ஒரு வருடம் ஆகிறது ஆயுத எழுத்தில் கலந்து கொண்டு. நிகழ்ச்சிக்கு அழைத்தவரிடம், ‘பேசும்போது குறுக்கீடுகள் அதிகம் இருக்கும். என் கருத்தை சொல்வதற்கு வாய்ப்பிருக்காது. அதனால் நான் கலந்து கொள்ள இயலாது’ என்று மறுத்தப் பிறகும்
‘அப்படி எதுவும் நடக்காது. நம்புங்கள்’ என்று கட்டாயப்படுத்தி அழைத்ததின் பேரிலேயே சென்றேன்.
எனக்கும் திரு. மாலனுக்கும் அன்றுதான் தந்தி டி.வி.யில் முதல் நிகழ்ச்சி. அதற்குப் பிறகு நான் ஒரே ஒரு நிகழ்ச்சியில்தான் கலந்து கொண்டேன். அதுவும் ஆயுத எழுத்தல்ல. நடுவில் இரண்டுமுறை அவர்கள் அழைத்தபோது என்னால் கலந்து கொள்ள முடியாமல் போனது.
மற்றபடி அதற்குப் பிறகு மாலன், தந்தி டி.வி யின் நிலைய வித்துவான் போலவே ஆகிவிட்டார். அது மட்டுமல்ல அவரை மட்டுமே வைத்துச் சிறப்பு நிகழ்ச்சிகளும் தந்தியில் நடத்துகிறார்கள்.
அன்று நாங்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சியில், எல்லோரையும் விட என் பங்களிப்பே சிறப்பானதாக இருந்தது என்று பலராலும், பரபரப்பாக என்னைக் குறித்து எதிர்ப்பாளர்களாலும் விமர்சிக்கப்பட்டது. இத்தனைக்கும் அதில் நான் தனி. (4 Vs 1)
‘மாலனின் பங்களிப்பு மிக மோசமானதாக இருந்தது’ என்று பலர் குறிப்பிட்டதற்குப் பிறகும்
மாலனை நிரந்தர விருந்தினராக உபசரிப்பதற்கும், என்னை ஒரே நிகழ்ச்சியோடு நிறுத்திக் கொண்டதற்கும் காரணம்,
நிச்சயம் பெரியார் சொன்ன அரசியல் இல்லாமல் வேறென்ன?
வேறு இருந்தால் திரு. ரங்கராஜ் (பாண்டே) தான் சொல்ல வேண்டும்.
12 October
‘புரட்டாசி மாதம் வெஜிடேரியன் சாப்பிடறதில்ல’
அன்று தந்தி டி.வி. ஆயுத எழுத்து நிகழ்ச்சியின் போது, எனக்கும் திரு ராகவனுக்கும் இடைவேளையில் சாப்பிடுவதற்கு உணவு பாக்கெட் வைத்திருந்தார்கள்.
திரு. மாலனுக்கு அந்தப் பாக்கெட் வைக்கப்படாததால் அதை அவருக்குத் தந்தேன்.
உடனே திரு. ரங்கராஜ் (பாண்டே) என்னிடம், ‘நீங்க சாப்பிடுங்க.. அது veg sandwich தான்’ என்றார்.
‘இல்ல.. நான் புரட்டாசி மாசம் வெஜிடேரியன் சாப்பிடறதில்ல’ என்றேன்.
12 October
