பொண்டாட்டிய நம்பறவனுக்கு பேர்தான் புருசன்..

பெண்கள் பிறப்பதில்லை, ஆண்களுக்காகவே தயாரிக்கப்படுகிறார்கள்

ஆண்களோடு, சகஜமாக பேசுகிற பெண்களை ஏன் ஆண்கள் சந்தேகிக்கிறார்கள்?

-சுரேகா, சென்னை.

ஒரு பெண்ணை ஆண் என்ன கண்ணோட்டத்தோடு பார்க்கிறான் என்பது ஆண்களுக்கு தெரியும் என்பதால்.

அலுவலகம், பொது இடங்களில் தன்னுடன் நட்பாக பேசும் பெண்களை பற்றி தன் நண்பர்களிடம் ஆண் எப்படி  பகிர்ந்து கொள்கிறான், நண்பர்கள் அந்த பெண்ணோடு பாலியல் ரீதியாக தொடர்புபடுத்தி எப்படி கிண்டல் செய்கிறார்கள், அதை நண்பன் ரசித்துக் கொண்டே எப்படி பெருமையோடு மறுக்கிறான். ஏற்கிறான்.

பெண்களுக்குப் புரியாத ஆண்கள் மட்டும் பகிர்ந்து கொள்கிற பாலியல் ரீதியான வார்த்தைகளை ஒரு பெண்ணிடம் பேசும்போது, அந்தப் பெண் அதன் உள்ளர்த்தம் புரியாமல் சீரியாசாக தலையாட்டுவதும், அதை ஆண்கள் எப்படி கும்பல் கூடி ரசித்து சிரிக்கிறார்கள்;

இவைகள் எல்லாம் தெரியும் அல்லது தானும் செய்திருப்பதால்தான், ஆண்களிடம் பேசும் பெண்களை மிக குறிப்பாக தன் குடும்பத்து பெண்களை அதிலும் குறிப்பாக மனைவியை அதிகம் சந்தேகிக்கிறான்.

பாம்பின் கால் பாம்பறியும் என்பதுபோல், ஆணின் புத்தியை ஆண் அறிவான். ஆனாலும் அதன் தண்டனையை பெண்களுக்குத்தான் தருவான்.

*

திரு.ஷேக் மொய்தீன் அவர்களை ஆசிரியராக கொண்டு வெளிவருகிற தங்கம் ஆகஸ்ட் மாத இதழுக்காக வாசகர் கேள்விக்கு நான் எழுதிய பதில்.

தொடர்புடையவை:

கடலை மன்னர்களின் உருவ வழிபாடு

பெண்களைப் புரிந்து கொள்ளவே முடியாது!

பெண்களின் ஆரோக்கியத்திற்கு தேவை, இலவசத் தாலி அல்ல; சானிடரி நாப்கின்தான்

சானிடரி நாப்கின்; நமது கருத்தும், அதிமுக அரசின் திட்டமும்

10 thoughts on “பொண்டாட்டிய நம்பறவனுக்கு பேர்தான் புருசன்..

  1. முதலில் பெண்ணை தனக்கு இணையான மானிடபிறப்பு என்று எவன் எண்ணுகிறானோ அவனே முதலில் மனிதன் என்று சொல்லவேண்டும் பின்புதான் புருஷன் போஸ்டிங்கெல்லாம் . இந்த ஆண்மக்கள் அரசு மதுக்கடையில் நன்றாக குடித்துவிட்டு பின் கணேஷ்போயிலை அல்லது பான்பராக் போன்றவற்றை உதப்பினபடி வீட்டுக்கு வருவர்கலம் தன் மனவிமட்டும் நன்றாக குளித்து தலை நிறைய பூ வைத்து சாப்பிடாமல் காத்திருக்கனுமாம் ……. தெரியாமத்தான் கேட்கிறேன் இந்த அம்பலேங்க எல்லாம் அவுளோ பெரிய அப்பா டக்கர…………………………

  2. நம்பிக்கை என்பது வேறு…….. நம்பிதான் பைக் ஓட்டுறோம் கீழ விழலையா…. அது போல தான்…..
    பெண்கள் அனைவரும் நல்லவர்களா…… இல்லியே…….
    சந்தேகம் இல்லனா ஏமான்நதுடனும்…….

Leave a Reply

%d bloggers like this: