என்னென்ன செய்தாலும் புதுமை எங்கெங்கு தொட்டாலும் இளமை; அற்பத்தனம்

நடிகை லட்சுமியும்-புரட்சித்தலைவரும் ஏதோ ஒரு படத்திற்காக..

யாரையும் நீங்கள் பாராட்டவே மாட்டிர்களா, ஓருவரை புகழ்வதே தவறா?

-கவி

ஒருவரிடம் பாராட்டுக்குரிய அம்சம் என்ன இருக்கிறதோ அதை குறிப்பிட்டு பாராட்டுவது தவறில்லை. அதை செய்யவும் வேண்டும். மிகப் பெரும்பாலும், ஒருவரிடம் இல்லாத திறமையையும் குணத்தையும் குறிப்பிட்டு பாராட்டுவதே, நமது மரபாக இருக்கிறது.

அப்படி பாராட்டுவதின் மூலம் பாராட்டுகிறவர் எதையோ தனிப்பட்ட முறையில் ஆதாயம் தேடுகிறார் என்பதை தவிர வேறு எதுவும் இல்லை.

இப்படிதான் புகழந்து பரிசு பொருட்களை, பதவிகளை, நூலக ஆர்டர்களை, வாய்ப்புகளை தட்டிச் சென்றுவிடுகிறார்கள் இலக்கியவாதிகள். அரசியல்வாதிகள். ஆன்மீகவாதிகள் இன்னும் அலுவலகத்தில் வேலை செய்பவர்கள்.

அதன் மூலம் மிக மோசமான ஆதிக்க மனநிலையை பாராட்டப்படுகிறவர் மனதில் ஏற்படுத்துவதும், தன்னிடம் இல்லாத ஒன்றை தன்னிடம் இருப்பதாக நினைத்துக் கொண்டு அவர்கள் செய்கிற அட்டகாசங்களும், தத்துவ விளக்ங்களும் தாங்க முடியவில்லை.

இப்படித்தான், 65 வயதான எம்.ஜி.ஆரைப் பார்த்து 16 வயதே நிரம்பிய மஞ்சுளா பாடுவதுபோல் ஒரு பாடலை ஒரு பாடலாசிரியர் எழுதியிருந்தார்:

நீ என்னென்ன செய்தாலும் புதுமை

உனை எங்கெங்கு தொட்டாலும் இளமை.

இது எவ்வளவு ஆபாசமான வரி என்பதையும் தாண்டி, இது எவ்வளவு அற்பத்தனாமான பொய்.

10 thoughts on “என்னென்ன செய்தாலும் புதுமை எங்கெங்கு தொட்டாலும் இளமை; அற்பத்தனம்

  1. அந்த பாடல் படத்தின் கதனாயகனைப்பார்த்து கதாநாயகி பாடுவது. கதையின்படி நாயகனுக்கு வயது 25 .நாயகிக்கு வயது இருபது.அந்த புரிதலோடுதான் பாடலை கேட்கவேண்டும்.மற்றபடி பாத்திரம் ஏற்று நடிதவர்களையோ அல்லது பாடலைப்பாடிய சௌந்தர்ராஜன் சுசீலாவையோ அது குறிக்காது.
    பெரியார் படத்தில் வரும் காட்சிகளும் வசனமும் பெரியாரைத்தான் குறிக்குமே அன்றி படத்தில் நடித்த சத்தியராஜை குறிக்காது.

  2. இதெல்லாம் எம்.ஜி.ஆருக்கு எழுத்தப்பட ஒரு அடி வருடியின் முகஸ்துதி என்பதி பச்சை…குழந்தைக்கு கூட தெரியுமே ராசா…..

  3. மதி ஏன் பாராட்ட மாட்டார்.. அவர் அடிப்படையில ஒரு சாதியவாதி.. மதவாதி…அவர் பாரர்ட்ட வேண்டும் என்றால் பாராட்டப் படுபவர் முசுலீமாகவோ தலித்தாகவோ இருத்தல் அவசியம்…அதாவது inversionல பாராட்டுவாராம்… புரியுதா…?

  4. innum sollaponal sex enpathai nerilthan paarkakutathu, marrabadi vaarthaiyakova padalakovo ketgalam.pin eppadithan therinthukolvathu.

  5. அந்த திரைப்படத்தில், கதையின் நாயகன் நாயகியைப் பார்த்து பாடுவதாகத் தான் இருந்தது. அதிலும் உங்களுக்கு மட்டுமே உள்ள பிரத்யேக பகுத்தறிவு, தன் அடையாளத்தை காட்ட முயல்வது, வலுக்கட்டாயமாக இப்படி எல்லாம் உட்கார்ந்து யோசிப்பீர்களோ எனத் தோன்றுகிறது.

  6. அபத்தமான பொய்கள் தமிழ் திரை இசையில் நிறைய உண்டு. ஒரு நல்ல பாடலை இப்படிகூட பார்க்க முடியுமா என்று வியப்பாக இருக்கிறது. வைரமுத்து இளையராஜாவுக்காக எழுதாத பொய்களா? வாலி இளையராஜாவுக்காக எழுதாத ஆபாசங்களா? மதிமாறன் சார் சகலகலா வல்லவன் பட பாடல்களை கேட்டதுண்டா? அவைகள் என்ன இலக்கியங்களோ?

  7. எதிர் மறையாக சிந்திப்பதையே திரு. மதிமாறன் முற்போக்கு என்று நினைக்கிறாரோ..என்னமோ..

  8. It was a film song that a heroine & hero sing in a romantic situation. Only this fellow can really think OUT OF HIS MIND and imply a illogical reason. As someone put it his fellow sees everything with a jaundiced eyes. Will somebody take him to a psychologist or a counsellor. I am prepared to sponsor

Leave a Reply

%d bloggers like this: