இயக்குநர் பாலாஜி சக்திவேலுக்கு நன்றி (வழக்கு எண்.. விமர்சனம் அல்ல)

ஞ்சையிலிருந்து தோழர் எழிலரசன் மே 29 ஆம் தேதி இரவு தொலைபேசியில் அழைத்திருந்தார்

“ஜூனியர் விகடன் பிரபலங்களின் கருத்துக்களை பதிவு செய்து தொலைபேசி வழியாக ஒலிபரப்பும் நிகழ்ச்சியை நடத்துகிறது. நேற்று இயக்குநர் பாலாஜி சக்திவேல் ‘நட்பு’ என்ற தலைப்பில் உங்கள் பெயரை குறிப்பிட்டு, வே. மதிமாறன் பதில்கள் புத்தகத்தில் காரல் மார்க்ஸ் – எங்கல்ஸ் நட்பு பற்றி நீங்கள் எழுதியிருந்ததை முழுவதுமாக படித்துக் காண்பித்தார்.” என்று குறிப்பிட்டார்.

நான் அந்த ஒலிபரப்பை கேட்க வில்லை.

பத்திரிகையில், மேடையில், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில்; எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், பேச்சாளர்கள், பிரமுகர்கள், பிரபலமானவர்கள், கொள்கையாளர்கள் என்று பலதரப்பினரும்…

என் புத்தகங்களில் மற்றும் இணைய தளத்தில் உள்ள என் எழுத்துகளை, கருத்தரங்குகளில் நான் பேசிய, தனி உரையாடலில் என்னுடன் பேசியபோது நான் சொன்ன கருத்துகளை; தன் கருத்துகளாக பயன்படுத்தி, மறந்தும் என் பெயர் சொல்லாமல், தன் சமூக கடமையை ‘சிறப்பாக’ செய்து வருகிறார்கள்.

அதைவிடக் கொடுமை, நான் அவர்களிடம் சொன்ன என் கருத்துகளையே. கொஞ்ச நாள் கழித்து அவர்களின் கருத்துகளை போலவே என்னிடமே வந்து, சொன்னவர்களும் இருக்கிறார்கள்.

இப்படி அறிவாளிகளால் சூறையாடப்படுகிறது என் அறிவு.

நில அபகரிப்பைவிடவும் இப்படி சிந்தனை அபகரிப்புகள் படுமோசமானவை. நேரடியான பொருளாதார மதிப்பு இல்லாததால், இவைகள் குற்றமாக கருதப்படாத மனநிலையை ‘சிந்தனை அபகரிப்பாளர்கள்’ மத்தியில் ஏற்படுத்தியுள்ளன.

அறிவாளிகளின் அறிவு நாணயம் இந்த லட்சணத்தில் இருக்கும்போது, இயக்குநர் பாலாஜி சக்திவேல் என் பெயர் குறிப்பிட்டு, என் எழுத்தை மேற்கோள் காட்டிய அவர் அறிவு நாணயத்திற்கு என்  நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இத்தனைக்கும் அவர் எனக்கு அறிமுகம் இல்லாதவர். பிரபலமானவர்.

‘………..என்று ஒரு எழுத்தாளர் சொல்லியிருக்கிறார் என்று கூட அவர் சொல்லியிருக்கலாம்.

மாறாக, எதை மேற்கோள் காட்டுகிறோமோ, அதை எழுதியவரின் பெயரையும் சொல்வதுதான் முறையானது. நாணயமானது என்ற அவரின் அந்த செயல், எனக்கு மகிழ்ச்சியளித்தது.

பிரபலமாகதவர்களின் சிந்தனைகளை தன்  சிந்தனைகளாக அறிவித்துக் கொள்வதும், பிரபலமானவர்களின், புகழ் பெற்றவர்களின் எழுத்துக்களை எழுதியவரின் பெயரோடு சொல்லி மேற்கோள் காட்டுவதும் ‘அறிவாளிகளுக்கான அழகாக’ இருக்கிறது.

பிரபலமானவர்களின் மேற்கோள் எல்லோருக்கும் தெரந்திருக்கும் என்பதும், அப்படி மேற்கோள் காட்டுவதன் மூலம் பிரபலமானவர்களோடு நெருக்கமாக பழகலாம் என்பதும் ஒரு காரணம்.

‘களவாடப்படுகிற என் கருத்துகள்’என்று பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிற என் உணர்வுக்கு, இயக்குநர் பாலாஜி சக்திவேலின் செயல் கூடுதல் மகிழ்ச்சியளிக்கிறது.

மீண்டும் அதன் பொருட்டு தோழர் பாலாஜி சக்திவேலுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

தொடர்புடையது:

கர்ணன், துரியோதனன்-மார்க்ஸ், எங்கல்ஸ்; அடியாளும், நண்பனும்

கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம்’; யாருக்கு எதிராய்?

13 thoughts on “இயக்குநர் பாலாஜி சக்திவேலுக்கு நன்றி (வழக்கு எண்.. விமர்சனம் அல்ல)

 1. திரு பாலாஜி சக்திவேல் அவர்களின் அறிவுநாணயம் போற்றுதலுக்குரியதே.
  இது ஒரு மதிக்கத்தக்க குணம் மற்றும் அதன் வெளிப்பாடேயாகும்.
  ஆகையால் தான் அவருடைய படைப்புகளும் போற்றப்படுகின்றன, காலம்
  கடந்தும் போற்றப்படுவனவாகவிருக்கின்றன.

 2. இயக்குநர் பாலாஜி சக்திவேல் உண்மையிலேயே மரியாதைக்குரியவர்.

 3. தோழர், பாலாஜி சக்திவேல் குறிப்பிட்டு சொல்லிய உங்களுடைய மார்க்ஸ், எங்கல்ஸ் நட்பு பற்றிய உங்கள் பதிலை மீண்டும் தனி பதிவாக வெளியிடவும்.

 4. திரு பாலாஜி சக்திவேல் சிறந்த இயக்குநர் மட்டுமல்ல, நல்ல பண்பாளர் என்பதையும் நிருபித்திருக்கிறார்.

 5. தோழர், பாலாஜி சக்திவேல் குறிப்பிட்டு சொல்லிய உங்களுடைய மார்க்ஸ், எங்கல்ஸ் நட்பு பற்றிய உங்கள் பதிலை மீண்டும் தனி பதிவாக வெளியிடவும்…….

  Kathal padam en kaghai ilai yendru padam mudiyum poluthu yaar oda kadhai yendru soli irukupaar.avar…..

 6. மதி,உங்களின் கருத்து செறிவான பதில்களை,ஆக்கங்களை தொடர்ந்து படித்து வருகிறேன்.நன்றி கெட்ட
  உலகில் பாலாஜி சக்திவேல் போன்றோரும் இருப்பது ஆச்சரியம்தான்.

  உங்களை படித்து மேற்கோள் தருகிறார் என்றால் பரந்து பட்ட வாசிப்பு வுள்ள ஒருவரால் தான் வழக்கு எண் போன்ற பேசப்படுகிற ஒரு வெற்றி படத்தை தர முடிந்திருக்கிறது என நம்புகிறேன்.

  வுங்களின் எழுத்தும் கருத்தும்மேலும் விரிவுபட பேச விவாதிக்கப்பட வேண்டும் என விரும்புவோரில் நானும் ஒருவன்.நீங்கள் தொடர்ந்து இயங்குங்கள்.

  அன்புடன் அம்ரா பாண்டியன்

 7. தமிழில் அசாதாரண படைப்பு. சில வருடங்களுக்கு முன்பு ‘நிலாக்காலம்’ என்று ஒரு படம் இது போல நீதி மறுக்கப்படும் ஏழைகள் தொடர்பாக பேசியது. அதில் தினேஷ் என்று ஒரு சிறுவன் ஜனாதிபதி விருது பெற்றான். அதற்கு பிறகு தமிழ் சினிமா அந்த சிறுவனை பயன்படுத்தியதாக நினைவில்லை. இதில் வரும் சிறு இளைஞனும் நன்றாக உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளான். பொலிஸ் காரனை பழிவாங்கியது தமிழ் ரசிகர்களை திருப்திபடுத்தவா? என எனக்குள் தோன்றியது. உண்மையில் இத்தகைய பொலீஸ்காரன் மீது கல்லெறியும் எதிர்ப்புணர்வைகூட காட்ட முடியாத நிலைமை இருப்பது யதார்த்தமானது. எனினும் ஒரு அமைதியான பெண் அப்படியொரு எதிர்ப்பைக் காட்டுகிறாள் எனும் உத்வேகத்தை பாதிப்புறும் தரப்புக்கு அந்த முடிவு தரலாம். என்னைப்பொறுத்தவரை வேலுச்சாமி தண்டிக்கப்பட்டபோதே திரைப்படம் முடிந்து விட்டதாகவே உணர்கிறேன். திரைக்கதையை நன்றாக அமைத்திருக்கிறார்கள். சாமராய்>காதல்> பள்ளிக்கூடம் என கவிதைபாணியில் சினிமா எடுக்கிறார் பாலாஜி சக்திவேல். வாழத்துக்கள். வர்த்தகம் உங்களை காப்பாற்ற மறக்கலாம். கலை உங்களை போற்றும்.

 8. இதுபோன்ற பண்பு கொண்ட சிறந்த மனிதராக பாலாஜி சக்திவேல் இருப்பதால்தான் அவரால் சிற்நத படங்களை தர முடிகிறது.

 9. அடுத்தவன் படைப்பை திருடியே பெரிய இயக்குநராக பெயர் வாங்கும் திரை உலகில், இப்படி ஒரு அற்புத மனிதர், வாழ்க பாலாஜி சக்திவேல்.

 10. Dear Brother, I have read your two books( Gandhi Nanbara, Barathiya Janatha party and most of your writings in your word press. I do follow your view in Facebook. Well your speeches are so humble, logical and ethical. I feel you can do it as a research thesis (PhD).

Leave a Reply

%d bloggers like this: