‘புரட்சியாளர் அம்பேத்கர் ஏன் புத்த மதம் மாறினார்?’

DSC_0011

DSC_0013

தொடர்புக்கு 87546 30363

*
“பிரியாணி மொகலாயர் உணவு. இந்துக்கள் சாப்பிடாதீங்க ன்னு சொன்னால், இந்து மதமே வேணான்னு மதம் மாறிவிடுவார்கள்”
உணவு, திருமணம், மதம், பெண்ணியம், மொழி, உணவு, விளையாட்டு என்று பல தளங்களில் பேசியிருக்கிறோம்.

‘தமிழர் பண்பாடு’ நேற்று பரவலாகப் பலராலும் வரவேற்கப்பட்டது. இன்று மறுஒளிபரப்பு, மாலை 3 மணிக்கு. news7 tamil சேனலில். -வே. மதிமாறன்.

10 thoughts on “‘புரட்சியாளர் அம்பேத்கர் ஏன் புத்த மதம் மாறினார்?’

 1. https://drambedkarbooks.files.wordpress.com/2015/01/jinnah-periyar-and-ambedkar.jpg?w=800

  புரட்சியாளர் அம்பேத்கர் ஏன் புத்த மதம் மாறினார்?:

  “இட ஒதுக்கீடு தராவிட்டால், ஒட்டுமொத்தமாக இஸ்லாத்தை தழுவிவிடுவோம்” என காந்தியை பயமுறுத்தி 1932ல் பூனா ஒப்பந்தம் மூலம் தலித்துக்களுக்கான இட ஒதுக்கீட்டை அம்பேத்கர் வென்றார். அதற்கு பகிரமாக “நான் இஸ்லாத்தை தழுவமாட்டேன்” என பூனா ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.

  ஆக பார்ப்பனீயத்தை மண்டியிட வைத்தது இஸ்லாம்தான் என்றால் மிகையாகாது.
  ————————–

  ஆனால், “இப்படி தலித்துக்களை ஒட்டுமொத்தமாக ஜாதிவாரிய இட ஒதுக்கீடு எனும் பாதாளசாக்கடையில் அடைத்துவிட்டேனே. இனி எந்த ஜென்மத்தில் இவர்கள் வர்ணதர்ம ஜாதிசாக்கடையை விட்டு வெளியேறுவர்?” எனும் குற்ற உணர்வு அம்பேத்கருக்கு இருந்தது.

  1940ல் தந்தை பெரியாரும் அண்ணாத்துரையும் திராவிட நாடு பற்றி ஆலோசிக்க பாரிஸ்டர் ஜின்னாவை சந்தித்தனர். அப்பொழுது அம்பேத்கரும் அவர்களுடன் சென்று இஸ்லாத்தை தழுவுவது பற்றி ஜின்னாவின் ஆலோசனையை கேட்டார்.
  ——————-

  ஜின்னா: எதற்காக இஸ்லாத்தை தழுவுகிறீர்?

  அம்பேத்கர்: சூத்திரன் எனும் இன இழிவு நீங்க. வறுமை ஒழிய.

  ஜின்னா: இஸ்லாத்தை தழுவினால் உங்களுடைய இன இழிவு நீங்கும், சமத்துவம் கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் வறுமை ஒழியுமென யார் சொன்னது?.

  அம்பேத்கர்: ??????

  ஜின்னா: 800 வருடங்கள் இந்தியாவை ஆட்சி செய்தும் முஸ்லிம்களின் வறுமை ஒழியவில்லை. இஸ்லாத்துக்கு வந்த ஏழைகள் எல்லாம் எழையாகத்தான் இருக்கின்றனர். ஆனால் நிலங்களும் பொருளாதாரமும் ஆதிக்கஜாதியின் கட்டுப்பாட்டில் அப்படியே இருக்கிறது. பாபரும் அவ்ரங்சீப்பும் சாதிக்கமுடியாததை உங்களால் சாதிக்கமுடியுமா?.

  அம்பேத்கர்: ??????

  ஜின்னா: உங்களுக்கு இன்றைய உடனடி தேவை வறுமை ஒழிப்பும், பொருளாதார மேம்பாட்டும். அதற்கு உங்களுடைய ஜாதிவாரிய இடஒதுக்கீடு வழிவகுக்கிறது. இது தவிர, நீங்கள் சான்றிதழில் ஹிந்து தலித்தாக இருந்துகொண்டே கிருத்துவத்தை தழுவினால், உங்களுக்கு சர்ச்சின் முழு ஆதரவும் மிகப்பெரிய கிருத்துவ வல்லரசுகளின் ஆதரவும் கிட்டும். இஸ்லாத்தில் இதெல்லாம் நடக்குமா என்பது சந்தேகமே. இனி முடிவு உங்கள் கையில்.
  ————————

  ஜின்னாவை அம்பேத்கர் சந்தித்ததை கேள்விப்பட்ட காந்தி அலறியடித்துக் கொண்டு ஜின்னாவிடம் ஓடி வந்து விசாரித்தார்.

  காந்தி: ஜின்னா சாஹப், அந்த சூத்திரன் ஏனிங்கு வந்தான்?. என்ன சொன்னான்?

  ஜின்னா: அவர் தலித்துக்கள் ஒட்டுமொத்தமாக இஸ்லாத்தை தழுவுவது பற்றி எனது ஆலோசனையை கேட்டார்.

  காந்தி: ராம் ராம்.. அப்படியா… நீங்கள் என்ன சொன்னீர்?

  ஜின்னா: (நடந்ததை ஜின்னா விவரிக்கிறார்)

  காந்தி: ஹாய் அல்லா … ஜின்னா சாஹப், நீங்கள் எங்களுடைய ஹிந்து ராஷ்டிரத்தை காப்பாற்றிவிட்டீர். மிக்க நன்றி.

  ஜின்னா: இப்போதைக்கு உஙளுடைய ஹிந்து ராஷ்டிரத்தை காப்பாற்றிவிட்டேன். ஆனால் அம்பேத்கர் நான் சொன்னதை முழுமையாக ஏற்றதாக எனக்குப் படவில்லை. அவர் மற்ற இஸ்லாமிய தலைவர்களையும் சந்தித்து பேசுகிறார். தலித்துக்கள் ஒட்டுமொத்தமாக இஸ்லாத்தை தழுவினால் இந்தியா இஸ்லாமிஸ்தானாகிவிடும். உங்களுடைய ஹிந்துமதம் அட்ரஸ் இல்லாமல் போய்விடும். என்ன செய்வதாக உத்தேசம்?

  காந்தி: ஹாய் ராம்… ஜின்னா சாஹப், அந்த சூத்திரன் நிச்சயமாக செய்வான். எனக்கு அவனைப் பற்றி நன்றாகத் தெரியும். எங்களுடைய ஹிந்து தர்மத்தை காப்பாற்ற நாங்கள் என்ன செய்யவேண்டும்?. தயவு செய்து எங்களுக்கு ஒரு வழி காட்டுங்கள்.

  ஜின்னா: உங்களுடைய ஹிந்து மதத்தை காப்பாற்ற ஒரே வழி “இந்தியா பாக்கிஸ்தான்” பிரிவினை. முஸ்லிம்கள் இருக்கும் வரை, உங்களால் நிம்மதியாக வாழமுடியாது. தலித்துக்கள் இஸ்லாத்தை தழுவிவிட்டால், இந்தியா இஸ்லாமிஸ்தானாகிவிடும். காலந்தாழ்த்தாமல், பிரிட்டீஷ் மஹாராணியிடம் “இந்தியா பாக்கிஸ்தான்” பிரிவினைக்கான உங்களுடைய ஒப்புதலை தாருங்கள். உங்களுக்கு உங்கள் வழி, எங்களுக்கு எங்கள் வழி.
  ———————

  அம்பேத்கருக்கும் காந்திக்கும் ஜின்னா சொன்ன ஆலோசனையை கேள்விப்பட்ட விக்டோரியா மஹாராணி, மிக்க மகிழ்ந்து அவரை உடனடியாக பக்கிங்ஹாம் அரண்மணைக்கு அழைத்து ஆரத்தழுவி “பாக்கிஸ்தானுக்கான ஏற்பாடுகளை செய்யுங்கள். 5 வருடங்களில் உங்களுக்கு பாக்கிஸ்தான் கிடைக்கும்” என உறுதியளித்தார்.

  ஒரே சமயத்தில், கத்தோலிக்க வாட்டிகனையும் ஹிந்துத்வா RSS தலைவர்களையும் சந்தோஷப்படுத்தி கால் மேல் கால் போட்டுக்கொண்டு சுருட்டை ஊதிய வண்ணம் பாக்கிஸ்தானை உருவாக்கிய ஜின்னா எனும் மாமேதையை பாராட்ட வார்த்தைகளில்லை.

 2. https://www.youtube.com/watch?v=ysupFXHpP0s

  புரட்சியாளர் அம்பேத்கர் ஏன் புத்த மதம் மாறினார்?::

  ஆயிரம் காலம் அடிமையென்றாயே
  ஹரிசனன்னு பேரு வக்க யாரடா நாயே
  ஹரிசனன்னு பேரு வக்க யாரடா நாயே

  காடு கழனிக சொல்லும் எம்பேர
  சொல்லும் எம் பேர
  ஆறு கொளங்களும் சொல்லும் எம்பேர
  சொல்லும் எம் பேர
  சேறு வடிந்த அந்த ஏரு சொல்லும் எம்பேர
  ஏரு சொல்லும் எம் பேர
  தாவிக்குதிக்கும் கெண்ட மீன கேளு எம்பேர
  மீன கேளு எம்பேர
  எனக்கு நீ பேரு வக்க யாரடா நாயே

  கீத்தெல்லாம் மாத்திப்புட்டு கார வூடு கட்டி தந்தேன்
  கார வூடு கட்டி தந்தேன்
  எங்க காத்து கூட ஆகாதுனு ஊர உட்டே தள்ளி வச்சே
  ஊர உட்டே தள்ளி வச்சே
  சேரிக்கெல்லாம் பேர மாத்தி காலனி ஆக்கிப்புட்டே
  காலனி ஆக்கிப்புட்டே
  கேணி சுடுகாட்டுக்கு பாத தனியாக்கிட்டே
  பாத தனியாக்கிட்டே
  எங்க பேரையும் மாத்தி வக்க
  யாரட நாயே

  அக்கிரகாரமின்னும் சேரினும் வச்சதாரு
  சேரினும் வச்சதாரு
  ஆகம வேதம் கட்ட சாத்திரம் வகுத்ததாரு
  சாத்திரம் வகுத்ததாரு
  தொட்டாலே தீட்டுன்னு கட்டி உரித்ததாரு
  கட்டி உரித்ததாரு
  தட்டிகேட்ட எங்கள கட்டி உரித்ததாரு
  கட்டி உரித்ததாரு
  உங்க அரி செஞ்ச வேலதாண்டா ஆர்.எஸ்.எஸ். நாயே

  அயோத்தி ராமனுக்கு ஆலயம் கட்டனுன்னு
  ஆலயம் கட்டனுன்னு
  அரியின் ஜனங்களெல்லாம் ஆயோத்தி வரச்சொன்ன
  ஆயோத்தி வரச்சொன்ன
  அய்யய்யோ தீயில் வெந்த பெண்மணிக்கு யாரும் வல்ல
  பெண்மணிக்கு யாரும்வல்ல
  அந்த அரிராமன் சேரி பக்கம் எட்டிகூட பாத்ததில்ல
  எட்டிகூட பாத்ததில்ல
  அந்த அரிக்கு நான் மகனாடா அயோக்கிய நாயே

  ஆயிரம் காலம் அடிமையென்றாயே
  ஹரிசனன்னு பேரு வக்க யாரடா நாயே
  ஹரிசனன்னு பேரு வக்க யாரடா நாயே … ஏஏய்.
  —————————-

  இனி இழிவு நீங்க இஸ்லாமே தீர்வு என தந்தை பெரியார் உரைத்தார். ஜாதி இருந்தால்தான் ஹிந்து. இல்லாதவன் ஹிந்து அல்ல. பௌத்தத்திலும் கிருத்துவத்திலும் ஜாதி அப்படியே இருக்கிறது.

  ஜாதியை ஒழிக்க இஸ்லாத்தை விட்டால் வேறு வழியே கிடையாது. இன்று தமிழகம் இஸ்லாத்தை நோக்கி நகர்கிறது. தமிழகம் முஹம்மத் பட்டினமாக மாறும் நாள் நெருங்குகிறது. எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே.

 3. http://www.navayan.com/img/public/gallery/354-babasaheb-ambedkar_big.jpg

  வாழ்நாள் முழுதும் பார்ப்பனரை எதிர்த்த அம்பேத்கரே சவீதா எனும் ப்ராமின் டாக்டரைத்தான் இரண்டாவது மணைவியாக மணந்தார். ஒரு விதத்தில், அம்பேத்கர் பார்ப்பனரின் மாயவலையில் வீழ்ந்து விட்டாரென்பதை மறுக்கமுடியாது. அம்பேத்கர் இஸ்லாத்தை தழுவாமல் பௌத்தத்தை தழுவியமைக்கு முதல் காரணம் பாக்கிஸ்தான். தலித்துக்கள் இஸ்லாத்தை தழுவினால், இந்தியா இஸ்லாமிஸ்தானாகிவிடும் என பயந்தார்.

  சிலைவணக்கத்தை பெரியார் எதிர்த்தார், சிலைகளை உடைத்தார். “ஹிந்து மதத்தை ஒழித்தால்தான் ஜாதி ஒழியும், சமத்துவம் வரும்” எனும் கருத்தில் அம்பேத்கருக்கும், பெரியாருக்கும் எந்த வித்தியாசமுமில்லை. இதைத்தான் திருக்குரானும் 1400 வருடங்களாக சொல்கிறது. அம்பேத்கரும் பெரியாரும் ஹிந்து மதத்தின் எதிரிகள். ஆகையால் அவர்கள் இஸ்லாமியரின் நன்பர்கள். அம்பேத்கர் பெரியார் இயக்கத்தினர் அனைவரும் இஸ்லாமியரின் சகோதரர்கள்.

  “நான் ஹிந்துவாக பிறந்துவிட்டேன். ஆனால் ஹிந்துவாக சாகமாட்டேன்” என சபதமெடுத்து அம்பேத்கர் இலங்கையில் ஒரு லட்சம் தலித்துக்களோடு புத்த மதத்தை தழுவினார். ஆனால், அவரால் பார்ப்பனியத்தை ஒழிக்கமுடிந்ததா?. புத்தரையும் பௌத்த மதத்தையும் பார்ப்பனீயம் முழுங்கிவிட்டதென்றால் மிகையாகாது.

  இந்தியா, சீனா, இலங்கை, தாய்லாந்து, வியட்நாம் ஆகிய நாடுகளில் பௌத்த மடங்களனைத்தும் உயர்ஜாதி புத்தபிட்சுகளின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. அதே உயர்ஜாதி கீழ்ச்சாதி வேற்றுமைகள் பௌத்தத்தில் தலைவிரித்தாடுகிறது. தலித்துக்கள் பௌத்தத்தை தழுவினால், அங்கேயும் அதே தாழ்ந்த ஜாதி முத்திரையுடன்தான் நடத்தப்படுவர் என்பது கண்கூடு.

  இது தவிர, “ஹிந்து தலித்துக்களுக்கு இட ஒதுக்கீடு, மதம் மாறினால் இட ஒதுக்கீடு கிடையாது” எனும் அல்வாவை ப்ராமின் பனியா ஆதிக்க கூட்டம் அம்பேத்கருக்கு கொடுத்தது. ஆனால், இன்று 60 வருடங்களாகியும் தலித்துக்களின் நிலையென்ன?. எத்துனை தலித்துக்கள் இட ஒதுக்கீட்டால் பயனடைந்தனரென்று சிந்தித்தால் உண்மை வெளிப்படும்.

  வேதனையின் உச்சகட்டம் என்னவென்றால், பயனடைந்த தலித்துக்களனைவருமே நவீன பார்ப்பனராகி விட்டனரென்பதுதான் கண்கூடு. ஆம். இன்று தலித்துக்களின் மிகப்பெரிய எதிரியே இந்த நவீன பார்ப்பனர்தான் என்றால் மிகையாகாது. இட ஒதுக்கீடு எனும் எலிப்பொறியில் மாட்டிக்கொண்டு எந்த ஜென்மத்திலும் தலித்துக்களுக்கு விடிவுகாலம் வரவே வராது.

  பார்ப்பனியத்துக்கெதிராக எத்தனையோ சிந்தனையாளர்கள் போராடியிருந்தாலும், பார்ப்பனியத்தை ஒட்டுமொத்தமாக அடக்கியது இஸ்லாம் ஒன்றே. “நான் ஹிந்து இல்லை, ஹிந்து இல்லை” என எவ்வளவு கதறினாலும் பாப்பான் அலட்டிக்கொள்ள மாட்டான். ஆனால் “நான் இஸ்லாத்தை தழுவப்போகிறேன்” என்று சொன்னால் அவனுக்கு கதிகலங்கிவிடும்.

  இந்தியா இஸ்லாமிஸ்தானாக மாறினால், 55 இஸ்லாமிய நாடுகளுக்கும் தலைவனாக உருவாகும். 130 கோடி மக்களுக்கு வறுமை ஒழிந்து அமைதி மலரும். அல்லாஹ் நாடினால், இன்ஷா அல்லாஹ் நடக்கும்.

 4. தலித் எனும் முகமூடி எதற்கு?. பறையனென்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா:

  முதலில் நம்மைப் பறையன்/பள்ளன்/சக்கிலியன்/இருளன்/குறவன் எனச் சொன்னால் ஏன் சிலருக்கு கோபம் வருகிறது? அது சாதி சார்ந்து இழிவான வார்த்தை என்பதைத் தீர்க்கமாக நம்புவதால்தானே இப்படியொரு உடனடி எதிர்ப்புணர்வு? ஆழ்மனதின் எந்தப் பகுதியை அந்தச் சொல் தீண்டுகிறது? குழந்தை முதல் அவர்களின் மனதில் இதை புகுத்தியது யார்?

  சாதி மீது இந்தச் சமூகம் கொண்டிருக்கும் அதீதமான நம்பிக்கையைப் பறையர்/பள்ளர்/சக்கிலியன்/குறவன் எனும் சொல் அசைத்துப் பார்ப்பதை முரணான ஒரு செயல்பாட்டின் மீது பதியும் நியாயமான எதிர்ப்பாகவே கருத முடிகிறது.

  சமூகத்தின் சரிபாதி மனிதர்கள் தன்னைப் பெருமையாக கவுண்டன் எனவும் முக்குலத்தோன் எனவும் தேவர் எனவும் சொல்லிக்கொள்வதில் ஆர்வம் காட்டும்போது, எப்படிப் பறையன் எனும் சொல் இப்படியொரு தீண்டத்தகாத அறுவறுக்கத்தக்க சொல்லாக மாறியது?

  உங்கள் முன் ஒருவன் வந்து நின்று தன்னை “பறையன்” “பள்ளன்” “சக்கிலியன்” “இருளன்” “குறவன்”எனச் சொல்லிக்கொண்டால் அவனை உங்களுக்கு (தமிழ் தேசியம், திராவிடம் பேசும் சூத்திர, ஷத்ரிய ஆதிக்க ஜாதிகளுக்கு) நிகரான சக மனிதனாகப் பாவிக்க மனமுண்டா?

  1. நடத்தைத் தவறி போகும் அனைவரையும் “இவன் (பறையன், பள்ளன்) அவந்தான்” என விமர்சிப்பது. பட்டண வாழ்க்கைக்கு இடம் பெயர்ந்தும் பெரியவர்களின் மனித அவதானிப்புகளில் இந்தப் பார்வை ஒரு வன்முறையான சொல்லாடல்களைக் கொண்டிருந்ததை நாம் மறுக்க முடியாது. தன்னால் வகுக்கப்பட்ட சமூக ஒழுக்கங்களை மீறும் யாவரையும் “ அந்தப் (பற, பள்ள எதாவது ஒன்றை சொல்லி )புத்திடா அவனுக்கு” என மிகவும் வெளிப்படையாக அடையாளப்படுத்தும் போக்கு இருந்து வந்திருக்கிறது. இங்கு அந்தச் சொல் யாரால் கொண்டு வரப்படுகிறது? கொண்டு வரப்பட்டதே இல்லை என யாராவது சொல்ல முடியுமா?

  2. முறையான பழக்க வழக்கங்களைப் பின்பற்றாதவர்களை (பறை, பள்ளு என்று குறிப்பிட்டு)“அவன்” எனச் சாடுவது. பிறர் வீட்டுக்குச் சென்றால், அங்கு அமர்வது முதல் சாப்பிடும்முறை வரை மிகவும் கூர்மையாகக் கவனிக்கப்பட்டு விமர்சிக்கப்படும் பண்பு நிலவி வந்திருக்கிறது. சோற்றைக் கீழே சிந்தி சாப்பிட்டதற்காகப் பலமுறை, “(சக்கிலி, குறபயல்) அவன் மாதிரி சாப்பிடாதடா” என விமர்சிக்கப்பட்ட எத்தனையோ சிறுவர்களைப் பார்த்திருக்கிறேன். சிறுவர்களின் மிக யதார்த்தமான பழக்க வழக்கங்கள் மீது சாதிய உணர்வுகளைத் திணித்தது யார்? அந்தக் காலத்திலேயே இதெல்லாம்தான் அந்தச் சொல்லுக்கு மிக நெருக்கமான பழக்க வழக்கங்களோ எனக் கற்பிக்கப்பட்டு வளர்க்கப்பட்ட குழந்தைகளின் மனதில் என்ன விடுதலை உணர்வு இருக்கப் போகிறது?

  3. திருமணம் சமயங்களில் அல்லது காதலித்துவிட்டவர்களிடம் இன்னமும் வாடிக்கையாகச் சடங்கு போல கேட்கப்படும் கேள்வி என்னவாக இருக்கிறது? நீங்க எந்த ஆளுங்க? சாதி எனும் சொல் மறைந்து கொஞ்சம் நாகரிகமாக “ஆளுங்க” எனும் சொல் உபயோகத்தில் உள்ளது. இந்த அளவிற்குத்தான் நம் சமூகம் கொஞ்சம் நகர்ந்துள்ளது. இதையே முற்போக்குத்தனம் எனச் சொல்லிக் கொண்டு பெருமை அடையலாமா? இன்னமும் நாளை நடக்கவிருக்கும் திருமணத்திற்குப் பின்னணியில் இம்மாதிரியான சாதியத்தை மீண்டும் மீண்டும் வெளிப்படுத்தும் கேள்விகள் கரையாமல் எழுந்த வண்ணமே இருக்கின்றன.

  4. நமக்கு வேண்டாதவர்களையும் பிடிக்காதவர்களையும் அவமானப்படுத்தும் பொருட்டு மற்ற மதத்தினர் முன்பே அவனை (பறையன்/பள்ளன்/சக்கிலியன்/இருளன்/குறவன்) அந்தச் சொற்க்களைப் பயன்படுத்தி அழைப்பதிலும் கூட, சாதிய பார்வை உருவாகியிருக்கிறது. ஆகையால் பள்ளியில் படித்தக் காலக்கட்டத்தில் வெறுப்பின் உச்சமுஹம்மத் அலி ஜின்னாத்திற்குப் போகும் மாணவர்கள் அந்தச் சொல்லைப் பயன்படுத்தி திட்டிக் கொள்வது முதல், அடுத்த மதத்தைச் சேர்ந்த மாணவர்கள் அதே சொல்லைப் பயன்படுத்தி நம்மை இழிவுப்படுத்திப் பேசுவதுவரை சாதியம் உக்கிரமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. (என் காது பட நடந்தது: ரெண்டு முஸ்லீம் நண்பர்கள், நான் என் தம்பிகள், என் தம்பிகளின் முஸ்லீம் நண்பர்கள் அனைவரும் தெருவில் சத்தம் போட்டு விளையாடும் போது என் முஸ்லீம் நண்பனின் தாய் “ஏண்டா இப்படி கொற (குற) கூட்டம் மாதிரி கத்தி கொண்டு இருக்கிறீர்கள்” என்று சொன்னார்களே எனக்கு ஒரு மாதிரி போய்விட்டது. ஜாதி பெயர் சொல்லி திட்டுவது அடுத்த மதத்தினரையும் தொற்றி கொண்டு விட்டதா என்று ) ஒட்டுமொத்தமாக மாணவர்களின் உளவியலில் அந்தச் சொல் கொடூரமான இழிவுப்படுத்தும் சொல்லாக மாறியுள்ளது.

  —— அறிவென்ற ஆயுதம் செய்வோம் எனும் வெப்சைட்டில் படித்தது.

 5. பறைச்சி எல்லாம் ரவிக்கைப் போட்டுக் கொண்டார்கள் என்று நான் பேசியதின் நோக்கம் என்ன? — பெரியார்.

  சாதி சம்பந்தமான காரியங்களில் நான் ரொம்ப முயற்சி எடுப்பவன். அதற்காகவே வாழ்வதாகக் கருதுபவன். பறையன் – சக்கிலி – வண்ணான் – பரியாரி என்பது அவமானமல்ல. தொழிலின் காரணமாக வந்தது. பார்ப்பான் தன்னை மேன்மைப்படுத்தி கொள்ளவும் நம்மை இழிசொல்லாக்கி விட்டான். ஆனால் நம் எல்லோரையும் சேர்த்து பார்ப்பான் தேவடியாள் மகன் என்று சொல்கின்றான். சொல்வது மட்டுமல்ல சாஸ்திரத்திலும் அப்படியே எழுதி இருக்கின்றான். சட்டத்திலே (இந்தியாவிலே) தாசிபுத்திரன் என்றே இருக்கிறது. அனுபவத்திலுமிருக்கிறது என்று சொன்னால் கோயிலுக்குப் போகிறவன் அத்தனை பேரும் தேவடியாள் மகன் தானே! இது அண்ணாதுரைக்கும் தான் ராஜா சர்ருக்கும் தான். வேறு பார்ப்பானல்லாத எல்லோருக்கும்தான்.

  பறையன் என்று சொல்லக்கூடாது என்று தான் சொன்னார்களே தவிர தண்ணீருக்கு எப்படி ஜலம் என்று சொல்கின்றானோ அதுபோல பார்ப்பான் காந்தியாரைப் பிடித்து பறையன் என்கிறதை நிலை நிறுத்துவதற்காக அரிஜன் என்று சொல்லி இன்னும் அதையே சொல்லிக் கொண்டிருக்கின்றான்.

  பறையன் என்று சொல்லக்கூடாது என்று ஆரம்பித்தவன் நான். காந்தியார் தீண்டாதவர்களுக்குத் கிணறு வெட்டுவதற்காகக் காந்தி திலக் நிதியிலிருந்து ரு. 55.000 அனுப்பினார். அப்போது நான் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித்தலைவன். நான் அதை இதற்காக செலவிடாமல் அப்படியே வைத்துவிட்டேன். மற்ற மாகாணக்காரர்கள் எல்லாம் செலவழித்து தாழ்த்தப்பட்ட மக்களுக்குத் தனியாகக கேணி கோயில் பள்ளிக்கூடம் கட்டினார்கள். நான் காந்தியாருக்கு எழுதினேன் நாம் அவர்களுக்கு இவை எல்லாம் தனியாகச் செய்து கொடுப்பதால் ஒருக்காலும் தீண்டாமை ஒழியாது. அதற்குப் பதில் பறையன் கோயில் பறையன் பள்ளிக்கூடம் என்று சொல்லி மக்கள் அதையும் ஒதுக்கிவைத்து விடுவார்கள். இதை நான் விரும்பவில்லை. நம் மக்கள் தண்ணீர் எடுக்க வேண்டும். நம் மக்கள் படிக்கிற பள்ளிகளில் அவர்களையும் படிக்க அனுமதிக்க வேண்டும். நம் மக்கள் போகிற கோயில்களுக்கு அவர்களும் போக உரிமை வழங்க வேண்டும் என்று எழுதினேன். அதற்கு அவர் அதுபோல செய்ய முடியாது என்று சொல்லி விட்டார்.

  நான் பறையன் என்று கேவலமாகச் சொன்னதாகத் தாழ்த்தப்பட்ட மக்களிடம் சொல்லியிருக்கின்றார்கள். நான் பல தடவை இந்தச் சொல்லைச் சொன்னாலும் அதை ஒழிப்பதற்காக சொன்னதுதான். எலக்சன் போது ராமசாமி நாயக்கர் பறைச்சி எல்லாம் ரவிக்கைப் போட்டுக் கொண்டார்கள் என்று தாழ்த்தப்பட்ட பெண்களைக் கேவலமாக சொன்னார் என்று விளம்பர நோட்டீஸ்களெல்லாம் போட்டு தாழ்த்தப்பட்ட மக்களே அவர் ஆதரிக்கிற கட்சிக்கு ஓட்டுப் போடாதீர் என்று வால் போஸ்டர்கள் ஒட்டி இருக்கின்றார்கள். அதைக் கண்டு சிலர் என்னிடம் வந்து நீ எப்படிச் சொல்லலாம் எனறு கேட்டார்கள். நான் சொன்னது உண்மைத்தான். நான் தாழ்த்தப்பட்ட பெண்கள் இதற்குமுன் ரவிக்கைப் போடக்கூடாது போட்டால் துணியே போடக்கூடாது அப்படி இருந்த சமுதாயம் கால மாறுபாட்டால் எப்படி ஆகி இருக்கின்றது. இன்றைக்கு ரவிக்கையில்லாமல் பார்க்க முடியவில்லை என்று சொன்னேன். இதைக் கொண்டு அந்த இனமக்களை எனக்கு ஓட்டுப் போடாமல் செய்வதற்காகக் கிளப்பி விடப்பட்டதே ஆகும் என்பதை விளக்கியதும் அவர்கள் புரிந்து கொண்டனர்.

  11-12-1968 அன்று சென்னை – அயன்புரத்தில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு. “விடுதலை” 15-12-1968
  “பெரியார் களஞ்சியம்” தொகுதி 18- “ஜாதி-தீண்டாமை” பாகம்- 12 பக்கம் 73

 6. எனக்கு தலித்துனு பேரு வக்க நீ யாரடா நாயே? —— நேர்காணல் : அய்யா சி. சாமுவேல் பறையர் — by வேப்பூர் திருடன்

  https://veppurthirudan.files.wordpress.com/2015/06/sam-1.jpg

  தமிழகத்தின் தலித் போராட்டக் களத்தில் நன்கு அறிமுகமானவர் அய்யா சி. சாமுவேல் பறையர். விருதுநகர் மாவட்டம் சோமையாபுரத்தைச் சார்ந்தவர். இளமைக்கல்வியை தனது கிராமத்தில் முடித்து விட்டு, மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தனது பட்டப்படைப்பைத் தொடர்ந்தார். சிறந்த புத்தக வாசிப்பாளர். இந்திய சுதந்தரத்துக்குப் பின் தன் பெயருக்குப் பின்னால் “பறையர்” என்கிற அடைமொழியை ஒடுக்கப்பட்ட மக்களின் போர்வாளாகப் பிரயோகித்து, அவர்களின் சமூக – அரசியல் நடவடிக்கைகளில் தனித்த அடையாளத்தை நிறுவியர் இவராகத்தான் இருக்க முடியும். கிறித்துவராக இருந்தாலும் மதம் என்கிற கருதுகோலின் எல்லைகளுக்கு அப்பாற்பட்டு, ஆதிகுடிகளின் வரலாற்றில் நின்று பயணிப்பவர். தமிழ்நாடு பறையர் பேரவையின் தலைவர். பறையர் குரல் என்கிற பத்திரிக்கையின் ஆசிரியர்.

  மதுரை தலித் ஆதார மய்யத்தின் சார்பில் 2002 -ல் தமிழகத்தில் உள்ள சில‌ தலித் தலைவர்களுடன் ஓர் உரையாடலைத் தொடங்கிய‌போது, 2002 ஆகஸ்டு மாதம் சென்னையில் முல்லை அச்சகத்தில், அய்யா சாமுவேல் பறையர் அவர்களுடனும் ஒரு உரையாடல் நிகழ்ந்தது. விறுவிறுப்பான, சுவராஸ்யமான உரையாடலாக இருந்தாலும் அவருக்கே உரித்தான விமர்சனப்பார்வையில் இது அமைந்தது. சூழல் சார்ந்து அன்றைக்கு “தமுக்கு” ஆங்கில இதழில் வெளியிடப்படாத இந்த நேர்காணலை அவரின் நினைவேந்தலுக்காக வெளியிடுவது காலத்திற்கு மிகவும் பொருத்தமானது.
  ———————————————-

  கேள்வி : அய்யா வணக்கம். தலித் ஆதார மய்யத்தின் சார்பில் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி. எப்படி இருக்கிங்க?

  பதில்: அது கிடக்கட்டும். அது என்னா தலித்து. எவன்டா இத கண்டு புடிச்சது. இருக்கிற பறையன எல்லாம் கூப்பிட்டு மதுரையில தலித்து, தலித்துன்னு கூட்டம் போட்டுக்கிட்டு. இதுல தலித்து கலை விழாவாக்கும். வெளிநாட்டு பணத்தை வாங்கி உயிர்பொழைக்கிறதுக்கு எங்கள ஏன் அடகு வக்கிறீங்க. இதுல என் ஊர்கார பயலுவல்லாம் கூட்டம் சேத்துக்கிறீங்க. (நேர்காணலை தொடரலாமா – வேண்டாமா என எனக்குள் தயக்கம். நண்பர் யாக்கனை பார்த்தேன். அவர் ஒரு பரிதாபப் புன்முறுவலோடு அச்சகத்திலிருந்து வெளியேறினார். சரி என்ன தான் நடக்கிறது என்று பார்ப்போமே என உரையாடலைத் தொடர்தேன்).

  கேள்வி : இப்போ தமிழ்நாட்டுல இருக்கிற எல்லா தலித் தலைவர்களோடேயும் ஒரு உரையாடல் நடத்தி வருகிறோம். உங்களையும் இச்சமூகத்தின் முன்னோடியாகக் கருதி தான் இந்த உரையாடல் நடத்த விரும்புகிறோம்.

  பதில்: இது வரைக்கும் யார் யாரை சந்தித்து உரையாடல் நடத்தியிருக்கீங்க? (நான் சிலரின் பெயர்களை குறிப்பிட்டேன்). ஹூம், பறைய‌னா பொறந்து தலித்து தலித்துன்னு சொல்லிக்கிட்டு திரியிர இந்த தெருப்புழுதியெல்லாம் உங்களுக்கு த‌லைவனா தெரியுறானுங்க. ஏங்க இவனுங்கல்லாம் என்ன செய்யப்போறானுங்கன்னு நெனைக்கிறீங்க? இதுல வேற தலித்து கலை விழாவுக்கெல்லாம் கூப்பிட்டு அந்த தெருப்புழுதிகளுக்குபதில். மாலை மரியாதை செய்றீங்க‌. என்னத்த சொல்ல.
  இல்லீங்கய்ய உங்களையும் நிச்சயமா விழாவுக்கு கூப்பிடுவோம்.
  எதுக்கு? நான் தான் பறையானாச்சேப்பா. என்னை கூப்புடறது இருக்கட்டும். நான் வரனுமில்ல. அதுவும் ஒரு பறையானா, பறையங்கிற அடையாளத்தோட, அதுவும் ஒரு பறையர் விழா மேடையாக இருந்தா வருவேன்.

  கேள்வி : அம்பேத்கர் சொன்னது போல நாம சாதி ஒழிப்பை மையமாக வைத்து தான் இயங்க வேண்டியிருக்கிறது. அப்படி இருக்கும்போது பறையர் என்கிற அடையாளம் ஒரு குறிப்பிட்ட சாதியின் அடையாளமாக இருக்குமே. அது நம்முடைய நோக்கத்துக்கும், விடுதலைக்கும் எதிரானதாக இருக்காதா?

  பதில்: ஒனக்கு அம்பேத்கர் சொன்னது இருக்கட்டும். எனக்கு எங்க தாத்தன் ரெட்டமலை சீனிவாசனும், அயோத்திதாசப் பண்டிதரும் சொன்னத நான் பின்பற்றனுமா – வேணாமா? வரலாற்றில் “பறையர்” என்கிற இனம் எப்படி இருந்திச்சின்னே இன்னைக்கு நிறைய பறையர்களுக்கு தெரியாது. பறையர்களுக்கே தெரியாத போது ஒங்க தலித்துகளுக்கு எங்க தெரியபோவுது. அதுக்கு காரணம் வரலாற்றை ஆரம்பத்துல இருந்து படிக்காம, நுனிப்புல் மேய்ஞ்சிட்டு படிச்சா அது ஒரு சாதியாகத்தான் தெரியும். அது ஒரு சாதியில்ல, தமிழக தொல்குடி வரலாற்றில் மூத்த குடியினம் பறையர் சமூகம் தான். இத நான் சொன்னா சாமுவேலு பறையர் பேரவை வச்சிருக்கான், பறையர் குரல் பத்திரிக்கை நடத்துறான் அதனால தான் சொன்னான்னு சொல்லுவானுங்க. நீங்களும் கூட சொல்லுவீங்க. எம்பாட்டன் வள்ளுவன் சொல்லியிருக்கான். சித்தப்பன் தொல்காப்பியன் சொல்லியிருக்கான். அவனுங்க சொன்னத எல்லா பயலும் வரலாறு, இலக்கியம்னு இங்க படிக்கிறான். அத இந்த சாமுவேலு பறையன் சொன்னா சாதியா தெரியுதா? .

  கேள்வி : வரலாறு, இலக்கியம் என்பதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் இன்னைக்கி நடைமுறையில் பறையர் என்ப‌து ஒரு சாதி தானே?

  பதில்: நீ என்ன தம்பி திரும்ப திரும்ப இதையே சொல்ற. ஆயிரக்கணக்கான ஆண்டுகளா ஒரு சமூகம் எப்படி ஒரு அடையாளத்தை பாதுகாத்து வந்திருக்கும்? என்பத புரிஞ்சா தான் அது சாதியா இல்ல ஒரு சமூகமா இல்ல ஒரு இனமான்னு கண்டுபிடிக்க முடியும். அதுக்கு ஆதாரமா இருப்பது எதுன்னா அந்த சமூகம் செய்து வந்த தொழில், அதைச்சார்ந்த பண்பாடு, அதன் மீது அது கட்டியெழுப்பியிருக்கிற வரலாறு. அப்படி பார்த்தா இந்த தமிழ்நாட்டுல “பறையர்” தவிர்த்து வேறு எந்த இனத்தையும் சொல்ல முடியாது. மற்றவை எல்லாம் பறையர் என்கிற ஒரு இனத்துக்கு எதிரா உருவானது தான் இன்னைக்கு நம்ம கண்ணு முன்னாடி தெரியுற சாதிகள், பிராமணியம், அது இதுன்னு.

  கேள்வி : அப்படி இருக்கும்போது பறையர்கள ஏன் இன்னைக்கு தீண்டப்படாதவரா கருதனும்?

  பதில்: நீங்க சொல்லலையா தலித்துன்னு. அந்த மாதிரி வரலாறு தெரியாத பல பல பட்டறைங்க சொல்லுது. விவசாயத்தையும், மறை ஓதுவதையும் கொண்டிருந்த ஒரு சமூகத்தை எப்படி தீண்டப்படாதவனாக்க முடியும்? இந்த சமூகத்துல விவசாயம் செய்வதையும், மறை ஓதுவதையும் யார் செய்ய முடியும்னா எல்லா மக்களையும் நேசிக்கிற, சமத்துவமா நடத்துற, வேறுபாடு காட்டாம பழகுகிற குறிப்பா வரலாறு கட்டத்தெரிந்த அறிவு சமூகம் தான் செய்ய முடியும். இலேன்னா இந்த நாட்டுல, இந்த மண்ணுல திருவள்ளுவன் எப்படி மூத்தகுடி தலைவனா இருந்திருக்க முடியும். அவுனுக்கு எங்க இந்த தீண்டாமை இருந்திச்சு. அவுனுக்கு இல்லாத ஒரு கொடுமை எனக்கு ஏன் பணிக்கப்பட்டது. ஏன்னா நான் அநீதிய ஏத்து போகல, விவசாயத்தை தவிர வேற எதையும் உருவாக்கி யாரையும் அடிமைப்படுத்தல, சைன்ஸ் எங்கிட்ட இருந்திச்சு, வான சாஸ்திரத்துல நான் கெட்டிக்காரன், நாட்டு நடப்ப கணிக்கத் தெரிஞ்சவன், ஒரு சேதிய சொல்லத் தெரிஞ்சவன். இந்த குணம் மத்தவங்களுக்கு ஏற்றுப்போகனும்னா அவர்களும் என்னை மாதிரியே நடந்துக்கனும். அதுக்கு எந்த சமூகம் சாத்தியம் இல்லையோ அது என் தொழிலை, என் பிறப்பை, என் பண்பாட்டை அசிங்கப்படுத்தி என்னையும் அசிங்கப்படுத்துது. இதுக்காக வரலாற்றையே திரிக்கும் வேலையை செய்து நான் பூர்வகாலமா தீண்டப்படாதவனா சொல்வது நுனிப்புல் மேயிறவன் பேசறது. அந்த நுனிப்புல் வரலாறு நமக்கு வேண்டாம். உண்மையான வரலாற்றை பேசுவோம்.

  கேள்வி : அப்போ இன்னைக்கி இருக்கிற சாதிகள எப்படித்தான் ஒழிக்கிறது?

  பதில்: சாதிய பறையனாகிய நான் உருவாக்கல. எனக்கு எதிரா உருவாக்கப்பட்டது தான் சாதி. அந்த சாதியின் எல்லா விஷமத்தனங்களையும் பறையர்கள் ஏற்றுப்போகாத‌தால் அவர்கள் மீதே கலவரங்கள் கட்டவிழ்த்து விடப்படுகிறது. நான் பள்ளிப்படிப்பை முடிக்கும் போது எங்க பகுதியில தேவர்கள் எங்கள் மீது தொடர்ந்து தாக்குதல் பண்ணுவாங்க. அதுக்கு காரணம் நிலம் இல்ல, பொழைப்பு இல்ல, உழைப்பு ஒன்னு தான் மூலதனம். அதனால அவன சார்ந்து நான் வாழவேண்டியிருக்கு. இல்லேன்னா ரோடு போடற வேலைக்கு போக வேண்டியிருக்கு. அவன் மட்டுமா அடிக்கிறான். பள்ள‌னும் தான் சேர்ந்துக்குறான். இராஜபாளையத்துல 1985 -களில் மிகப்பெரிய அளவில் சாதிக்கொடுமைகள்பதில். நடந்தது. பல இடங்களில் வேSam – 2லை செய்து பறையர்கள் அப்போது நிலம் வாங்கினார்கள். அது பல சாதிகாரப் பயலுகளுக்கு பொருக்கல. இதனால பல இடங்கள்ல சாதிக்கலவரம் நடந்திச்சு. 1992 -ல் தமிழ்நாடு பறையர் பேரவையை தொடங்கியதற்கு காரணமே சாதிக்கொடுமை தான்.

  கேள்வி : பறையர் பேரவையின் எழுச்சிக்கு சாதிக் கொடுமை காரணமா? அல்லது அம்பேத்கரின் நூற்றாண்டு காரணமா?

  பதில்: சொல்லப்போனா ரெண்டுமே இல்ல. அறிவு தான் காரணம். அறிவில் சிறந்த பறையன் ரெட்டமலை சீனிவாசன் காரணம். ஒன்னு தெரிஞ்சிக்கோங்க. அம்பேத்கருக்கு முன்பே திருவள்ளுவப் பறையன், கந்தசாமிப் பறையன், காத்தவராயப்பறையன், எம்..சி. ராஜா பறையன்னு பலர் முன்னோடியாக இருந்தாங்க என்பத மறந்திட்டு அம்பேத்கர்னு நுனிப்புல் மேயாதீங்க. அவர் மகாராஷ்டிராவுல பறையர் மாதிரி இருந்த ஒரு மஹார் சமூகத்தின் வெளிச்சமாக வருவதற்கு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னாலே பறையன் அறிவாளி. அதனால தான் ரெட்டமலை சீனிவாசப் பறையர் “பறையன்” என்கிற பேர்ல ஒரு பத்திரிக்கை நடத்துனாரு. அதன் தொடர்ச்சியா பறையர் பேரவை சார்பில் “பறையர் குரல்” என்கிற பத்திரிக்கையையும் தொடங்கி நடத்தி வருகிறோம்.

  கேள்வி : (ஒங்களுக்கு அறிஞர் குணாவை தெரியுமா? என்று என்னிடம் கேட்டார். நான் தெரியும் என்றேன். அவருடைய நூல்களை கொஞ்சம் வாசிச்சிட்டு வாங்க என்றார். சரி என்றேன்). தலித் மக்களுக்கு வேறு என்ன பணிகளை செய்து வருகிறீர்கள்?

  பதில்: பறையர் பேரவை பறையர்களுக்கான இயக்கம் மட்டுமல்ல. சாதி ரீதியாக ஒடுக்கப்படுகிற எல்லா மக்களுக்கும் உரியது. குறிப்பாக மலம் அள்ள‌க்கூடிய, பிணம் எரிக்கக் கூடிய பறையர், சக்கிலியர் மக்களுக்காக குரல் கொடுத்து வருகிறோம். ஒரு சமூகத்த இழிவா பார்ர்க்குறதுக்கு இந்த மாதிரியான தொழிலை நிரந்தரமா திணித்து வருவதற்கு எதிராக இந்த போராட்டம். எல்லாத்தையும் விட ஒரு சமூகத்த அறிவார்ந்த சமூகமா வளர்த்தெடுக்கனும். அதற்கு தான் ரெட்டமலை சீனிவாசன், அம்பேத்கர், அயோத்திதாசப் பண்டிதர் போன்றவர்களின் அறிவாயுதங்களை மக்களுக்கு எடுத்துச் சொல்லனும். அதுக்காக பேரவை சார்பில் பல பயிற்சிகள், கருத்தரங்குகள் நடத்தி வருகிறோம். ஒரு முக்கியமான விஷ‌யத்த உங்களுக்கு சொல்லனும். ஒங்க மய்யத்துல தலித்துன்னு ஒரு கலை விழா நடத்துறீங்களே. அதுக்கு முன்னாடியே 80 -கள்ல எங்கூர்ல பறையர் விழா நடத்தியிருக்கிறோம். இன்னைக்கி அதத்தான் பறையர் கலை விழா என்று பறையர் பண்பாட்டு மீட்டுருவாக்கத்துக்காகவும், அறிவு நிரூபணத்துக்காகவும், மறை துலங்கலுக்காகவும் நடத்தி வருகிறோம். அத நீங்க வெளிநாட்டுக்கு காசாக்கிட்டீங்க.

  கேள்வி : வளர்ந்து வரும் இன்றைய தலைமுறையினருக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

  பதில்: அவுங்களுக்கு சொல்றது இருக்கட்டும். மொதல்ல எங்கள தலித்து தலித்துன்னு சொல்லி எங்க மூளைய காயடிக்கிறத நீங்க நிப்பாட்டுங்க. இருக்குற பறையனுங்க எல்லாரையும் திரட்டி தலித்துன்னு புராஜக்டு போடறத நிப்பாட்டி இருந்தீங்கன்னா தமிழ்நாட்டுல பறையர் இனம் ஒரு மாபெரும் வளர்ச்சிய கண்டிருக்கும். அந்த வளர்ச்சிய தடை பண்ணதுமில்லாம பறையனுங்கள புராஜக்டுக்கு காயடிச்சீட்டிங்க. இந்த வேலைய நீங்க மொதல்ல நிப்பாட்டுங்க. அமுங்கி போகக்கூடிய தெருப்புழுதிய எல்லாம் தலைவன்னு வளர்த்து விடாதீங்க. ஒங்க மய்யத்த பறையர் ஆதார மய்யம்னு பேர் மாத்துங்க. எல்லாம் அதுபாட்டுக்கு நடக்கும்.

 7. ஜாதியை  ஹிந்து மதம் ஆதரிப்பதாக சொல்லிக்கொண்டு ஹிந்து என்ற மதத்தை மட்டும் எதிர்ப்பவர்கள், ஜாதியை எதிர்க்க ஏன் முன் வர மாட்டேன் என்கிறார்கள்?….. அதில் உள்ள   கொடுமையான கருத்துகளான ஜாதீய கருத்துக்களை எதிர்க்க ஏன் முன் வரவில்லை? அப்படி முன்வந்திருந்தால் இந்நேரம் கண்டிப்பாய் சாதியற்ற சமுதாயம் அமைந்திருக்கும் அல்லவா?

  “கடவுள் இல்லை, கடவுளை கற்பித்தவன் முட்டாள்” என்று வீர வசனம்  பேசியவர்களால், “ஜாதிய இல்லை. ஜாதியை கற்பித்தவன் மூடன், ஜாதியை பின்பற்றுபவன் மலம் தின்பவன்” என்று சொல்ல இயலவில்லையே ஏன்? இவர்களுக்கு ஹிந்து என்ற மதம் வேண்டாம், ஆனால் அந்த மதம் சொல்லிகொடுத்த வர்ணாசிரம கருத்துக்கள் மட்டும் வேண்டும். கடவுளா ஜாதியை படைத்தார்? கடவுளை மட்டும் திட்டுவதற்கு? எவனும் கடவுளை படைக்கவில்லை, கடவுள் என்ற பெயரில் இவர்கள் செய்த கொடுமைகளை எதிர்க்க தைரியம் இல்லாதவர்கள், கண்ணால்  கண்டிராத கடவுளை திட்டுகிறார்கள், ஆனால் கண்ணால் காணும் ஜாதி கொடுமைகளை திட்ட மறுக்கிறார்கள்.
  —— அறிவென்ற ஆயுதம் செய்வோம் எனும் வெப்சைட்டில் படித்தது.

 8. திராவிட மற்றும் டுமில் தேசியம் பேசுபவர்களுக்கு:

  திராவிட/தமிழ் தேசீய கூட்டத்தில் இருக்கும் ஒவ்வொருவரின் குடும்பமும் கலப்பு திருமணம் செய்துகொண்டாலே போதுமே, எதுக்கு இப்படி ஒரு அறிவிப்பு? 

  கடந்த என்பது வருடங்களில் உங்கள் திராவிட கூட்டத்தில் இருந்து வீட்டுக்கு ஒருவர் கலப்பு திருமணம் செய்து இருந்தால் இந்நேரம் தமிழ்நாட்டில் ஜாதி பாதி ஒழிந்து இருக்குமே, அதை செய்யாமல் இப்போது ஏன் இந்த கபட நாடகம்? 

  கலப்பு திருமணம் செய்தால் வெட்டுவோம் என்று சொன்னபோது எங்கே சென்று இருந்தீர்கள்?

  பொங்கலூர் மணிகண்டன் மேடை போட்டு பேசும் போது என்ன செய்து கொண்டு இருந்தீர்கள்? அந்த மாநாட்டை தடுக்க நீங்கள் ஏன் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை?

  முடிந்தால் ஆதிதிராவிட முன்னேற்றத்தை கையில் எடுத்து எங்களுடன் கைகோர்த்து களத்தில் இறங்க போராட முன் வாருங்கள் ஏனென்றால் இந்த மாதிரி கண்துடைப்பு நாடகங்களை பார்த்து பார்த்து சலித்து போய்விட்டது.

  கலப்பு திருமணத்தை உங்கள் கொள்கைகளில் ஒன்றாக கொண்டு வந்து இருக்கலாமே, ஏன் கொண்டு வரவில்லை?

  இது ஒன்றும் குறை சொல்வது இல்லை. உங்களின் உண்மை நிலையை எடுத்து சொல்வது.
  ———————

  தலித் தேசியம் பேசுபவர்களுக்கு:

  தலித் தேசியம் பேசுபவர்களில் எத்தனை பேர் பறையர்-பள்ளர்-சக்கிலியர்-குறவர்-இருளர் கலப்பு திருமணம் செய்ய முன் வருகிறார்கள்? 

  ஒரு கூட்டம் இடஒதுக்கீட்டில் படித்து முன்னேரிவிட்டு பேன்ட பரம்பரை என்று சொல்லிக்கொண்டு அலைகிறது, இன்னொரு கூட்டமோ இன்னமும் மலம் அள்ளிக்கொண்டு ஆதி தமிழன் பட்டம் போட்டுகொண்டு திராவிட ஜால்ரா போட்டுகொண்டு திரிகிறது, இன்னொரு கூட்டமோ பிரபாகரனை சேரிக்குள் கொண்டு வந்ததை பெருமையாய் பேசிக்கொண்டு திரிகிறது….

  ஆனால் இவர்கள் அனைவரும் அண்ணல் அம்பேத்கர் மட்டுமே இந்த முன்னேற்றத்திற்கு காரணம் என்பதை மறந்துவிட்டு திரிகிறார்கள்.

  இப்படி இருக்கும் போது தலித் தேசியம் பேச எப்படி உங்களுக்கு மனது வருகிறது? வர்ணசிரம் திராவிட/தமிழ் தேசியங்கள் போலவே இதுவும் வர்ணாசிர தலித் தேசியம்தான்?

  முதலில் உங்களை ஒன்று படுத்த உங்களுக்குள் கலப்பு திருமணங்களை செய்ய முன்வாருங்கள் அதை உங்களின் கொள்கையாக அறிவியுங்கள் அதற்க்கு அப்புறம் அடுத்தவர்களை பற்றி யோசிப்போம்.

 9. மேலேயுள்ள “திராவிட மற்றும் டுமில் தேசியம் பேசுபவர்களுக்கு” எனும் பதிவு —— அறிவென்ற ஆயுதம் செய்வோம் எனும் வெப்சைட்டில் படித்தது.

 10. பறையர்கள் யார்??? !!!

  நான் பறையன் . என்னுடைய பெயர் சி.சாம் பறையர்.

  நான் தமிழ்நாடு பறையர் பேரவை என்னும் மாந்த நேய மக்கள் அமைப்பை செயல் படுத்திக்கொண்டு இருக்கிறேன்.என்னுடைய சொந்த ஊர் இராசபாளையம்.மதுரையில் இருந்து தென்காசி /குற்றாலம் செல்லும் வழியில், நடு மையத்தில் உள்ளது.

  நான் பள்ளிப் படிப்பை, என்னுடைய பிறந்தாங்குடியில் சோமையாபுரம்
  சி.எஸ்.ஐ {தென் இந்தியத் திருச் சபை } மூலம் உருவாக்கப் பட்ட ஆரம்பப் பள்ளியில் படித்தேன் ஐந்தாம் வகுப்பு வரையில். மேலும் ஆறாம் வகுப்பு, நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த,சத்திரப்பட்டி என்னும் பட்டிக்காட்டில் உள்ள சாமிநாதபுரம் பள்ளியில் ,விடுதியில் தங்கிப் படித்தேன். மீண்டும் ஏழாம்வகுப்புக்கு என்னுடைய சொந்த ஊரின் அருகிலுள்ள திருவில்லிபுத்தூரில் உள்ள ,சி.எம்.எஸ். உயர் நிலைப் பள்ளியில் மீண்டும் படித்து,பெரிய பத்து என்று சொல்லும் பதினோராம் வகுப்பு படித்து முடித்தேன்.

  என்னுடைய கல்லூரிப் படிப்பான புகுமுக வகுப்பை, நெல்லை மாவட்டத்தில் உள்ள தூய யோவான் கல்லூரியில்(செயின்ட் ஜான்ஸ் கல்லூரி) படித்தேன். அதன் பின்பு, தி அமெரிக்கன் கல்லூரியில் இளங்கலை பட்டப் படிப்பு , பொருளாதாரம் (எக்கனாமிக்ஸ்)படித்து முடித்தேன். பள்ளிப் படிப்பு முதல் இன்று வரையில் நான் பிறந்த,என்னுடைய பறையர் இனத்தின் விடுதலைக்குப் பாடு பட்டுக்கொண்டு இருக்கிறேன்.

  எனக்கு இந்த பறையர் இனத்தின் விடுதலைப் பணிக்கு என்னை யாரும் அழைத்ததும் இல்லை,நானும் எந்த ஒரு தீண்டாமையையும் அனுபவவித்ததும் இல்லை என்றாலும் நான் இதுவரையில் திருமணமே செய்யாமல் என்னுடைய பறையர் இனத்தின் விடுதலைக்குப் பாடுபட்டுக்கொண்டு இருக்கிறேன்.

  நானும் கல்லூரிப் பருவத்தில், மது, மாது, சூது,பேய் ,பிசாசு, பேடை, பெட்டை என்று அனைத்தையும் அறிந்து தெரிந்து கொண்டு, அவைகள் அனைத்தையும் அனுபவித்து, இன்று வரையில் ஐம்பது அகவையைத் தாண்டியும் என்னுடைய பறையர் இனத்தின் விடுதலைக்காக வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.

  எனக்கு பெரிதாக யாரும் குருக்களோ ,அல்லது வேறு யாரும் என்னை இந்த பணியை செய்யச் சொல்லவில்லை.இது எப்படியோ என்னுடைய நாடி நரம்பில் மரபணுவில் உள்ள ஒரு செயல். நானும் படித்தேன்.ஒரு வேலையை பார்த்துவிட்டு குடியும் குடித்தனமாக மாறலாம் என்ற எண்ணம் ஒரு போதும் எனக்கு எழவில்லை. நானும் ஒருபோதும் என்னுடைய பறையர் என்னும் அடையாளத்தை எங்கேயும் எப்போதும் மறைத்ததில்லை. அதற்கு கிடைத்த பரிசு நான் ரெம்பவும் நல்லவன் என்பதே.

  நானாக என்னை தயார் செய்துகொண்டேன். பின் நாளில் அறிவர் அம்பேத்கர் நூல்களைப் படித்தேன். பறையர்களுக்குப் போராடிய மாவீரர்கள் யாராவது உண்டா என்று தேடி பிடித்து அலைந்து கொண்டு பலவித நூல்களைப் படித்து தெரியும்போது எனக்கு புறநானூறு எழுதிய மாங்குடி மருதன் கிழார் “துடியன் பாணன் பறையன் கடம்பன் என்ற இந்நான்கல்லது குடியும் இல்லை” என புறநானூறு …முன்னூற்றி முப்பது ஐந்து பதினேழாம் வரியில் சொலப்பட்டதை … வாசித்து வாசித்து… மிகவும் பெருமை கொண்டேன்.

  என்னை யாரும் உருவாக்காமலே, நானே என்னுடைய பறையர் இனத்தின் வரலாறுகளைத் தேடிக் கண்டு பிடித்த ஒரு பெருமை எனக்கு.அது ஒரு மமதை என்றும் சொல்லலாம். அதனால் கண்டு பிடிக்கப் பட்ட மாபெரும் தலைவனான இரட்டைமலை சீநிவாசன்பரயனே பறையர்களின் முதல் விடுதலைப் போராளி என்று தெரிந்து கொண்டு அம் மாவீரன் உருவாக்கிய தமிழ் நாடு பறையர் மகாசனம் தான் இன்று தமிழ் நாடு பறையர் பேரவை என்னும் பெயரில் இயங்கி வருகிறது.

  எனவே பறையர் இனத்தின் விடுதலை விரும்பும் அனைவரும் மனமார போற்றப் படும் இப் பறையர் பேரவையில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு தன் ஆர்வமாக செயல் படும் அனைத்துப் பறையர்களையும் அழைக்கிறோம்.

  வரலாறு என்னை விடுதலை செய்யும்.
  வரலாறு தெரியாத எந்த ஒரு மாந்த இனமும் …
  தன் வரலாற்றை மீட்டு எடுக்க முடியாது….
  இதுவே வரலாறு நமக்கு காட்டும் பாடம்.
  எனவே ஞானம் உள்ள ஞானவெட்டியான் பரம்பரையே,
  நாடாண்ட நந்தகுல அரசப் பறையற்குலமே, வா…
  இப் பறையர் இனத்தின் மாந் களத்தின் வரலாறுகளை மீட்டு ….
  மீண்டும் நாடாள அணிதிரள் …அறிவர்கூட்டமாய்.
  உன்னுடைய பங்களிப்பை ,நீ பிறந்த உன்னுடைய பறையர் இனத்தின் வரலாறுகளை மீட்டு இம் மண்ணின் மைந்தர்கள் மீண்டும் நாடாள பணி செய்ய வா …வா… என்று அனைத்துப் பறையர் இனத்தின் நல்ல உள்ளங்களையும் அழைக்கிறோம்.

  வரலாறு உன் கையில்.. வரலாறு இல்லாத எல்லா சாதியும் ஆட்சி செய்து விட்டது..வரலாறு உள்ள பறையர் இனம் எப்போது ஆட்சி செய்யப் போகிறது…

  விடுதலையும்…விடியலும் உன்கையில்…
  நாளையப் பொழுது உன்னுடைய பறையர் இனத்தின் விடியலில்..
  புறப்பட்டு பறைய ..உன் விடியலை நோக்கி..
  என்றும் பறையர் விடுதலைப் பணியில்
  –———- சி.சாம் பறையர்.

Leave a Reply

%d bloggers like this: