Site icon வே. மதிமாறன்

என்னென்ன செய்தாலும் புதுமை எங்கெங்கு தொட்டாலும் இளமை; அற்பத்தனம்

நடிகை லட்சுமியும்-புரட்சித்தலைவரும் ஏதோ ஒரு படத்திற்காக..

யாரையும் நீங்கள் பாராட்டவே மாட்டிர்களா, ஓருவரை புகழ்வதே தவறா?

-கவி

ஒருவரிடம் பாராட்டுக்குரிய அம்சம் என்ன இருக்கிறதோ அதை குறிப்பிட்டு பாராட்டுவது தவறில்லை. அதை செய்யவும் வேண்டும். மிகப் பெரும்பாலும், ஒருவரிடம் இல்லாத திறமையையும் குணத்தையும் குறிப்பிட்டு பாராட்டுவதே, நமது மரபாக இருக்கிறது.

அப்படி பாராட்டுவதின் மூலம் பாராட்டுகிறவர் எதையோ தனிப்பட்ட முறையில் ஆதாயம் தேடுகிறார் என்பதை தவிர வேறு எதுவும் இல்லை.

இப்படிதான் புகழந்து பரிசு பொருட்களை, பதவிகளை, நூலக ஆர்டர்களை, வாய்ப்புகளை தட்டிச் சென்றுவிடுகிறார்கள் இலக்கியவாதிகள். அரசியல்வாதிகள். ஆன்மீகவாதிகள் இன்னும் அலுவலகத்தில் வேலை செய்பவர்கள்.

அதன் மூலம் மிக மோசமான ஆதிக்க மனநிலையை பாராட்டப்படுகிறவர் மனதில் ஏற்படுத்துவதும், தன்னிடம் இல்லாத ஒன்றை தன்னிடம் இருப்பதாக நினைத்துக் கொண்டு அவர்கள் செய்கிற அட்டகாசங்களும், தத்துவ விளக்ங்களும் தாங்க முடியவில்லை.

இப்படித்தான், 65 வயதான எம்.ஜி.ஆரைப் பார்த்து 16 வயதே நிரம்பிய மஞ்சுளா பாடுவதுபோல் ஒரு பாடலை ஒரு பாடலாசிரியர் எழுதியிருந்தார்:

நீ என்னென்ன செய்தாலும் புதுமை

உனை எங்கெங்கு தொட்டாலும் இளமை.

இது எவ்வளவு ஆபாசமான வரி என்பதையும் தாண்டி, இது எவ்வளவு அற்பத்தனாமான பொய்.

Exit mobile version