வாலியின் ‘கவிதை’யால் இரண்டு பயன்கள் உண்டு

இது வேட்டையாடி உண்கிற நரியல்ல; ‘காக்க’ பிடித்து பிழைக்கும் நரி

கருணாநிதி ஆட்சியில் ஜெயலலிதாவை கிண்டல் செய்த வாலி, இப்பொது அவரை புகழ்ந்து எழுதிய ரங்கநாயகி கவிதை வாசித்தீர்களா?

-ஏ.எல். சிவராமன், சென்னை.

ஆம்.

காதலிக்க நேரமில்லை திரைப்படத்தில், தன்னிடம் வேலை செய்யும் ரவிச்சந்திரைனை ‘டேய் மோகன்..’ என்று தொடங்கி மிக தரக்குறைவாக திட்டுவார் பாலையா.

பிறகு, முத்துராமன், பெரிய பணக்காரன் கெட்டப்பில் வந்து, ‘மோகன் (ரவிச்சந்திரன்) ’என்னுடைய மகன்தான்’ என்று சொன்னவுடனேயே பாலையா, “என்னங்க…, மோகர் உங்க மகருங்களா?” என்று குழைந்து பம்முவார். அதுபோன்றதுான் வாலியின் செய்கையும்.

வாலியின் அந்தக் ‘கவிதை’யால் இரண்டு பயன்கள் உண்டு.

ஒன்று வாலியின் மீது விழுந்த கருணாநிதி நிழலை ஜெயலலிதாவின் உருவத்தால் மறைத்து, இனி அவர் நிழலில் ஒதுங்கி கொள்ளலாம்.

இரண்டு புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்களிடம் நற்பெயர் பெற்று கனடா, பிரான்சு, ஆஸ்திரேலியா, அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்று அந்த மக்களிடம் வாங்கித் திங்கலாம்.

‘சினிமா பிரபலம், எம்.ஜி.ஆருக்கே பாட்டு எழுதியவர்’ என்பதினால் ஒரு ‘உருண்டை’ கூடுதலாக கிடைக்கும். அலிபாபாவும் 40 திருடர்களும் படத்தில் எம்.ஜி.ஆருக்கு கிடைச்சா மாதிரி.

மற்றப்படி ஈழத்தமிழர்களுக்கு இதனால் எந்த பயனும் இல்லை. எப்போதும்போல் நஷ்டம்தான். ஏற்கனவே தமிழகத்துல பல பேர ‘மெயிண்டன்’ பண்றமாதிரி இதையும் பண்ணிட்டு போக வேண்டியதுதான்.

பாவம் புலம் பெயர்ந்த தமிழர்கள்.

*

திரு.ஷேக் மொய்தீன் அவர்களை ஆசிரியராக கொண்டு வெளிவருகிற தங்கம் சூன் மாத இதழுக்காக வாசகர் கேள்விக்கு நான் எழுதிய பதில்.

தொடர்புடையது:

கண்ணதாசன் பாடல்களில் மிகவும் பிடிக்காத ஒரு பாட்டு; காரணம் வாலி

5 thoughts on “வாலியின் ‘கவிதை’யால் இரண்டு பயன்கள் உண்டு

 1. //மற்றப்படி ஈழத்தமிழர்களுக்கு இதனால் எந்த பயனும் இல்லை. எப்போதும்போல் நஷ்டம்தான். ஏற்கனவே தமிழகத்துல பல பேர ‘மெயிண்டன்’ பண்றமாதிரி இதையும் பண்ணிட்டு போக வேண்டியதுதான்.

  பாவம் புலம் பெயர்ந்த தமிழர்கள்.//

  Neththiyadi!

 2. வைரமுத்து சில மாதங்களுக்கு முன் நடந்த ஒரு விழாவில் கவிஞன் கருப்பாக இருந்தாலும் சரி, சிவப்பாக இருந்தாலும் சரி- அவன் கலைஞரோடுதான் இருப்பான் என்று தன்னையும் வாலியை யும் சுட்டிக் காட்டி பேசினார்.

  இப்போது வாலி ஜெயாவைப் பாராட்டி கவிதை எழுதுவதைப் போல வைரமுத்து செய்யாமல் எப்போதும் கலைஞரோடு இருக்கிறார்.

  அப்ப வைரமுத்துவை கொள்கைக் குன்று, குணாளன், கரை படியாத கரத்துக்கு சொந்தக்காரர், பால் மாறாத மனத்துக்கு சொந்தக்காரர் என்றெல்லாம் சொல்லலாமா?

 3. Vali,vairamuthu,Abdul Rahman,Avuai Natarajan agiya kavingarkal belives by protecting Karunanidhi is of suporting Dravidam.Other than that they never spokeod write for Dravidam….and over the real thing is if you pay money the spoke for Ramayan,Kambar etc too.So as Periyar told no Tamil Literatures are Intelect

 4. ஒரு சிறு திருத்தம்..
  காதலிக்க நேரமில்லை படத்தில்..மோகர் உங்கள் மகரா என்று கேட்டிருக்க மாட்டார்..
  அசோகர் உங்கள் மகரா என்று சொல்லியிருப்பார்..

Leave a Reply

%d bloggers like this: