
ஆண்களோடு, சகஜமாக பேசுகிற பெண்களை ஏன் ஆண்கள் சந்தேகிக்கிறார்கள்?
-சுரேகா, சென்னை.
ஒரு பெண்ணை ஆண் என்ன கண்ணோட்டத்தோடு பார்க்கிறான் என்பது ஆண்களுக்கு தெரியும் என்பதால்.
அலுவலகம், பொது இடங்களில் தன்னுடன் நட்பாக பேசும் பெண்களை பற்றி தன் நண்பர்களிடம் ஆண் எப்படி பகிர்ந்து கொள்கிறான், நண்பர்கள் அந்த பெண்ணோடு பாலியல் ரீதியாக தொடர்புபடுத்தி எப்படி கிண்டல் செய்கிறார்கள், அதை நண்பன் ரசித்துக் கொண்டே எப்படி பெருமையோடு மறுக்கிறான். ஏற்கிறான்.
பெண்களுக்குப் புரியாத ஆண்கள் மட்டும் பகிர்ந்து கொள்கிற பாலியல் ரீதியான வார்த்தைகளை ஒரு பெண்ணிடம் பேசும்போது, அந்தப் பெண் அதன் உள்ளர்த்தம் புரியாமல் சீரியாசாக தலையாட்டுவதும், அதை ஆண்கள் எப்படி கும்பல் கூடி ரசித்து சிரிக்கிறார்கள்;
இவைகள் எல்லாம் தெரியும் அல்லது தானும் செய்திருப்பதால்தான், ஆண்களிடம் பேசும் பெண்களை மிக குறிப்பாக தன் குடும்பத்து பெண்களை அதிலும் குறிப்பாக மனைவியை அதிகம் சந்தேகிக்கிறான்.
பாம்பின் கால் பாம்பறியும் என்பதுபோல், ஆணின் புத்தியை ஆண் அறிவான். ஆனாலும் அதன் தண்டனையை பெண்களுக்குத்தான் தருவான்.
*
திரு.ஷேக் மொய்தீன் அவர்களை ஆசிரியராக கொண்டு வெளிவருகிற தங்கம் ஆகஸ்ட் மாத இதழுக்காக வாசகர் கேள்விக்கு நான் எழுதிய பதில்.
தொடர்புடையவை:
பெண்களைப் புரிந்து கொள்ளவே முடியாது!
பெண்களின் ஆரோக்கியத்திற்கு தேவை, இலவசத் தாலி அல்ல; சானிடரி நாப்கின்தான்
