உங்களது கேள்விகளை தெரிந்து கொள்ளலாமா?
ரொம்ப அதிகமில்லை ஜென்டில்மேன். மூணே கேள்விகள்தான்.
*
‘காந்தி – நண்பரா துரோகியா?’ புத்தகத்திலிருந்து….
தன் பொதுவாழ்க்கையை தென்னாப்பிரிக்காவில் கருப்பர்-வெள்ளையர் இனப் பிரச்சினையில் இருந்தே துவங்கியதாக காந்தியே குறிப்பிடுகிறார்.
அதற்கு ஆதாரமாக ரயிலில் அவருக்கு ஏற்பட்ட பிரச்சினையை சாட்சியாக்குகிறார்.
ஆனால், தென்னாப்பிரிக்காவில் ‘மாரிட்ஷ்பர்க்’ ரயில் நிலையத்தில் அவருக்கு ஏற்பட்ட அவமரியாதை, நிற வேறுபாட்டினால் அல்ல; ரயிலில் டிக்கெட் எடுக்காத காரணத்தால்தான் என்று காந்தியின் எழுத்துக்களில் இருந்தே நான் நிரூபித்திருக்கிறேன்.
அது சம்பந்தமாக நான் எழுப்புகிற மூன்று கேள்விகளுக்கு பதில் அளித்துவிட்டு, அதன் பிறகு காந்தியை ஆதரிக்கட்டும், பரிந்துரைக்கட்டும் அறிவாளிகள்.
மாறாக, பாரதி பற்றிய என்னுடைய கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் பதுங்கி கொண்டதைப் போல் செய்வார்களேயானால்…
*
புத்தகக் காட்சியில்,‘கீழைக்காற்று, கருப்பு பிரதிகள், அலைகள், தடாகம், புலம், முரண்” கடைகளில் கிடைக்கும்.
‘அங்குசம்’
ஞா. டார்வின்தாசன்
எண்.15, எழுத்துக்காரன் தெரு
திருவொற்றியூர்
சென்னை-600 019.
பேச: 9444 337384
தொடர்புடையது:

