மை
கேவலப்படுத்தப்படுகிறது
என்று உடைந்தாள்.

நான் பதட்டமாகிப் போனேன்
அய்யோ உங்களையா?
யார் அவன்? என்றேன்.

கோயில் குருக்கள் என்றாள்.

குருக்களா!
என்ன செய்தார் அவர்?
அதிர்ச்சியாகக் கேட்டேன்.
.
தினம் தினம்
கருவறையின் கதவுகளை
உட்பக்கமாக சாத்திக்கொண்டு
என்னை நிர்வாணப்படுத்தி அபிஷேகம்…
என்று சொல்லிக்
கொண்டிருக்கும்போதே
அவமானத்தால் கதறி விட்டாள்.
.
பின் நிதானித்து
குருக்கள் வாயில்
மந்திரம் இருக்கலாம்
மரியாதை இருக்கலாம்
ஆனால்
இதை
பெண்ணின் மனநிலையில்
புரிந்து கொள்
அவமானம் புரியும் என்றாள்.
.
சரிதான், ஆனால்
இதற்கு என்ன செய்ய முடியும்
என்றேன்-மிகுந்த வருத்தத்தோடு.

ச்சீ… இப்படிக் கேட்க
உனக்கு வெட்கமாக இல்லை?

உக்கிரமாகிப் போனாள் காமாட்சி

கோபத்தோட தொடர்ந்தாள்
எல்லாத் துறைகளிலும்
பெண்களுக்கு உரிமையும்
ஒதுக்கீடும் வேண்டும் என்று
கேட்கிறீர்களே
கோயில் கருவறைக்குள்
குருக்களாக
அர்ச்சகர்களாக
பெண்களை அனுமதித்தால்
உங்கள் புனிதம் என்ன
நாறி விடுமோ? என்று
காறித் துப்புவது போல் கேட்டு
நிலம் நடுங்க
சலங்கை உடைய
தீயைப் போல் போனாள்
காஞ்சி காமாட்சி

***

சமீபத்தில் (2006) சபரிமலை அய்யப்பன் பெண்களுக்கு எதிராக எடுத்த அவதாரத்தை முன்னிட்டு மறுபிரசுரம் செய்யப்படுகிறது.

‘கர்ப்பக் கிரகத்திற்குள் பெண்கள் நுழைந்து விட்டார்கள்’ என்பதை ஏதோ சிலைத் திருடன் நுழைந்து விட்டான் என்பதை விடவும், கேவலமாக விவாதிக்கப்பட்டு அவமானப் படுத்தப்பட்டார்கள், பெண்கள்.

(பெரியார் இதற்காகத்தான் சாமியை செருப்பாலடித்தார்)

நாடாளுமன்றத்தில் பெண்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு 33% இட ஒதுக்கீடும் கிடைக்க இருக்கிறது. இட ஒதுக்கீட்டை எதிர்ப்பவர்கள் கூட உள் ஒதுக்கீடு என்ற நியாயமான கோரிக்கையைத்தான் பெயரளவிலாவது முன் வைக்கிறார்கள்.

உள் ஒதுக்கீட்டை எதிர்ப்பவர்கள் `இதுல ஜாதியெல்லாம் பார்க்கக் கூடாது. முதலில் அமலாகட்டும்` என பெண்களுக்குள் ஜாதி வேறுபாடு இல்லாதது போல் பேசுகிறார்கள்.

ஒரு பெண் பிரதமராக முடிகிறது. அர்ச்சகராக முடிவதில்லை.உள் ஒதுக்கீடு கூட வேண்டாம். அர்ச்சகராவதற்கு முழுக்க முழுக்க அய்யர், அய்யங்கார் பெண்களை மட்டுமாவது அனுமதிப்பார்களா? நாடாள முடிகின்ற பெண்ணால்- கேவலம் அர்ச்சகராக முடியாதா?

சட்டம் சந்து பொந்துகளில் நுழைகிறது. சிலர் சட்டத்தின் சந்து பொந்துகளில் நுழைந்து விடுகிறார்கள். ஆனால் கர்ப்பக் கிரகம் என்ற சந்துக்குள் எந்தச் சட்டம் நுழைய முடிகிறது?

பரந்து விரிந்த அந்த நாடாளுமன்றம் சின்ன கர்ப்பக் கிரகத்திற்கு முன் மண்டியிடுவது, பக்தியினால் அல்ல.

சுதந்திர இந்தியாவின் நவீன சட்டங்கள், மனுவின் சட்டங்களுக்கு முன் மண்டியிடுவதைப் போல.

நாடாளுமன்ற உறுப்பினர் என்பது அதிகாரம்.

கர்ப்பக் கிரகத்திற்குள் நுழைவது சுயமரியாதை.

அதிகாரத்தை விடவும், சுயமரியாதை முக்கியம் அல்லவா!

`தீட்டு` என்று காரணம் சொல்லி பெண்களை கோயிலுக்குள் அனுமதிக்க முடியாது என்றனர்.

தந்தை பெரியார் கேட்டார்:

“மலம் கழித்துவிட்டு கோயிலுக்குள் வரலாம்.

மலத்தை விடவா, மாதவிலக்கு தீட்டு”

விழிப்புணர்வு,2006 நவம்பர் இதழுக்காக,  2002 தலித் முரசில் வெளியான கவிதையை, புதியதாக இந்தப் பின்னுரையோடு   எழுதி தந்தேன். இதன் தேவைக் கருதி மறுபிரசுரம் செய்த அதன் ஆசிரியர் கு. காமராஜ் அவர்களுக்கு நன்றி.

22 thoughts on “பெண்களுக்கான இடஒதுக்கீடு: தெய்வக் குத்தம்”

 1. //எல்லாத் துறைகளிலும்
  பெண்களுக்கு உரிமையும்
  ஒதுக்கீடும் வேண்டும் என்று
  கேட்கிறீர்களே
  கோயில் கருவறைக்குள்
  குருக்களாக
  அர்ச்சகர்களாக
  பெண்களை அனுமதித்தால்
  உங்கள் புனிதம் என்ன
  நாறி விடுமோ? என்று
  காறித் துப்புவது போல் கேட்டு
  நிலம் நடுங்க
  சலங்கை உடைய
  தீயைப் போல் போனாள்//

  சமூகத்தின் நிலை மற்றும் உண்மையான கோபம்..வாழ்த்துகள் என்னோட முகநூலில் (facebook) பகிர்ந்துள்ளேன் இந்த கட்டுரையை..

 2. மிகக் சரியான சமுகத்தின் குரல் இது..உங்கள் குரல் தொடர்ந்தும் ஒலிக்கட்டும்.தங்கள் அனுமதியுடன் இதனை என் face book இல் பகிர்ந்துள்ளேன்.நன்றி ..

 3. ///“மலம் கழித்துவிட்டு கோயிலுக்குள் வரலாம்.

  மலத்தை விடவா, மாதவிலக்கு தீட்டு”///

  “மலம் கழித்துவிட்டு(கழுவிவிட்டு) கோயிலுக்குள் வர முடியும்.மாதவிலக்கு அப்படியா.???

  மேலும் ஆண்கள் மந்திரங்களை சொல்லும் பொது ஏற்ப்படுத்தும் அதிர்வுகளை போல் பெண்களின் மென்மையான குரலால் ஏற்ப்படுத்த முடியாது.

  மந்திரங்கள் ஏற்ப்படுத்தும் அதிர்வுகளே மிக முக்கியம்.

 4. தனபால் , அப்புறம் எதுக்கு உங்க ஆளு தேவநாத குருக்கல்வால் பெண்களை கர்ப்ப கிரகத்துக்கு உள்ளேயே வைத்து சல்லாபம் செய்தானாம். அப்படி செய்த அந்த பன்னாடைக்கு ஏன் பார்பன சங்கம் உதவி செய்கிறதாம்..?அதை கண்டிக்க ஒரு பார்பணனும் , சந்து மதத்தவனும் வரவில்லையாம் ஏனாம் ?
  பாவம்டா மீனாட்சி ,காமாட்சி, துர்க்கை , சரஸ்வதி எல்லாம். அதுங்களோட மார்பகங்கள கழுவறதும் , ……….. தொடைகிறேன் என்கிற பெயரில் …….ஐயோ எழுதவே கூசுதே…பாவம்டா அந்த பெண் தெய்வங்கள் ……
  அது சரி இதுங்களுக்கு எல்லாம் மாத விலக்கு உணடா இல்லையா….

 5. திரு செல்வராஜ் அவர்களே,

  ///we fight on behalf of women against men.All men to be change in mind in future going to this concept.///

  நீங்கள் சொல்வது மிகச்சரியே.பெண்களுக்கு எதிரான மனப்போக்கு மாறவேண்டும்.இதில் எந்த மாற்றுக் கருத்தும் இருக்கக் கூடாது.

  ஆனால் நீங்கள் கூறும் /// Actually women reservation 50% is must need /// சிறிது ஆபத்தானதும் கூட.

  ஏனென்றால் இப்பொழுதே பல அலுவலகங்களில் இவர்கள் 20 , 30 % பெண்கள் பணிபுரிகின்றனர்.சில தனியார் அலுவலகங்களில் முழுக்க முழுக்க பெண்களே பணி புரிகின்றனர்.இவ்வாறிருக்கும் போது அவர்களுக்கு 50 % reservation தரும்போது,மீதம் உள்ள 50 % தில் general category யிலும் பெண்கள் அறிவுத்திறனால் குறைந்தது 20 % வரை வேலைவாய்ப்புப் பெறுவார்.அப்படிப் பார்க்கும் போது குறைந்தது 70 % பெண்கள் வேலைவாய்ப்புப் பெறுவர்.ஆனால் ஆண்களோ அதிகப் பட்சமான 30 % பேர் தான் வேலை வாய்ப்புப் பெறுவர்.

 6. திரு MATT அவர்களே,

  ///தனபால் , அப்புறம் எதுக்கு உங்க ஆளு தேவநாத குருக்கல்வால் பெண்களை கர்ப்ப கிரகத்துக்கு உள்ளேயே வைத்து சல்லாபம் செய்தானாம். அப்படி செய்த அந்த பன்னாடைக்கு ஏன் பார்பன சங்கம் உதவி செய்கிறதாம்..?அதை கண்டிக்க ஒரு பார்பணனும் , சந்து மதத்தவனும் வரவில்லையாம் ஏனாம் ?///

  நான் இதைத் தான் யாராவது கூறுவார்கள் என்று எதிர்பார்த்தேன்.நீங்கள் கூறி விட்டீர்கள்.தேவநாதன் சம்பவம் ஒரு கீழ்த்தரமான,அருவருப்பான ஒன்று.அவனே உண்மையில் பெரியாரின் கடவுள் மறுப்புக் கொள்கையை கடைபிடிக்கும் ஒரிஜினல் நாத்திகன்.

  அவனுக்கு வக்காலத்து வாங்கும் பார்ப்பன சங்கத்தின் செயலும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கதே,

  எனக்கு தெரிந்து சோ முதல் நம் வலைதள நண்பர்களும்,பல இந்துக்களும் இதை கண்டித்திருக்கிறார்கள்.

  //பாவம்டா மீனாட்சி ,காமாட்சி, துர்க்கை , சரஸ்வதி எல்லாம்……………………………………………………………………………………///

  நம்பிக்கையும் ,பக்தியும் இருக்கும் இடத்தில் காமம் தோன்றாது.மேலும் கற்ப கிரகத்தில் இருக்கும் சிலைகள் வஸ்திரம் அணிவிக்கப் பட்டே சிலை உருவாக்கப்பட்டிருக்கும்.

  நீங்கள் கூறுவதைப் பார்த்தால் உங்கள் மனம் காமம் மிகுந்துள்ளதைப் போல் உள்ளது.திருமணம் ஆகாதிருந்தால் சீக்கிரம் திருமணம் செய்யுங்கள் .இதை அன்போடு தான் கூறுகிறேன் .நண்பரே.

  ///அது சரி இதுங்களுக்கு எல்லாம் மாத விலக்கு உணடா இல்லையா///

  ஆமாம் சாலையோரம் இருக்கும் பெரிய பெரிய தலைவர்கள் சிலையெல்லாம் மலம்,ஜலம் கழிக்குமா???

 7. //நம்பிக்கையும் ,பக்தியும் இருக்கும் இடத்தில் காமம் தோன்றாது.மேலும் கற்ப கிரகத்தில் இருக்கும் சிலைகள் வஸ்திரம் அணிவிக்கப் பட்டே சிலை உருவாக்கப்பட்டிருக்கும்.//
  அடிப்படையே தெரியாமல் இந்து மதத்தை பற்றி பேச வந்துடீங்களே… வஸ்திரம் எல்லாம் போடபட்டிருக்காது சிலை செய்யும் போது. இதை பற்றி விளக்கம் வேண்டும் என்றால் கேட்கவும் தெளிவாக சொல்கிறேன்.
  //நீங்கள் கூறுவதைப் பார்த்தால் உங்கள் மனம் காமம் மிகுந்துள்ளதைப் போல் உள்ளது.திருமணம் ஆகாதிருந்தால் சீக்கிரம் திருமணம் செய்யுங்கள் .இதை அன்போடு தான் கூறுகிறேன் .நண்பரே.//
  இதையெல்லாம் போய் உங்க ஜெயேந்திரன், நித்தியானந்தன், கிருஷ்ணன் , பிரமன் இவர்களிடம் சொல்லுங்கள். காமம் இல்லாமையா இவளவு ஆபாசமாக சிலை வடித்துள்ளனர். நம்பிக்கையும் பக்தியும் வளர்கதான் சிலைகள் என்றால் ஏன் உடல் உறவு கொள்வது போல் சிலைகள் கோவிலில் உள்ளது.
  //ஆமாம் சாலையோரம் இருக்கும் பெரிய பெரிய தலைவர்கள் சிலையெல்லாம் மலம்,ஜலம் கழிக்குமா???//
  அது வெறும் சிலை. ஆனால் மீனாட்சி ,காமாட்சி, துர்க்கை , சரஸ்வதி இதெல்லாம் வெறும் சிலை தானா ….?
  //அது சரி இதுங்களுக்கு எல்லாம் மாத விலக்கு உணடா இல்லையா// பதில் கெடைக்குமா இந்துத்துவ வாதிகளே ….

 8. //தனபால் (10:27:52) :

  கோவில் கர்ப்ப கிரகத்தில் சுகாதாரக் கேட்டுடன் இருப்பது எப்படி நியாயமாகும் சொல்லுங்கள்.
  //

  அய்யா தனபால் அவர்களே, சுகாதாரத்தைப் பற்றி நீங்களும் பார்ப்பனப் பண்டாரங்களும் தயவு செய்து பேசாதீர்கள்..

  உங்கள் வீட்டிலும் பெண்கள் உள்ளார்கள் அல்லவா!.. மாதவிலக்கு காலத்தில் பயன்படுத்துவதற்கு தகுந்த உபகரணங்கள் வந்துவிட்டது தெரியாத உமக்கு???..

  மேலும் உமது இட ஒதிக்கீடு தொடர்பான உளறலை உம் வீட்டு பெண் கூட ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்..

  பார்ப்பான பண்டாரங்களை முதலில் அனைத்து கோவில்களில் இருந்தும் துரத்தி அடிக்கவேண்டும்.. உங்கள் வீட்டு பெண்களுக்கும் அதுதான் பாதுகாப்பு தனபால்..

  முதலில் கோவில் கற்பகிரகதிலுள்ள அனைத்து சிலைகளையும் சோதனை செய்ய வேண்டும்..அப்போதுதான் இந்த பார்ப்பனக் கூட்டத்தின் சல்லாப சேட்டைகள் அனைத்தும் வெளியில் வரும்….

  //ஆமாம் சாலையோரம் இருக்கும் பெரிய பெரிய தலைவர்கள் சிலையெல்லாம் மலம்,ஜலம் கழிக்குமா???//

  அய்யா சாலையோரம் உள்ள சிலைகளை அனைத்து மக்களும் பார்க்கலாம், தொட்டும் பார்க்கலாம்.. ஆனால் கற்பகிரகதிலுள்ள சிலையை????????????

  தனபால் நீங்கள் படித்தவரா!!!.. உமது ஒப்பீட்டை கண்டால் குழந்தைகள் கூட நகைக்கும் அய்யா.. உம்மிடம் எல்லாம் நேரம் செலவழிப்பது வீண்..

 9. திரு MATT , மற்றும் திரு முகம்மத் பாருக் அவர்களே,,

  இந்த விஷயம் பற்றி இனியும் நான் விவாதிக்க விரும்பவில்லை. தரம் மற்ற கருத்துக்காக விவாதம் தொடர்வது நமக்கு நல்லதல்ல.

  இதை என்னுடைய தோல்வி என்று கூட வைத்துக்கொள்ளுங்கள்.

  வேறு நல்ல தலைப்பில் விவாதிப்போம்.

  திரு சதீஷ் அவர்களே,

  ///தனபால் மிக சரியான பார்ப்பன இந்துத்துவவாதி. இவரின் சோடி திருச்சிக்காரரை என்ன காணவில்லைஃ///

  நீண்ட நாளாயிற்று சதீஷ் உங்கள் எழுத்துக்களை பார்த்து.சதீஷ் நலமா? இங்கே வராத திருச்சிக்காரரை ஏன் தேவையில்லாமல் இழுக்கிறீர்கள் சதீஷ்..நான் இந்த தளத்தில் இருந்தால் என்னிடம் விவாதியுங்கள்.இது நாகரீகமான செயல் அல்ல சதீஷ்.
  கடவுள் விசயத்தில் அவருக்கும் எனக்கும் அதிக கருத்து வேறுபாடு உண்டு.இனி மேல் இந்த ஜோடி என்பது போன்ற வார்த்தைகளை பயன்படுத்த வேண்டாம் என்று உங்களைக் கேட்டுக் கொள்கிறேன்.நன்றி.

 10. சதீஷ்,

  சகோதரர் வே. மதிமாறனின் தளத்தில் பின்னூட்டம் என்ற பெயரில், கீழ்த்தரமான வசவுகள் பதியப் படுவதால், அதில் நான் மல்லுக் கட்ட விருமபவில்லை.

  அதனால் சில காலம் விலகி நிற்கிறேன்.

  நம்முடைய தளத்தில் பல கட்டுரைகள் வருகின்றன. யாருடைய பின்னூட்டமும் மட்டுறுத்தப் படவில்லை. ஆபாச வார்த்தைகள் இருந்தால், சாதி வெறி வசவுகள் இவை மட்டுமே, அந்த வார்த்தைகள் மட்டுமே நீக்கப் படுகின்றன.

  எனவே உங்களின் கருத்துக்களில் உண்மை இருப்பதாகக் கருதினால், நம்முடைய தளத்தின் விவாதங்களின் கலந்து கொள்ளலாம் என அழைப்பு விடுக்கிறேன்.

Leave a Reply