Site icon வே. மதிமாறன்

Splendor பறையர்; விளம்பரபடுத்த தயாரா? அல்லது Splendor அய்யருக்கு முடிவு கட்டிய பெரியார் தொண்டர்கள்

ஜீரோவான ஹீரோ

ருவழியாய், HERO வின் ஷிவ்ராம் அய்யர்-சௌம்யா அய்யர்-Splendor அய்யர்; ஷிவ்ராம் குமார்-சௌம்யா குமார்-Splendor குமாராக மாறியிருக்கிறார்கள்.

மகிழ்ச்சி.

உடனடியான இந்த மாற்றத்தை எதிர்பார்க்கவில்லை.

8-11-2012 காலையில் செய்திதாளில் இதை பார்த்தபோதே கடும் கோபம், வேறு செய்திகள் எதையும் வாசிக்கவில்லை. தினகரன் நாளிதழில் முதல் பக்கத்திலேயே முழு பக்கமாக வந்திருந்தது. தினத்தந்தியில் அரை பக்கம்.

உடனே இதை கண்டித்து இப்போதே எழுத வேண்டும், என்று தோன்றியது. எல்லா வேலைகளையும் நிறுத்திவிட்டு முதல் வேலையாக இதற்கான  எதிர்ப்பை எழுதி, என் இணைய பக்கத்திலும், facebook லும் tweeter லும் வெளியிட்டு, email களில் தோழர்களுக்கு அனுப்பிட்டுதான் கிளம்பினேன்.

பிறகு சில மணிநேரம் கழித்து பார்த்தபோது, இணையத்தில் எதிர்ப்புகள் குவிந்திருந்தது.

Splendor அய்யருக்கு எதிராக தொடர்ந்து எழுதி, அமைப்பு ரீதியான தோழர்களிடம் பேசி, HERO நிறுவனத்தின் முன் ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும், என்று நினைத்திருந்தேன்…
அதற்குள் அவர்களாகவே மாற்றிவிட்டார்கள். தனது வர்த்தகம் பாதிக்குமோ என்கிற பயமே காரணம்.

இதற்கான எதிர்ப்பு, எந்த வெகு ஜன ஊடகங்களிலும் வராமல், இன்னும் சொல்லப்போனால் பெரிய பத்திரிகைகளில் வந்த அந்த விளம்பரத்தை, இணையத்தில் இருக்கிற தோழர்களோடு இணைந்து 12 மணி நேரத்தில் அதை மாற்றியிருக்கிறோம்.

Splendor அய்யர் என்று மட்டுமல்ல; Splendor பிள்ளை, Splendor முதலியார் என்று வெளியாகி இருந்தாலும் இந்த எதிர்ப்பை இதே வேகத்தோடே செய்திருப்போம்.

Splendor சக்கிலியர், Splendor பறையர் Splendor பள்ளர் என்று விளம்பரபடுத்த அந்த நிறுவனம் தயாரா?

அப்படி செய்தால், தன் பொருள் விற்காது; பார்ப்பனர்களும், பிள்ளை, தேவர், செட்டியார், முதலி  உட்பட எல்லா ஜாதிக்காரனும் அந்த வண்டியின் மீதும் தீண்டாமையை கடைப்பிடிப்பான்.

ஜாதி உணர்வாளர்களுக்கு பயந்து அல்லது ஜாதி உணர்வாளராகவே ஆதிக்க ஜாதி அடையாளத்தோடு, Splendor அய்யர் என்று பெயர் வைத்தால், நாம் மட்டும் அதை எப்படி அனுமதிக்க முடியும்?

ஆதிக்க ஜாதி அடையாளத்தோடு, (நாயர்-சவுகான்) HERO நிறுவனம் இதுபோல் இந்தியா முழுக்க விளம்பரம் செய்திருக்கிறார்கள். பெரியார் மண்ணில்தான் அதற்கு முடிவு காணப்பட்டிருக்கிறது. அதுவும் ஒரு சிலமணிகளில்.

மிக எளிய, உறுதியான மனிதர்களால்.

தொடர்புடையவை:

ஷிவ்ராம் அய்யர்-சௌம்யா அய்யர்-Splendor அய்யர்: ஜாதியை ஒழிச்ச HERO

பெண்களின் ஆரோக்கியத்திற்கு தேவை, இலவசத் தாலி அல்ல; சானிடரி நாப்கின்தான்

சானிடரி நாப்கின்; நமது கருத்தும், அதிமுக அரசின் திட்டமும்

இலவச சானிடரி நாப்கின் திட்டம்: இந்தியாவிலேயே முதன்முறையாக

கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம்’; யாருக்கு எதிராய்?

விஸ்வரூபம் படத்தின் டிரைலரும் கவுண்டமணி வசனமும்

Exit mobile version