ஜீவா: நான் கலந்து கொள்ள மாட்டேன்
ஒரு வாரத்திற்கு முன் ‘பனுவல் சார்பாக ஜீவா திரைப்படம் குறித்த கலந்துரையாடலில் கலந்து கொள்ள வேண்டும்‘ என்று தோழர் செந்தில் நாதன் கேட்டுக் கொண்டார். எத்தனைப் பேர்? யார்? யார்? என்றேன்.
காரணம், நான் சிறப்புரையாக பேசுகிற கூட்டங்களில் மட்டுமே கலந்து கொள்வேன். சம்பிரதாயமாக பேசுவதை தவிர்ப்பதும்… கூடுதல் நேரம் பேசினால் தான் ஓரளவுக்கு நம் கருத்தை புரிய வைக்க முடியும் என்பதினாலும்,
வேறு யாரும் கலந்து கொண்டால்.. கூட்டம் நடத்துகிறவர்களுக்கு யார் முக்கியமாக தெரிகிறார்களோ, அல்லது அவர்கள் மூலம் அவர்களுக்கு உள்ள லாபம், பிரபலத்தன்மை, அவர்களின் தொழில் குறிப்பாக திரைப்படத்துறை சார்ந்தவராக இருந்தால்.. அவர்களுக்கே அழைப்பிதழில் பெயர் வரிசைப்படுத்தும் போது முதலில் சேர்ப்பதும், பேசுவதற்கு அதிக நேரம் கொடுப்பதும் போன்ற அற்பத்தனங்கள் நடக்கும் என்பதாலேயே.
‘உங்களிடம் தான் முதலில் கேட்கிறேன்‘ என்றார் செந்தில். சரி கலந்து கொள்கிறேன், என்றேன். சில நாள் கழித்து நானே தேதியையும் கேட்டு தெரிந்து கொண்டு என் பேச்சையும் தயார் செய்து இன்று (17-10-2014) கலந்து கொள்வதற்காக தயாராக இருந்தேன். ஆனால் நிகழ்ச்சிகான அழைப்பு இன்று வரை எனக்கு வரவேயில்லை.
நானாக இணையத்தில் தேடிப் பார்த்தபோது, இயக்குனர் கேபிள் சங்கர் என்று ஆரம்பித்து என்னுடைய பெயர் 3 ஆவதாக இருந்தது.
அதனால் தோழர் செந்திலிடம் தொலைப்பேசியில் இதே காரணத்தைச் சொல்லி, இன்று நடக்கும் ஜீவா திரைப்படம் குறித்த கலந்துரையாடலில் நான் கலந்து கொள்ள முடியாது என்று தெரிவித்துவிட்டேன்.
‘பெயர் கொடுத்து விட்டு வராமல் போய்விட்டான்‘ என்று மற்றவர்கள் என்னை தவறாக கருதக் கூடாது என்பதற்காகவே இந்த விளக்கம்.
ஆக, நான் இன்று சென்னை பனுவல் புத்தக் கடையில் நடக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மாட்டேன்.
சிறந்த பகிர்வு
தங்களுக்கும்
இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
http://yppubs.blogspot.com/2014/10/blog-post_21.html