
டாக்டர் அம்பேத்கர் டி சர்ட், திரைப்பட வெளியீடு என்று என்னோடு இணைந்து செயல்பட்ட அன்பு தம்பி சுவன் – ரேவதி திருமணம் ஆகஸ்ட் 21 அன்று மாலை சென்னையில் என் தலைமையில் நடந்தது.
விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் திருமாவளவன் அவர்கள் திருமணத்தை நடத்தி வைப்பதாக இருந்தது. ஆனால், அவரால் வர இயலாமல் போனதால் நானே திருமணத்தை நடத்தியும் வைத்தேன்.
டாக்டர் அம்பேத்கரையும் பெரியாரையும் இணைத்து தொடர்ந்து செயல்படுகிற சுவன், இல. வேந்தன் இவர்கள் இருவரும் தான், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பே சென்னை சந்தோஷ் நகரில் என்னை வைத்துக் கருத்தரங்கங்கள் நடத்தினர். நான் பேச்சாளனாக உருவானதற்குச் சந்தோஷ் நகர் தோழர்கள் முக்கியக் காரணம்.
நான் பெற்ற முதல் விருது அண்ணல் அம்பேத்கர் விருதுதான். டாக்டர் சந்தோஷ் நகரில் மக்கள் நல இளைஞர் சங்கம் அதை எனக்கு வழங்கி பெருமை படுத்தினர்கள். அதே சந்தோஷ் நகரிலேயே சுவன் – ரேவதி திருமணம் நடந்தது மகிழ்ச்சி.
