90 வயதை தொட்டப் பிறகு அதிக பயணங்களை குறைத்துக் கொண்டு முக்கியமானவற்றிக்குக்கூட கலைஞர் நேரில் செல்வதில்லை.
அதனால் தான் திராவிடர் கழகத் தலைவர் வீரமணியின் பிறந்த நாளுக்கு அவரால் நேரில் சென்று வாழ்த்துச் சொல்ல முடியவில்லை. அவ்வளவு ஏன் பெரியார் பிறந்த நாளுக்குக் கூட பெரியார் திடலுக்கு போக முடியாத கலைஞர்,
..அதுவும் வயதானவர்களுக்கு கொஞ்சமும் ஒத்துக் கொள்ளாத கடும் குளிர் நிலவிய நேற்று, (6-12-2013) டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிப்பதைக் கூட தவிர்த்து விட்டு, தன் உடல் நலத்தையெல்லாம் பொருட்படுத்தாமல் நடிகர் சோ மகனின் திருமணத்திற்கு நேரில் சென்று வாழ்த்திருக்கிறார்.
மகன்கள் மு.க. அழகிரி, மு.க. ஸ்டாலின், மகள் கனிமொழி எவ்வளவு ஒத்துமையா எல்லோரும் கலந்து கொண்டு கல்யாணத்தை சிறப்பித்திருக்கிறார்கள்.
சொல்லுங்க பிராமின்.. சொல்லுங்க..
இவரா உங்களுக்கு எதிரி?
உங்கள் மீது இவ்வளவு அன்போடு இருக்கிற அவருக்கு நீங்கள் ஒரு ‘செல்லாத ஓட்டு’ கூட போட்டதில்லை என்பது கூட பரவாயில்லை.. அவரை சாபம் விட்டு சபிக்காமலாவது இருக்கக் கூடாதா?
இன்னும் என்ன செய்தால் இவரை நீங்கள் ஒத்துக் கொள்வீர்கள்.. உங்களுக்காக எதையும் செய்யக் காத்திருக்கிறது அந்தக் குடும்பம். இனி வசவுகளைத் தவிர்த்து உங்கள் கோரிக்கைகளை மட்டும், (ஜெயேந்திரன் விவகாரம்போல் ரகசியமாக கூட) சொல்லுங்கள்… முடிந்தவரை முடித்து வைப்பார் தலைவர் கலைஞர்.
டிசம்பர் 7 அன்று face book ல் எழுதியது
தொடர்புடயவை:
சங்கர ராமன் கொலை – ஜெயேந்திரன் விடுதலையே விலை! திமுக வின் நிலை?
கலைஞர்-இராம.நாராயணன்-எஸ்.வி.சேகர்
குஷ்புவும் நமீதாவும் செம்மொழி மாநாடும்
“அண்ணே நீங்க எவ்ளோ.. நல்லவரு…” கலைஞரின் பார்ப்பன எதிர்ப்பு
வழக்கறிஞர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் – தமிழகத்தில் ராமராஜ்ஜியம்தான் நடக்கிறது
பா.ஜ.க. அலுவலகம் மீதான தாக்குதலும் சுப்பிரமணிய சுவாமி மீதான தாக்குதலும்
Bharatiya Janata Party மீது..?
சங்கரராமன் கொலை வழக்கு தீர்ப்பும் தூக்கு தண்டனைக்கு ஆதரவாக கூட்டுப் பிரார்த்தனையும்
இது தாண்டா தீர்ப்பு! பிராமணர் கொலை பிராமணர் சங்கம் மவுனம்! மனுஷ்யபுத்திரன்!

