Site icon வே. மதிமாறன்

யுவன் சங்கர் ராஜா மதம் மாறினார் இளையராஜா இழிவுபடுத்தப்படுகிறார்

398750_457844934263040_212708969_n

யுவன் சங்கர் ராஜா இஸ்லாமியாராக மாறிவிட்டார் என்று சொல்கிறார்கள்;

இப்போது இந்து உணர்வாளர்கள் ‘இளையராஜா தன் மகனை இப்படி தறுதலையா விட்டுடாரே. இவுரு என்ன இந்து உணர்வோடு தன் மகனை வளர்த்தார். ஊருக்கு இந்து மத உபதேசம் செய்யும் இளையராஜா தன் மகனிடம் அதைப் பற்றி பேசவில்லையா? மத மாற்றத்தைத் தடுக்கவில்லையா?’ என்று அறிவுரை சொல்வார்கள் கண்டிப்பார்கள்.

பகுத்தறிவாளர்கள் யுவனின் மத மாற்றத்தை, இளையராஜாவின் இந்து இறை நம்பிக்கையோடு ஒப்பிட்டு அவரை கேலி செய்வார்கள்.

-நேற்று (9-2.2014) இரவு 10 மணிக்கு மேல் face book ல் எழுதியது.

*

யுவன் சங்கர் ராஜா இஸ்லாமியராக மாறியதற்கு இளையராஜாவை திட்டுகிறார்கள். இது பகுத்தறிவா? ‘சூத்திர’ அறிவா?

-இன்று பிற்பகல்  face book ல் எழுதியது.

*

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன், தீவிரமான இந்துக் கடவுள்களின் பக்தராக இருந்தார். பார்ப்பன கோயிலுக்கு சென்று வழிபாடு செய்தார். தன் திருமணத்தையே இந்துக் கோயிலில்தான் நடத்தினார்.

போராளிக்களுக்கான தலைவரே இந்து நம்பிக்கையோடு இருக்கலாம். அவரின் இந்து நம்பிக்கையை எந்தக் கேள்வியும் இல்லாமல், பகுத்தறிவாளர்கள் உட்பட ஒட்டு மொத்தமான தமிழர்களுக்கும் தலைவராக அவரை  ஏற்றுக் கொள்ள முடியும்.

ஆனால் தனி வாழ்க்கையில் எந்த முற்போக்கு அம்சமும் இல்லாத,ஒரு இசைக் கலைஞர், சினிமாக்காரர் இளையராஜா; இந்து மற்றும் பார்ப்பனக் கடவுள்களின் தீவிர பக்திமானாக இருந்தும்; தன் மகனின் இஸ்லாமிய மத மாற்றத்தை ஆதரித்திருக்கிறார்.

ஆனாலும் பிரபாகரன் போனற போராளிகளிடமே, இந்து எதிர்ப்புணர்வை எதிர்பார்க்காமல் தலைவராக கொண்டாடுபவர்கள்,

இளையராஜாவை போன்ற சினிமாகாரரிடம் இந்து எதிர்ப்புணர்வை எதிர்பார்த்து அவரை இழிவானவராக விமர்சிப்பது,
தமிழ் உணர்வா? ‘சூத்திர’ உணர்வா?

Tnfishermen Voices: தோழர் தேசிய தலைவர் அவர்கள் ஈழத்தில் பிறந்தவர் பெரியாரிய கருத்துகள் அந்த வயதில் அவரிடம் போய் சேர்ந்திருக்க வாய்ப்பு இல்லை.

வே மதிமாறன்: ஆமாம். அவரை பற்றியல்ல, இந்தக் கேள்வி. கடவுள் மறுப்பு, இந்து மத எதிர்ப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து அரசியல் பேசுகிறவர்கள் குறித்துதான்.

பெரியாரை தவிர்த்துவிட்டு, வெறும் விடுதலைப்புலிகள் ஆதரவு என்று மட்டுமே அரசியல் நடத்துகிறவர்கள் இந்து மத ஆதரவாளர்கள் மட்டுமல்ல; மோடி, பால்தாக்ரே போன்ற பயங்கரவாதிகளின் ஆதரவாளர்கள் என்பதையும கவனித்தில் கொள்ள வேண்டும்.

அதனால்தான் வைகோ போன்றவர்களால் நேரடியாக மோடியை ஆதரிக்க முடிகிறது. அது தன் செல்வாக்குக்கு எதிரானதல்ல என்று அவரால் உறுதியாக நம்பமுடிகிறது.

தீவிர விடுதலைப் புலிகள் ஆதரவு நிலை கொண்ட, பெரியார் இயக்கங்களும் அதன் காரணத்தினாலேயே வைகோ பற்றிய விமர்சனங்களைகூட செய்ய மறுக்கிறது.

இன்று மதியம்  face book ல் எழுதியது.

தொடர்புடையவை:

பெரியாரை அவதூறுகளிலிருந்து காப்பாற்ற.. பணத்துக்கு என்ன பண்றது?

பெரியாரை கேவலமாக பேசியவன், பிரபாகரனை பேசியிருந்தால் நடக்கிறத வேற..

இசை விமர்சனங்களுக்குப் பின்னான அரசியல்

Exit mobile version