Site icon வே. மதிமாறன்

‘மோடி பிரதமரானால் தனி ஈழ அமையும்’

a-supporter-holds-up-a-mask-of-modi-during
வேறு வழியே இல்லை; இவர் ஒருவர்தான் இந்தியாவிற்கு மட்டுமல்ல, இலங்கைக்கும் தீர்வு.
*

ஈழத் தமிழர்களின் படுகொலைகள் பெரிய அளவில் தொடங்கிய கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது, வைகோ உட்பட இதே ஈழ ஆதரவாளர்கள் அதிமுகவுடன் கூட்டணி வைத்து, அதன் தலைவர் ஜெயலலிதாவை, ‘அதிமுக வெற்றிபெற்றால், தனி ஈழம் அமையும்’ என்று பேச வைத்தார்கள்.
ஆனாலும் அந்தத் தேர்தலில் அதிமுக படுதோல்லி அடைந்தது.

அதிமுகவை வைகோ, நெடுமாறன் போன்ற ஈழ ஆதரவாளர்கள் ஆதரிப்பதற்கான ஒரு காரணமாக மட்டுமே ஜெயலலிதாவின் அந்த அறிவிப்பு இருந்தது என்ற உண்மை பின்னாட்களில் அவர்கள் நடத்திய அரசியலில் அம்பலமானது.

அதுபோல், இந்த தேர்தலில், ‘பா.ஜ.க வெற்றி பெற்றால், தனி ஈழம் அமைப்போம்’ என்று மோடியை பேச வைக்கலாம் வைகோ.
ஏனென்றால் அவருக்கு ஏற்பட்டிருக்கிற நெருக்கடியை தனக்கான ஆதரவாக மாற்ற, தன்னை நியாயப்படுத்திக் கொள்ள, மோடிக்கு ஆதரவாக ஓட்டு கேட்க, ஈழ ஆதரவாளர்களை மோடிக்கு ஆதரவாக தன்னுடன் இணைத்துக் கொள்ள வைகோவிற்கு இதைத் தவிர வேறு வழியில்லை.

பொய்தானே… அதுதான் மோடிக்கு நல்லா வருமே..

விரைவில் எதிர்பார்க்கலாம், தமிழ் நாட்டுக்கும் இளிச்சவாய் தமிழனுக்கென்றும் தனியாக தயாரிக்கப்பட்ட, விசேசமான வாக்குறுதி
‘மோடி பிரதமரானால் தனி ஈழ அமையும்’

அப்புறம் என்ன அரசியல் ‘தெளிவு’ள்ள நாமளும் மோடியை ஆதரிக்க வேண்டியதுதான்.
ஆனால், அரசியல் தெளிவு ‘இல்லாத’ தமிழ் மக்கள் ஆதரிக்க மாட்டார்கள்.

*

பிப்ரவரி 13 அன்று face book ல் எழுதியது.

தொடர்புடையவை:

முள்ளிவாய்க்கால் முற்றம் இடிப்பு: வைகோவின் சீற்றம்!

பாரதிராஜாவை எதிர்த்த வைகோ ஏன்…? அல்லது ஒண்ணுமே புரியல.. உலகத்துல..

தமிழருவி மணியனுக்கு M.P. சீட்டு: இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா?

இந்திய ராஜபக்சே! வருங்கால பிரதமரா தமிழினக் காவலரா?

Exit mobile version