‘தமிழர் பண்பாடு’ தகர்ந்தது தடை

‘இந்துத்துவச் சதி – பா.ஜ.க வின் தமிழர் விரோதப் போக்கு – பார்ப்பன சதி’ என்றெல்லம் ஜல்லிக்கட்டுக்கு முற்போக்கு முலாம் பூசியவர்கள்
இப்போ பா.ஜ.க. வை புரட்சிகரக் கட்சி என்பார்களோ?
*

நான் கணிச்சது மாதிரியே ஜல்லிக்கட்டுத் தடையை நீக்கியாச்சி. அப்புறம் என்ன முக்குலத்தோர் சமூகத்திலிருந்து ஒருவரை பி.ஜே.பி. யின் தலைமை பொறுப்புக்கு தேர்ந்தெடுக்க வேண்டியதுதான்.
‘யாரங்கே.. அடுத்தக் கட்ட வேலை ஆரம்பம் ஆகட்டும். தேர்தல் நெருங்குதுல்ல.’
*
எல்லாத் தொலைக்காட்சிகளிலும் ஜல்லிக்கட்டுத் தடை நீக்கம் பற்றிய விவாதம்.
தடை நீக்கம் குறித்து நான் முன் கூட்டி எழுதியதை அநேகம் பேர் அறிவர்.
குறிப்பாக ஊடக நண்பர்கள். நிகழ்ச்சி நெறியாளுகை செய்பவர்கள், கலந்து கொள்பவர்கள் யாராவது அதை குறிப்பிட்டு சொல்கிறார்களா,
இல்லை திட்டுமிட்டு மறந்து விடுகிறார்களா? பார்த்தவர்கள் சொல்லுங்கள்.
*
புலியை முறத்தால் அடித்து விரட்டிய தமிழ்ப் பெண்ணால், கேவலம் மாட்டை அடக்க முடியாதா?
ஆமாம். ஜல்லிக்கட்டில் ஏன் பெண்கள் பங்கெடுப்பதில்லை?

‘தமிழர் பண்பாடு’ நாளை (09-01-2016) காலை 11 மணி முதல் 12 மணி வரை news7 tamil சேனல் நேரலையில் கலந்து கொள்கிறேன். நான் மட்டும்தான்.

நிச்சயம் நடக்கும் ஜல்லிக்கட்டு; தடையைத் தகர்க்கும் பா.ஜ.க

5 thoughts on “‘தமிழர் பண்பாடு’ தகர்ந்தது தடை

 1. தீக்குளிப்பு, தடியடி,கைது: 4 நாள் போராட்டத்திற்குப் பின்னும் தலித் முதியவரின் பிணத்தை பொதுப் பாதையில் அனுமதிக்கவில்லை!

  மயிலாடுதுறை அருகேயுள்ள “திருநாள் கொண்டச்சேரி காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த 100 வயது முதியவர் செல்லமுத்து கடந்த 3–ம் தேதி மரணமடைந்தார். மழை காரணாமாக, தலித் மக்களின் சுடுகாட்டுக்கு செல்லும் வழக்கமான பாதை சரியில்லாததால், பொது பாதை வழியாக, உடலை எடுத்து செல்ல கோரிக்கை விடுத்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

  மனுவை கடந்த 4–ம் தேதி விசாரித்த நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ், முதியவரின் உடலை பொதுப் பாதையில் எடுத்து செல்ல அனுமதி வழங்கினார். இது குறித்து நடவடிக்கை மேற்கொள்ளவும், அறிக்கை தாக்கல் செய்யவும் நாகை மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறைக்கு உத்தரவிட்டார்.

  இதையடுத்து, நேற்று முன்தினம் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில், தலித் முதியவரின் உடலை பொதுப் பாதை வழியே எடுத்து செல்ல, சாதி இந்துக்கள் மறுத்ததை அடுத்து, பொக்லைன் இயந்திரம் மூலம் நேற்று புதிய பாதை அமைக்கப்பட்டது.
  ———————-

  பிணத்தை புதைப்பதற்குக்கூட உரிமை மறுக்கப்படும் தலித் மக்கள்: இதுவும் தமிழகத்தில்தான் நடக்கிறது!

  இதற்கிடையில், முதியவரின் உடலை புதிய பாதை வழியாக எடுத்துச் சென்று, அடக்கம் செய்யும்படி அதிகாரிகள் வலியுறுத்தியதை ஏற்க முடியாது என்றும் நீதிபதி பிறப்பித்த உத்தரவுப்படி பொதுவழிப்பாதை வழியாகவே எடுத்துச் செல்வோம் என்றும் முதியவரின் பேரன்கள் உறுதியாக தெரிவித்தனர்,

  இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி 40 பேர், தங்களது உடலில் மண் எண்ணெய் ஊற்றிக் கொண்டு, தற்கொலை செய்துகொள்வதாக அறிவித்தனர். தொடர்ந்து , பொதுப்பாதை வழியாக அவரின் உடலைக் கொண்டுசெல்ல முயன்றனர். இதையடுத்து போலீசார் அவர்கள் மீது தடியடி நடத்தி, கூட்டத்தைக் கலைத்தனர்.

  பின்னர், போலீசார் மற்றும் அலுவலர்கள், வழக்கமான பாதையிலேயே (தலித் மக்கள் செல்லும், மழையில் சேதமாகி இருந்த வழக்கமான பாதை ) முதியவர் செல்லமுத்துவின் உடலைக் கொண்டு சென்று, அடக்கம் செய்தனர். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த முதியவர் செல்லமுத்துவின் உறவினர்கள் 50 பேர் கைது செய்யப்பட்டனர்.
  ——————–

  இன இழிவு நீங்க, தலித் மக்கள் ஒட்டுமொத்தமாக இஸ்லாத்தை தழுவட்டும். வேறு வழி?.

 2. சகோதரி ஜெயலலிதா, மரணம் உன்னை தழுவும் முன் இஸ்லாத்தை தழுவு:

  “மன்னாதி மன்னரெல்லாம் நிரந்தரமாய் இருந்ததில்லை.
  மகத்தான முறையில் வாழ்ந்த மனிதரெல்லாம் நிலைத்ததில்லை
  பொன்னான செல்வரெல்லாம் நிரந்தரமாய் இருந்ததில்லை
  புகழோடு வாழ்ந்திருந்த பூமான்கள் நிலைத்ததில்லை.
  பூதலத்தின் இந்த நிலை புரிந்திடாமல் பிதற்றுகிறாய்”

  என இசைமுரசு நாகூர் ஹனீபா பாடுகிறார்.
  ————————–

  “கண்ணன் என் காதலன். நான் சொன்ன பேச்சை அவன் கேட்பான். என்னை யாராலும் அசைக்கமுடியாது” என சகோதரி ஜெயலலிதா நினைக்கிறார். இதற்கெல்லாம் மூலகாரணி எது?. ஹிந்து மதமே. ஹிந்து மதக்கடவுள்கள் காமசூத்திரா லீலையில் மும்முரமாக இருக்கும் போது, அவர்களால் எப்படி இவர்களை தண்டிக்கமுடியும்?.

  சகோதரியே, உனக்கு 70 வயதாகிவிட்டது. இன்னும் சில நாட்களில் உனது ஆட்டத்தை அல்லாஹ் முடித்துவிடுவான். உன்னோடு ஆடிப்பாடி கூத்தடித்த கதாநாயகர்கள் எங்கே?. உனது காதலன் எம்.ஜி.ஆர் எங்கே?. எல்லோரும் மண்ணோடு மண்ணாகிவிட்டனர். உனக்கும் அதே கதிதான். நீ செத்ததும், கங்கைக்கரையிலே உனது பொன்மேனியிலே நெய்யூற்றி ரோஸ்ட் செய்து அகோரி பார்ப்பனர் உண்பர். அப்பொழுது கங்கைக்கரை தோட்டத்திலே கன்னிப்பெண்கள் கூட்டத்திலே கொட்டமடிக்கும் உனது காதல் கடவுள் கண்ணன் கூட வரமாட்டான். உன்னைப்போன்ற வயதான பொம்மனாட்டிகள் அவனுக்கு இனி தேவையில்லை.

  வயோதிகம் உனது கண்களில் தெரிகிறது. முதுமை உன்னை ஆட்கொள்ள ஆரம்பித்துவிட்டது. நிலைக்கண்ணாடியில், உனது நிஜத்தை காண். உன்னை சுற்றி கழுகுகள் வட்டமடிக்க ஆரம்பித்துவிட்டன. நாளை நீ போனால், நீ சுருட்டிய சொத்தெல்லாம் மாயமாய் மறைந்துவிடும். அல்லாஹ்வின் கட்டளை வந்துவிட்டால், ஒரு நொடிப்பொழுது உன்னால் இவ்வுலகில் இருக்கமுடியுமா?. பத்து பைசா எடுத்துச்செல்ல முடியுமா?. சிந்தித்துப் பார்.

  சகோதரியே, பதவி, பணம், புகழென்று அனைத்தையும் சம்பாதித்து விட்டாய். ஆனால், இந்த உலகவாழ்க்கை நிரந்தரமல்ல. எந்த நேரத்தில் அவனுடைய அழைப்பு வரும் என்பது யாருக்கும் தெரியாது. அப்பொழுது உன்னால் உன்னுடைய உதிர்ந்த ரோமத்தைக்கூட எடுத்துச் செல்லமுடியாது. அனைத்தையும் விட்டுவிட்டு வெறுங்கையோடு அவனிடம் செல்ல வேண்டும். வெறுங்கையோடு வந்தாய், வெறுங்கையோடு செல்வாய்.

  சகோதரியே, அல்லாஹ்வின் மரணதூதர் வரும்முன் திருக்குரானை எடு. அல்லாஹ்வின் கேள்வி கணக்கிலிருந்து நீ தப்பமுடியாது. கொள்ளையடித்த மக்கள் சொத்தை மக்களிடம் திருப்பிக்கொடு. கண்ணியமாக புர்கா அணிந்து ஹஜ்ஜுக்கு செல். மண்டையை போடும் முன் மறு உலக வாழ்க்கைக்கு உன்னை தயார்படுத்திக் கொள்.

 3. தமிழரிடையே சகோதரத்துவம் சமத்துவத்துத்தை வளர்க்கும் ஜல்லிக்கட்டு — தினமலர்:

  சின்னமனூர்: தேனி மாவட்டத்தில் தைப்பொங்கலையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி நடத்தும் அய்யம்பட்டி, பல்லவராயன்பட்டி கிராம மக்களிடையே இரண்டு கேள்விகள் எழுந்துள்ளன. ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு அவசர சட்டம் பிறப்பித்தால் இந்தாண்டு போட்டி நடத்துவதற்கான ஏற்பாடுகளை எவ்வாறு விரைந்து செய்வது, மறுக்கும் பட்சத்தில் பாரம்பரியமான வீர விளையாட்டை பாதுகாக்க என்ன மாதிரியான நடவடிக்கைகள் மேற்கொள்வது என்பதுதான் அவை.

  ஜல்லிக்கட்டு தமிழர்களின் உணர்வோடு ஒன்றிய வீர விளையாட்டு. விவசாயத்தை முழுமையாக நம்பியுள்ள கிராமங்களில் “காவல் தெய்வங்களின்’ வழிபாட்டில் முக்கிய பங்கு வகிப்பதாகும். போட்டியில் கலந்து கொள்ள வரும் காளை வளர்ப்பவர்கள், மாடு பிடிப்பவர்களை தங்களின் ராஜ உபசாரத்தால், கிராம மக்கள் மெய்சிலிர்க்க வைப்பார்கள். ஜாதி, மதங்கள் கடந்து ஒற்றுமையை நிலை நாட்டும் திருவிழாவாக இது நடத்தப்படுகிறது. பார்வையாளர்களுக்கு சாதாரணமாக தெரியும் ஜல்லிக்கட்டில், களத்தில் சீறும் காளைகளை அடக்க தேவையான மன உறுதியையும், உடல் வலிமையையும் பராமரிக்க வேண்டியது மாடு பிடிப்பவர்களின் கடமையாகும். “வாடி வாசலில்’ இருந்து வெளியேறி பிடிபடாமல், வாலிப காளைகளுக்கு “தண்ணி’ காட்டும் மாடுகளை வளர்ப்பதும் ஒரு கலை தான். கிராமங்களில் ஜல்லிக்கட்டு மாடு வளர்ப்பதை கவுரவமாக நினைக்கின்றனர்.
  —————————–

  பெண்களின் காவலன் :உரிமையாளரின் தோட்டங்களில் சுதந்திரமாக மேய்ந்து திரியும் ஜல்லிக்கட்டு மாடுகள், அங்கு உள்ள பெண்களின் பாதுகாவலனாகவும் இருக்கிறது. வீட்டில் செல்ல குழந்தைகளை பராமரிப்பது போல பாசம் காட்டுகின்றனர். சத்தான உணவு, நீச்சல், நடை, மண் குத்தும் பயிற்சி என போர் வீரனுக்கு உண்டான அனைத்து வழிமுறைகளும் பின்பற்றப்படுகின்றன. இன்னாருடைய மாடு பிடிபடவில்லை என “மைக்’கில் அறிவிக்கப்படும் ஒற்றை வார்த்தைக்காக தங்கள் வாழ்க்கையை மாடு வளர்ப்பதில் அர்ப்பணிக்கின்றனர். இத்தகைய சிறப்பு வாய்ந்த ஜல்லிக்கட்டிற்கு <உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளதால் இக்கிராம மக்கள் வருத்தத்தில் உள்ளனர்.
  ———————————

  ஜல்லிக்கட்டு நடக்கும்:ரா.கிருஷ்ணன், அய்யம்பட்டி ஊராட்சி தலைவர்:

  தை பொங்கலையொட்டி நூறு ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு, தடை காரணமாக கடந்தாண்டு நடைபெறவில்லை. மத்திய, மாநில அரசுகள் காட்டும் ஆர்வத்தால் இந்தாண்டு ஜல்லிக்கட்டு நடக்கும் என்ற எண்ணம் மேலோங்கியுள்ளது. குல தெய்வங்களான ஏழை காத்தம்மன், வல்லடிகார சுவாமி கோயில் திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டு நடத்தப்படும். இதனால் பயிர்கள் செழிப்பாக வளர்ந்து, நல்ல வருவாய் விவசாயிகளுக்கு கிடைக்கும் என்பது ஐதீகம். கடந்தாண்டு ஜல்லிக்கட்டு நடத்தாததால் விவசாயம் பொய்த்து போய் வருவாய் இழப்பு ஏற்பட்டது. தெய்வ குத்தம் நேராமலிருக்க ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என கோரிக்கை வைக்கிறோம். குடும்ப உறுப்பினர்கள் போல பரிவுடன் வளர்க்கப்படும் மாடுகளை, துன்புறுத்துவதாக கூறுவது வேடிக்கையாக உள்ளது. வழக்கம் போல ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரி, மாவட்ட நிர்வாகத்திடம் மனு கொடுக்க உள்ளோம்.
  ———————————-

  மாணவர்களைப்போல பயிற்சி:ராஜ்கபூர், ஜல்லிக்கட்டு மாடு வளர்ப்பவர், கோட்டூர்:

  தந்தை பொன்னுச்சாமி ஜல்லிக்கட்டு மாடு வளர்ப்பதில் தேர்ச்சி பெற்றவர். தொழுமாடுகளிலிருந்து "சுழி' பார்த்து ஜல்லிக்கட்டு மாடுகள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கும் மாணவர்களுக்கு அளிக்கப்படுவது போன்று, கடினமான பயிற்சிகள் மாடுகளுக்கு அளிக்கப்படுகிறது. இப்பயிற்சியால் பல்வேறு மாவட்டங்களில் நடந்த போட்டிகளில் எங்கள் வளர்ப்பு மாடுகள் பிடிபடாமல், ஏராளமான பரிசுகளை குவித்துள்ளன. வாடி வாசலில் அவிழ்த்து விடப்படும் எங்கள் கருங்காளை நின்று, நிதானமாக வெளியேறி பிடிக்க நிற்பவர்களை சீற்றத்தால் அச்சமூட்டும். பிடிப்பதற்கு நிற்கும் காளையர்கள் கூட்டத்தில் புகுந்து வெளியேறி, மீண்டும் வாடி வாசல் அருகே வந்து "விளையாட்டு' காட்டுவதால் "பிறவாடி காளை' என பெயரெடுத்துள்ளது. இந்த காளையை அவிழ்த்து விடும் போது விலையுயர்ந்த பரிசை போட்டி நடத்துபவர்கள் அறிவிப்பார்கள். அந்த பரிசுகள் அனைத்தும் எங்களுக்கே கிடைத்து வருகிறது.
  —————————————

  சமத்துவத்தை ஏற்படுத்தும் போட்டி:முத்துப்பாண்டி, மாடு பிடிப்பவர், அய்யம்பட்டி:

  உடல் வலிமையை மட்டும் வைத்து காளைகளை அடக்க முடியாது. கவனம் சிதறாத நுணுக்கம் மிக அவசியம். பயிற்சி மூலம் மாடு பிடிக்கும் கலை வசமாகிறது. மாடு பிடிக்கும் பயிற்சி மேற்கொள்ளும் இளைஞர்கள் நல் வழிபடுகின்றனர். போதையின் பாதையில் செல்லாதவர்களும், புகைக்காதவர்களுமே களத்தில் வெற்றி காண முடியும். மாடு பிடிப்பதற்காக மேற்கொள்ளப்படும் ஓட்டம், மூச்சு பயிற்சியால் உடல் ஆரோக்கியம் மேம்படுகிறது. வெளி மாவட்டங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டில் கலந்து கொள்வதால் ஜாதி, மத வித்யாசமில்லாமல் சகஜமாக அனைவரும் பழகும் சூழல் ஏற்படு கிறது. போட்டி நடக்கும் கிராம மக்கள் வெளியூரிலிருந்து வருபவர்களுக்கு உணவு, குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை பாரபட்சமின்றி வழங்குவதால் நட்புறவு ஏற்படு கிறது.

  சமத்துவத்தை ஏற்படுத்தும் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 4. ஜல்லிக்கட்டு தமிழர்களின் கலாச்சாரம் காக்க போராடினால் நானும் வருவேன் — மதுரையிலிருந்து தருண் விஜய்:

  மதுரை: தமிழ் கலாசாரத்தோடு ஒன்றியுள்ள ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க வேண்டும் என்று பாஜக மாநிலங்களவை உறுப்பினர் தருண் விஜய் தெரிவித்தார்.

  இதுகுறித்து மதுரையில் பேசிய அவர், “திருவள்ளுவருக்கு உரிய அங்கீகாரத்தை பெற்றுத் தருவதற்காக திருக்குறள் திருப்பயணத்தை மேற்கொண்டுள்ளேன். மக்களின் அமைதியான வாழ்க்கைக்கும், ஜாதி, மத பேதமற்ற ஒற்றுமைக்கும் உலகிற்கே திருவள்ளுவர் வழிகாட்டியுள்ளார்.

  அவருக்கு நாடாளுமன்றத்தில் திருவுருவச்சிலை நிறுவச் செய்வதுதான் எனது முதல் வேலை. அதற்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கிறேன். இதற்கு தமிழக மக்களும், தமிழறிஞர்களும், ஆர்வலர்களும் எனக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.

  தமிழ் கலாசாரத்தோடு ஒன்றியுள்ள ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க வேண்டும். இதைக் காக்கவும், நடத்தவும் தமிழர்கள் ஒன்றிணைய வேண்டும். ஒன்றாக போராட வேண்டும். இதற்காக போராட்டம் நடத்தினால் அதற்கு எனது முழு ஆதரவை தெரிவிப்பேன்” என்றார்.

 5. ஜல்லிக்கட்டு: இந்து – ஆணாதிக்க – ஜாதி ஆதிக்கப் பண்பாட்டுவிழா – அதி அசுரன்:

  ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் தடைவிதித்த உடனே தமிழ்நாட்டில் பல இயக்கங்கள், அமைப்புகள், அரசியல்கட்சிகள் கடுமையான எதிர்ப்பைப் பதிவுசெய்தன. இப்போது ஜல்லிக்கட்டுப் பருவம் என்பதால் மீண்டும் அடுத்த சுற்று எதிர்ப்புகள் வரத்தொடங்கியுள்ளன. இந்த ஜல்லிக்கட்டு ஆதரவுக்குழுவில் எச். ராஜா, சுப்பிரமணியசாமி வகையறாக்கள் புதிதாகச் சேர்ந்திக்கிறார்கள். பார்ப்பனப் பண்பாட்டு ஆதிக்கத்துக்கு எந்தச் சிக்கலும் வைக்காத இந்த ஜல்லிக்கட்டை அவர்களும் ஆதரிப்பதில் வியப்பில்லை. நேற்றுவரை தமிழர் பண்பாட்டின் அடையாளமாக காட்டப்பட்ட ஜல்லிக்கட்டு அண்மையில் இந்துமத அடையாளமாகவும் சரியாக அடையாளம் காட்டப்பட்டுள்ளது.
  ———————————-

  தோழர் சீமான் ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்கக்கோரி விடுத்த அறிக்கையில்:

  “ஜல்லிக்கட்டு தமிழர்களின் பாரம்பர்ய வீர விளையாட்டு. காலம் காலமாகத் தமிழர்களின் வீர அடையாளமாகவும் பண்பாட்டுச் சிறப்பாகவும் விளங்கும் ஜல்லிக்கட்டு விளையாட்டை ஒரு சில காரணங்களைச் சொல்லி நடத்த விடாமல் தடுப்பது தமிழர்களின் உணர்வுகளைச் சீண்டிப்பார்க்கும் செயல். எங்கள் பாட்டன் சிவபெருமான் வழிபாட்டிலேயே மாடுகளைத்தான் தெய்வமாகக் கொண்டாடுகிறோம். நந்தியை வணங்கிய பிறகே சிவனை வழிபடும் வழக்கம் கொண்டவர்கள் தமிழர்கள். ஒரு மாட்டின் கதறலுக்காக சொந்த மகனையே தேர்க்காலில் இட்டுக் கொன்ற மனுநீதிச் சோழனின் வம்சாவழியான தமிழர்கள் மாடுகளை தங்கள் குடும்பங்களின் ஓர் அங்கமாகக் கொண்டாடி வருகிறார்கள்” என்று கூறியுள்ளார்.
  ——————

  ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் சிவபெருமான் எப்போது பாட்டன் ஆனாரோ தெரியவில்லை. தனது கோவிலிலேயே தன்னை வழிபடவே தமிழைப் பயன்படுத்த வைக்காத சிவன் எப்படி தமிழர்களுக்குப் பாட்டன் ஆவான்? அதுகிடக்கட்டும். நந்தி வழிபாடு என்பது பிரதோஷ விரதம் அனுசரிப்பதுதான். கடந்த சில ஆண்டுகளாக இந்த பிரதோஷம் விரதம் என்பது பெண்களிடையே பிரபலமாகிவருகிறது.

  சிவனுக்கு உரிய விரதங்களில் முக்கியமானது இவ்விரதம். இவ்விரதத்தைக் கடைபிடிப்போர் அதிகாலையில் எழுந்து நீராடி, அன்று முழுதும் உண்ணாவிரதம் இருந்து, மாலை பிரதோஷ நேரத்தில் சிவாலயம் சென்று உள்ளம் உருகி ஓம் நமச்சிவாய என ஓதி வழிபடவேண்டும். நந்தியின் ( மாட்டின் ) இரு கொம்புகளுக்கிடையே நின்று சிவனைக் கண்டு வணங்க வேண்டும். நமது வேண்டுதல்களை நந்தியின் காதில் கூற, நமது வேண்டுதல் நிறைவேறும்.

  இந்த நந்திவழிபாடு என்பது தமிழ்நாட்டில் மட்டும் நடப்பது இல்லை. தமிழர்கள் மட்டும் கடைபிடிப்பதில்லை. இந்து மதம் உள்ள அனைத்து நாடுகளிலும், இந்தியாவில் உள்ள பல தேசிய இனங்களைச் சார்ந்த இந்துக்களிடையேயும் உள்ள இந்து வழிபாட்டு முறை.

  அதுபோல, தமிழர்களை சூத்திரர்களாக, விபச்சாரி மக்களாக, சட்டப்படியும், இன்றளவிலும் வைத்திருப்பது மனுசாஸ்திரம். அந்த மனுசாஸ்திரத்தைச் சரியாகச் செயல்படுத்தியவன் மனுநீதிச்சோழன். தமிழர்களின் முன்னேற்றத்துக்குத் தடையான மனுஅநீதிச் சோழனின் செயலை தமிழர்களின் பண்பாட்டு அடையாளமாகக் காட்டும் போக்கு ஆர்.எஸ்.எஸ் சின் அணுகுமுறையாகும். திருக்குறளைப் பாராட்டும் தருண்விஜயின் செயலைப்போன்றது இது. இந்த இந்து வழிபாட்டு முறையையும், பார்ப்பன ஆதிக்கத்துக்கு அடிப்படையான மனுசாஸ்திரப் பண்பாட்டையும், தமிழர் பண்பாடாகச் சித்தரிக்கும் தோழர் சீமானின் அறிக்கை கடும் கண்டனத்துக்கு உரியதாகும்.
  ———————————

  இந்துப்பண்பாட்டு அடிப்படையில் எது உருவானாலும் அதில் ஜாதியும் முக்கியப் பங்கு வகிக்கும் என்பதில் யாருக்கும் அய்யமிருக்காது. இந்த ஜல்லிக்கட்டிலும் தாழ்த்தப்பட்டவர்கள் பங்கேற்க முடியாது. அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டில் பறையடிக்கும் உரிமை மட்டுமே தாழ்த்தப்பட்டோருக்கு உண்டு. தாழ்த்தப்பட்டவர்களும் தனியாக ஜல்லிக்கட்டு நடத்துகின்றனர். தனிக் கிணறு, தனி சேரி என்பது போல அவர்கள் தனியாக நடத்திக்கொள்ளலாம். ஆனால் ஒரு பிற்படுத்தப்பட்டவரின் மாட்டை தாழ்த்தப்பட்டவர்கள் அடக்க அனுமதிப்பதில்லை. ஒன்றிரண்டு தவறிப்போய் அப்படி நடந்துவிட்டாலும், அடக்கும் அந்த தலித் எவ்வித அடையாளமும் இன்றிக் கொல்லப்படுவான்.
  —————————

  இந்தியாவின் மிக முக்கிய அரசியல் தலைவர்கள் உருவாகும் புதுடில்லி ஜவஹர்லால்நேரு பல்கலைக்கழகம், டில்லிப் பல்கலைக்கழகம், அலிகார், பிட்ஸ் பிலானி போன்ற எவற்றிலும் தமிழர்களுக்கு, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அனுமதி கிடையாது. அனைத்தும் இராஜராஜசோழன் உருவாக்கிய வேத பாடசாலை களைப் போலவே பார்ப்பான் பண்ணையமாக இருக்கின்றன.

  2000 ஆண்டுகளுக்கு முன்பு முல்லைநிலத்து தமிழர்கள் வாழ்வதற்கு மாடுகள் தேவை, மாடுகளை அடக்குவதும் தேவையாக இருந்திருக்கலாம். இன்று ஒட்டு மொத்தத் தமிழனும் உயர்வதற்கு ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம், எய்ம்ஸ், என்.ஐ.டி போன்ற நிறுவனங்களே தேவை. மாட்டின் கொம்புகளைவிட பார்ப்பானின் உச்சிக்குடுமி மயிர்களுக்கு பலம் அதிகமாக இருக்கும் காலம் இது. மாடுபிடிக்கப் போராடுவதை விட்டுவிட்டு மேற்கண்ட கல்விநிறுவனங்களில் இடஒதுக்கீடு கிடைக்கப்போராடுங்கள். எதிர்காலத் தமிழன் ஏற்றமுடன் வாழ்வான்.
  — அதி அசுரன் atthamarai @gmail com

Leave a Reply

%d bloggers like this: